

3 ஆண்டுகளுக்கு முன்னர் –
நான் நேபாளம் – காட்மண்டு -சென்றபோது,
” இமயமலை மீது ஹெலிகாப்டர் டூர்” –
பற்றி அறிந்தேன்….
போய் – பறந்து-வர ஆசை தான்…
ஆனால் இரண்டு தடைகள் –
ஒன்று – ஏற்கெனவே திட்டமிட்டிருக்க வேண்டும்…
ரிசர்வேஷன் செய்திருக்க வேண்டும்…
இரண்டு – செலவு அதிகம்….
சரி – நமக்கு வீடியோவில் பார்க்க தான்
கொடுத்து வைத்திருக்கிறது என்று நினைத்து
அப்போதைக்கு சமாதானப்படுத்திக் கொண்டேன்…
ஆனால் – பின்னர் மறந்தே போனேன்…
இப்போது திடீரென்று நினைவு வந்தது; உடனே
பார்க்க முயற்சித்தேன்…
நீங்கள் உடன் இல்லாமலா….!!!
பார்ப்போமா….?
முக்திநாத்திற்கு, பொகாராவிலிருந்து ஹெலிகாப்டரில் சென்றோம் (இப்போ அப்படிக் கிடையாது. ஸொம்ஸொம் லயே நிறுத்திடுவாங்க, அங்கிருந்து குதிரைல அல்லது நடந்துதான் செல்லணும்). கொஞ்சம் பயமுறுத்திய பயணம், தொட்டுவிடும் தூரத்தில் பனி மலைகள் (சில இடங்களில் 100 மீட்டருக்கும் குறைவு என்று தோன்றியது). காது வலி மட்டுமல்ல, ஹெலிகாப்டரே சில சமயங்களில் ஆடியது. ஹெலிகாப்டர் பிரயாணம், விமானத்தைவிட ஆபத்தானது, அதிலும் பனிமலைப் பகுதிகளில் என்று தோன்றுகிறது.
படங்கள் பல எடுத்தேன் (2008ல்).