
” இல்லை இல்லை -இல்லவே இல்லை-“
- என்று சொல்வது மிக மிகச் சுலபம்…
அதைச் சொல்பவர் பெரிய’வராகவும் இருக்கலாம்,
சிறியவராகவும் இருக்கலாம்…
ஆனால் இருக்கிறது என்று சொல்ல …. ?
புரிய வைக்க….?
கவிஞர் கண்ணதாசன் 60 ஆண்டுகளுக்கு
முன்னர் எளிய தமிழில் சொன்னது –
……………………..
பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்
தென்னை இளநீருக்குள்ளே –
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் – அவனை
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்
முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் – அவனை
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து-
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
- அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்
…………………
விளங்கிக்கொள்ள, புரிந்துகொள்ள
விருப்பம் உள்ளவர்கள் கீழே பதிந்துள்ள
சொற்பொழிவை கேட்கலாம்…
நான் பல வருடங்களாக இந்த தளத்தில் வலியுறுத்தி வந்த
ஒரு கருத்துக்கு சுகி சிவம் அவர்கள் மிகுந்த வலிவை
தன் உரையின் மூலம் உண்டாக்கி இருக்கிறார்.
என்ன சொல்லி அழைத்தால் என்ன….?
எப்படி வணங்கினால் என்ன…?
எல்லாமே – அவர் ஒருவர் தானே….?
எல்லாருக்குமே – அவர் ஒருவர் தானே…?
பின் ஏன் சில “மதம்” பிடித்தவர்களிடம்
வெறித்தனமான பேச்சும், செயலும்…?
சுகி சிவம் அவர்களின் அற்புதமான உரையொன்று…
சில பகுதிகளாக வெளிவருகிறது…
இன்று 3 பகுதிகள்….
கருத்துகளை அசை போடவும் ஜீரணிக்கவும் –
கொஞ்சம் இடைவெளி விட்டு –
மீண்டும் தொடரும்….