சுடச்சுட திமுக வம்புகளும், லஞ்சக் கதைகளும் – உபயம் ….???

வம்பு 1 –

“பெரிய அறைதான் வேண்டும்!’’
அடம்பிடிக்கும் பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன்,
தலைமைச் செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை
போதுமானதாக இல்லை என்று பொதுத்துறையிடம்
முறையிட்டிருக்கிறார். இப்போதுள்ள அறையைவிட
பெரிய அறையை நிர்வாக வசதிக்காகக் கேட்பவர்,
நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் அறைக்கு அருகே
அறையை எதிர்பார்க்கிறாராம்.

அதைத் தர வேண்டுமானால், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின்
அறைகளை காலிசெய்து, விரிவாக்கம் செய்ய வேண்டுமாம்.
`அதைச் செய்தாலும் பரவாயில்லை. எனக்குப்
பெரிய அறையைத் தாருங்கள்’ என்பது
நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு. இதெல்லாம் சரிப்பட்டு வருமா
என்று குழம்பி போயிருக்கும் தலைமைச் செயலக
உயரதிகாரிகள், முதல்வர் அலுவலகத்துக்கு விஷயத்தைக் கொண்டுபோயிருக்கிறார்கள்.

………………………..
வம்பு-2 –

மாமூல் பிரமுகருக்கு உதவுகிறாரா திமுக புள்ளி?

சென்னை கருணாநிதி நகர், தெற்கு வட்ட தி.மு.க செயலாளர்
பி.எஸ்.முருகேசனின் சகோதரர் பி.எஸ்.கோவிந்தராஜ்,
தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் ஆற்காடு ரோட்டிலுள்ள
ஹோட்டலுக்குச் சென்று 2,200 ரூபாய்க்கு டிபன்,
நான்வெஜ் அயிட்டங்களை வாங்கியிருக்கிறார்.
ஹோட்டல் உரிமையாளர் பணம் கேட்டதற்கு,
“என்கிட்டயே பணம் கேக்குறியா?” என்று
கடை உரிமையாளர் ராமுவை அடித்துத் துவைத்துவிட்டு
எஸ்கேப் ஆகிவிட்டார்.

இந்த விவகாரத்தில் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவாகி
கைது செய்யப்பட்டவர், தற்போது ஜாமீனிலும் வெளியே
வந்துவிட்டார். “தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர்
க.தனசேகரனின் ஆதரவு இருப்பதால்தான் கோவிந்தராஜ்
இப்படி அடாவடியாகச் செயல்படுகிறார்’’ என்று
தலைமைக்கு ஒரு குரூப் மெசேஜ் அனுப்பியிருக்கிறது.

…………………………..
வம்பு-3

“தனசேகரன் பெயரைப் பயன்படுத்தி, பிளாட்பாரக்
கடைகளில் கோவிந்தராஜ் மாமூல் வசூலிக்கிறார்.
பலமுறை புகாரளித்தும் தனசேகரன் உதவியுடன்
தப்பித்துவருகிறார்’’ என்று புலம்புகிறார்கள்
வணிகர்கள்….

…………………………..
வம்பு-4

“கையில காசு… ரோட்டுல பஸ்ஸு…’’
ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அடாவடி!

தமிழகத்தில் ஆம்னி பஸ்களுக்கு பர்மிட் புதுப்பிக்கும்
உரிமையாளர்களிடம், `பர்மிட் கட்டணத்துடன்,
ஏற்கெனவே போன ஆட்சியில கொடுத்த மாதிரி (…!!!!)
ரெண்டு லட்ச ரூபாயையும் சேர்த்துக் கொடுங்க’
என்று அதிகாரிகள் கேட்கிறார்கள்.

