


அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம்
“மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி”
என்று ஒரு ஆராய்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்னர்,
(1938-ல் அமெரிக்க மக்கள் ஒரு மிகப்பெரிய பொருளாதார
வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்த சமயம்) துவங்கி,
இன்று வரை தொடர்ந்து வருகிறது…. எதிர்காலத்திலும்
இந்த ஆராய்ச்சியைத் தொடர ஒரு நிபுணர் குழுவையும்
அமைத்திருக்கிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியில் முக்கிய
பங்கு வகிப்பவரும், இப்போதும் இதற்காகவே
” Positive Psychology class ” என்கிற
தலைப்பில் வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருபவருமான
“பென் ஷஹர்” (Ben Shahar ) –
மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும்,
பெற்ற மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ளவும் சுருக்கமாக
சில யோசனைகளை சொல்லி இருக்கிறார்….
இது பற்றிய செய்தி கொஞ்சம் பெரியதாக இருப்பதால்,
சுருக்கமாக ஆங்கிலத்தில் கீழே தந்திருக்கிறேன்…
அதற்கு முன் தமிழில் – இன்னும் கொஞ்சம் சுருக்கமாக –
( இதெல்லாம் நமக்குத் தெரியாத புதிய விஷயங்களா..?
என்று சிலர் நினைக்கலாம்… உண்மை தான்…
இதில் பெரும்பாலான கருத்துகள் நமக்கு தெரிந்தவை
தான்….ஆனால் –
நம்மில் பெரும்பாலானோர் அவற்றை பொருட்படுத்துவதில்லை;
காரணம் – அவற்றின் மதிப்பை,
அவசியத்தை நாம் உணர்வதில்லை…
புகழ்பெற்ற ஹார்வர்டு யுனிவர்சிடி, வேலை மெனக்கெட்டு,
80 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ள கருத்துகள்
என்றால், அவற்றிற்கான முக்கியத்துவம் அதிகரிக்கிறது
அல்லவா…? புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக
சொல்லும் கருத்துகள் என்கிற அடிப்படையில், நாம் அவற்றின்
முக்கியத்தை உணர்வோம் அல்லவா…? அது தான் நான் இந்த
இடுகையை எழுத முக்கிய காரணம்…)
இப்போது நீ பெற்றுள்ள நல்ல விஷயங்களுக்காக
எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இரு.
மனதை எப்போதும் நேர்மறையாகவே வைத்துக்கொள்.
உன்னைச் சுற்றிலும், நல்ல விஷயங்களை நினைவுபடுத்தும்
பொருட்களையே வைத்திரு.
உடற்பயிற்சி போலவே, உணவுப் பயிற்சியும் முக்கியம்…
காலை உணவை தவிர்க்கவே கூடாது….
எப்போதும் தன்னம்பிக்கையுடன் இரு…பேசு…
சுற்றுலா எப்போதும் மகிழ்ச்சியைத் தரும்,
அனுபவங்களைத் தரும் …. எனவே,
அந்த அனுபவங்களை பெறுவதற்காக
பணத்தை செலவழிக்க தயங்காதே…
பிரச்சினைகளை, சவால்களை சந்திப்பதை
எப்போதும் தள்ளிப்போடாதே… எதையும் ஒத்திப்போடுவது,
கவலைகளை அதிகரிக்கவே செய்யும்….
மனதை எப்போதும் நல்ல நினைவுகளால் நிரப்பி வை….
மற்றவர்களுடன் இனிமையாகப் பழகு.
புன்னகை புரிவதில் கஞ்சத்தனம் வேண்டாம்…
வீட்டில் உள்ளவர்களுக்கும், உறவுகளுக்கும்,
நல்ல நண்பர்களுக்கும் முக்கியத்துவம் கொடு.
இறுதி வரை உன் சந்தோஷத்தை
உறுதி செய்யப்ப்போகிறவர்கள் அவர்கள் தானே தவிர,
நீ சம்பாதிக்கும் பணம் அல்ல…!!!
