
உலக சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்கள், முதலாம்
உலகப்போர் பற்றி விரிவாகப் படித்தவர்கள்
Mata Hari (Margaretha Geertruida Zelle)-யைப்
பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள்.
டச்சு குடிமகளாகப் பிறந்து, பின்னர் ஃப்ரான்சுக்கு குடியேறிய
அழகிய, கவர்ச்சிகரமான, நடனப் பெண்மணி….
அவர்காலத்திய, மிக உயர்ந்த, செல்வாக்குடைய
விலைமகளாக வலம் வந்தாரென்று அவரைப்பற்றிய
சரித்திரம் சொல்கிறது…. பல ஃப்ரென்சு செல்வந்தர்களும்,
அரசு மற்றும் ராணுவத்தின் உயர் அதிகாரிகளும்
அவரது வாடிக்கையாளர்கள் என்றும் அவரைப்பற்றிய
கதைகள் சொல்கின்றன.
ஜெர்மன் நாட்டின் ஒற்றராக அவர் செயல்பட்டார் என்றும்
பிரிட்டிஷ், ஃப்ரென்சு ராணுவ ரகசியங்களை அவர்
ஜெர்மனிக்கு அவ்வப்போது தெரிவித்து வந்ததாகவும் –
அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு,
1917-ல் ஃப்ரென்சு ராணுவத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்டு
firing squad – ஆல் 1917-ல் சுட்டுக்கொல்லப்பட்டார்…..
மிக நுணுக்கமான செயல்பட்டால்,
பழைய கருப்பு-வெள்ளை படங்களை –
மாற்றப்பட்டது என்கிற உணர்வே
பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் கூட தோன்றாதபடி -mata hari
மற்றும் இன்னும் 9 புகைப்படங்களை வண்ணத்தில் மாற்றிக்
காட்டி இருக்கிறார்கள் இங்கே…..