
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் சில இந்தியர்கள்,
விநாயக சதுர்த்தியின்போது –
தங்கள் வழக்கம் போல் விநாயகரை ஊர்வலமாக
எடுத்துச் செல்ல முன்வந்திருக்கிறார்கள்…
அந்த ஊர்வலம் செல்லும் வழியில் ஒரு சர்ச் இருக்கிறது.
அந்த ஆண்டு (2017) ஊர்வலம் செல்கின்ற நேரத்தில்
சர்ச்சில் பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறவிருந்திருக்கிறது.
ஊர்வலத்தின் அமைப்பாளர்கள், சர்ச் நிர்வாகிகளிடம்,
நாங்கள் இந்த வழியே ஊர்வலம் செல்வது உங்களுக்கு
அசௌகரியமாக இருக்குமா…? என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு, அந்த சர்ச்சின் நிர்வாகிகள் சொன்னது –
” நீங்கள் தாராளமாக ஊர்வலம் போகலாம். இந்த சர்ச்சின்
வாசலை கடக்கும் சமயத்தில் உங்கள் விநாயகரை
சில நிமிடங்கள், சர்ச்சின் உள்ளே அழைத்து வாருங்கள்…
இரு கடவுள்களும் சந்தித்து வாழ்த்துக் கூறிக்கொள்ள
அது உதவும்…” –
மதங்கள் எத்தனை இருந்தாலென்ன …?
இதயங்கள் விசாலமாக இருந்தால் போதுமே…!!!