மற்றவருக்கு வணக்கம் சொல்வதில் முந்திக்கொள்….
சரியான காலணியை அணிவது மிக முக்கியம்…
இல்லையேல் எரிச்சல்களுடனேயே பணி தொடரும்…
நல்ல இசையை ரசிக்க கற்றுக்கொள்…
இசை மனதை லேசாக்கும்… கவலைகளை போக்கும்…
நகைச்சுவையுடன் உரையாட பழகிக்கொள்…
முக்கியமாக கடவுளை நம்பு.
அவர் துணை இருந்தால்,
எதுவும் சாத்தியமே என்று உறுதியுடன் நம்பு.
சந்தோஷம் என்பது உனக்குள்ளேயே தான்
இருக்கிறது… அதை வெளியே கொண்டு வரும்
வேலையைத்தான் நீ தொடர்ந்து செய்துகொண்டே
இருக்க வேண்டும்….
கீழே – ஆங்கிலத்தில் செய்தி –
…………………………………………
Did you know that at Harvard,
one of the most prestigious universities
in the world, the most popular and
successful course teaches you how to
learn to be happier?
The Positive Psychology class taught by
Ben Shahar attracts 1400 students per
semester and 20% of Harvard graduates
take this elective course.
According to Ben Shahar, the class –
which focuses on happiness, self-esteem
and motivation – gives students the
tools to succeed and face life with
more joy._This 45-year-old teacher,
considered by some to be
“the happiness guru”,
highlights in his class 14 key tips
for improving the quality of our
personal status and contributing
to a positive life:
Tip 1 – Thank God for everything you have:
Write down 10 things you have in your
life that give you happiness. Focus on
the good things!
Tip 2 – Practice physical activity:
Experts say exercising helps improve mood.
30 minutes of exercise is the best
antidote against sadness and stress.
Tip 3 -Breakfast: Some people miss
breakfast for lack of time or not to
get fat. Studies show that breakfast
gives you energy, helps you think and
perform your activities successfully.
Tip 4 – Assertive: Ask what you want
and say what you think. Being assertive
helps improve your self-esteem.
Being left and remaining silent creates
sadness and hopelessness.
Tip 5 – Spend your money on experiences:
A study found that 75% of people felt
happier when they invested their money
in travel, courses and classes;
While only the rest said they
felt happier when buying things.
Tip 6 – Face your challenges:
Studies show that the more you postpone
something, the more anxiety and tension
you generate. Write short weekly lists
of tasks and complete them.
Tip 7 – Put everywhere nice memories,
phrases and photos of your loved ones:
Fill your fridge, your computer,
your desk, your room, YOUR LIFE of
beautiful memories.
Tip 8 – Always greet and be nice to
other people: More than 100 inquiries
state that just smiling changes the
mood.
Tip 9 – Wear comfortable shoes:
If your feet hurt you, you become moody,
says Dr. Keinth Wapner, President of
the American Orthopedics Association.
Tip 10 – Take care of your posture:
Walk straight with your shoulders
slightly backwards and the front view
helps to maintain a good mood.
Tip 11 – Listen to music (Praise God):
It is proven that listening to music
awakens you to sing, this will make
your life happy.
Tip 12 – What you eat has an impact on
your mood:- Do not skip meals, eat
lightly every 3 to 4 hours and keep
glucose levels stable.-
Avoid excess white flour and sugar.
- Eat everything! Healthy-
Vary your food.
Tip 13 -Take care of yourself and
feel attractive:70% of people say
they feel happier when they think
they look good.
Tip 14 – Fervently believe in God:
With him nothing is impossible!
Tip 15 – Develop a good sense of humour.
Learn to laugh off matters, specially
when things don’t go right for you.
Happiness is like a remote control,
we lose it every time, we go crazy
looking for it and many times
without knowing it,
we are sitting on top of it …
.
……………………………………………………………………………………………………………………………..