கொரோனாவால ரெண்டு வருஷமா பஸ் ஓடாம இருந்து,

இப்போதான் ஓட ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ள பணம் கேட்டா எப்படி? ஒரு ஆறு மாசம் போகட்டும்’ என்று ஆம்னி பஸ் முதலாளிகள் புலம்பியும், அதிகாரிகள் தரப்பு கண்டுகொள்ளவில்லையாம். கையிலகாசு…
ரோட்டுல பஸ்ஸு…’ என்று அதிகாரிகள் அடம்பிடிப்பதால்,
“கடந்த ஆட்சியைப்போல இருக்காது என்று
முதல்வர் சொன்னதெல்லாம் பொய்யா?” என்று
புலம்புகிறார்கள் ஆம்னி பஸ் முதலாளிகள்.

…………………………………………………………………
வம்பு-5

கமிஷனில் `கறார்’ காட்டும் அமைச்சர்கள்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநிலம் முழுவதும்
கட்டடம் கட்டும் பணிகளில் ஒப்பந்ததாரர்களிடம்
ஆளுங்கட்சி நிர்வாகிகள் 13 சதவிகித கமிஷன் பெற்றுவந்த
நிலையில் (……!!!! ) தற்போதைய தி.மு.க ஆட்சியில்
16 சதவிகிதம் கேட்பதாகப் புலம்பல்கள் எழுந்துள்ளன.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே இது
தொடர்பான பஞ்சாயத்து தொடரும் நிலையில்,
சமீபத்தில் முக்கிய ஒப்பந்தாரர்கள் சிலர், மூத்த இனிஷியல்
அமைச்சர்கள் இருவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
ஆனாலும், அமைச்சர்கள் இருவரும் கமிஷன் விஷயத்தில்
கறார் காட்டியிருக்கிறார்கள்.

“நாங்க என்ன எங்களுக்கா கேட்குறோம்… மேல கேட்கச்
சொல்றாங்க, கேட்குறோம்’’ என்று சொல்கிறார்களாம்.

தலைவரோ பணிகள் தரமாக இருக்க வேண்டும்’
என்கிறார். ஆனால் அமைச்சர்களோ, கமிஷனில் `கறார்’
காட்டுகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம்?’’ என்று
புலம்புகிறார்கள் ஒப்பந்ததாரர்கள்….

……………………………………………………..…………
வம்பு-6

புதுக்கோட்டை பிரதிநிதி உத்தரவு…
ஜார்ஜ் கோட்டைக்குச் சென்ற புகார்!

திருத்துறைப்பூண்டியிலுள்ள பிறவி மருந்தீஸ்வரர்
கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உணவகமும்,
ஃபர்னிச்சர் கடையும் செயல்பட்டுவருகின்றன.
கடைகளின் உரிமையாளர் நீண்டகாலமாகவே
வாடகை கொடுக்காததால், நீதிமன்றத்தில் ஆணை பெற்று,
கடைகளை காலி செய்வதற்கான
ஏற்பாடுகளில் முனைப்பு காட்டினார்கள்.

ஆனால், இடையில் என்ன நடந்ததோ… வெளியேற்ற
உத்தரவைத் தற்காலிகமாக அதிகாரிகள் நிறுத்தி
வைத்திருக்கிறார்கள். கேட்டால், புதுக்கோட்டை பிரதிநிதியின்
உத்தரவு என்கிறார்கள் அதிகாரிகள்.

(தகவல்கள் உபயம் – ஜூ.வி.)

.
………………………………………………………………………………………………………………………………….………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சுடச்சுட திமுக வம்புகளும், லஞ்சக் கதைகளும் – உபயம் ….???

  1. Selvadurai Muthukani சொல்கிறார்:

    ஏற்கனவே “வெள்ளை அறிக்கை” பற்றிய தங்களின் பதிவிற்கு நான் எழுதிய பின்னூட்டம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ““தேர்தலுக்கு உங்களால் எவ்வளவு பணம் செலவிடமுடியும்?” என்ற கேள்வியின் அடிப்படையிலேயே போட்டியிட வாய்ப்புப் பெற்றவர்கள் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே முன்னெடுப்பார்கள். மக்கள் நலம் என்பது கிஞ்சித்தும் கருதப்பட வாய்ப்பில்லை.” எனவே வம்புகள் தொடரும் என்றே நான் எண்ணுகிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.