எல்லாத்துக்குமே பிக்சட் ரேட் – 10 % -திமுக பற்றி – “நக்கீரன்” சொன்னால்பொய்யாகவா இருக்கும்…..?

திமுக ஆதரவு செய்தித்தளமான “நக்கீரன்”
செய்திக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே –


( இந்த இடுகையில், தலைப்பைத் தவிர,
வேறு ஒரு எழுத்துக்கூட என்னுடையதில்லை….!!!
அத்தனையும் நக்கீரன் தளத்திலிருந்து….)
……………………………………

தி.மு.க. ஆட்சியை சொந்தக் கட்சிக்காரர்கள்
எப்படி பார்க்கிறார்கள்?

“10 வருஷம் ஆட்சியில் இல்லை, எதிர்க்கட்சியாக
பல போராட்டங்கள் நடத்தியது தலைமை. 2014 நாடாளுமன்றம்,
2016 சட்டமன்றம், 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில்
செலவுகள் செய்தோம், கட்சி கரைந்து போகாமல் தொண்டர்களைஊக்கப்படுத்திக்கொண்டேயிருந்தோம். தேர்தல் களத்தில்
கடுமையா உழைச்சோம். செலவு செய்தோம். வெற்றி பெற்ற பிறகு,

வெற்றிவிழாவோ நன்றி அறிவிப்பு கூட்டமோ நடத்த முடியலை.
தலைவரை சந்திக்கும் வாய்ப்பும் அமையலை. தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடைவெளி விழுந்திருக்கு”
என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

“புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு மா.செ.வாக இருப்பவர்
அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர்
கே.கே. செல்லப்பாண்டியன். ஆலங்குடி எம்.எல்.ஏ.வான
அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்து ராