பெருமைக்கு …………….. எருமை மேய்ப்பது யார் …………….?

…………………………………………………………………………………………………………………………………………………………………………..

.

இன்றைக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.அவர்களின்
150-வது பிறந்த நாள்…

அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான்
அவர்களின் சுவாரஸ்யமான பேச்சிலிருந்து கொஞ்சம் கீழே –

………………………………………….

100 கோடியில் பெரியாருக்கு சிலை ஏன்?
பெருமைக்கு எருமை மேய்ப்பதைப் போல,
அதிகாரத் திமிர்- சீமான் சாடல் Published: Sunday, September 5, 2021,

………………

சென்னை: பெரியார் ஈ.வே.ராவுக்கு ரூ100 கோடியில் சிலை
அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக
சாடியுள்ளார். மேலும் பெரியார் உயிரோடு இருந்திருந்தால்
தன் கைத்தடியாலேயே இந்த அறிவிப்பை அறிவித்தவர்களை
விரட்டியடித்திருப்பார் என்றும் சீமான் கூறினார்.

சென்னையில் வ.உ.சி..150வது பிறந்த நாளை முன்னிட்டு
நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தலைமையில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாக சாவது
மேலானது என்பதற்காக போராடியவர் வ.உ.சிதம்பரனார்.
நாட்டின் மிக மிக முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர்
வ.உ.சிதம்பரனார். மாடு கூட இழுக்க திணறுகிற செக்கை மண்ணின் விடுதலைக்காக இழுத்தவர் வ.உ.சி.

மண்ணின், மக்களின் மானம் கப்பலேறக் கூடாது
என்பதற்காக சொத்துகளை விற்று கப்பல் வாங்கி ஓட்டியவர் வ.உ.சி. அவர் செய்த தியாகங்களுக்கு இணையானது
எதுவும் இல்லை. அந்த பெருந்தலைவன் பிள்ளைகள்
அனுபவிக்க முடியாத பதவிகளை இன்று யார் யாரோ அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

டாஸ்மாக் மதுபான கடைகளை எப்போதுதான் மூடுவார்களோ?
அதையும் பற்றி பேசித்தானே ஆகவேண்டும். ஆனால்
பேசமாட்டார்கள். மதுபான கடைகளை மூடலையே?

தமிழகத்தில் கள்ளு கடைகளை திறக்காமல் இருப்பது ஏன்? ஆந்திராவிலும்கேரளாவிலும் திறந்திருக்கிறார்களே..?

இங்கே கள்ளு கடைகள் திறந்தால் மதுபான தயாரிப்பு
ஆலைகள் முதலாளிகள் பாதிக்கப்படுவர்கள். இங்கு முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையே. சாராய
அதிபர்கள் தானே தேர்ந்தெடுக்கிறார்கள்….?

பெரியாருக்கு ரூ100 கோடி மதிப்பில் 135 அடி உயரத்தில்
சிலை அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.
பெரியார் பொதுமக்களிடம் நிதி சேகரித்து பள்ளி,
கல்லூரிகளை உருவாக்கினார். இன்று அவை யாரிடம்
இருக்கிறது உங்களுக்கு தெரியும்.

மக்களின் வறுமையை போக்க பாடுபட்ட சீர்திருத்தவாதி
பெரியாருக்கு ரூ100 கோடியில் எதற்கு சிலை? பெரியாருக்கு தமிழகத்தில்அளாவுக்கு அதிகமாகவே
சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.கிராமங்களில் சொல்வார்களே..
பெருமைக்கு எருமை மேய்ப்பது போலத்தான் இருக்கு.
இதுக்கு பேரு பணக்கொழுப்பு. அதிகாரத் திமிர்.

இதனை ஐயா பெரியார் இருந்தால் விரும்புவாரா?
என கேட்க விரும்புகிறேன். பெரியார் தன் கைத்தடியாலேயே விரட்டி விரட்டி அடித்திருப்பார்.
இதையெல்லாம் பேசினால் ஆ… திராவிடத்துக்கு எதிராக
பேசுகிறார்கள்.. திராவிடம் என்றால் எரிகிறது என்பார்கள்.. திராவிடம் என்றால் எரியத்தான் செய்யும்.. வேறு என்ன செய்யும்..?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.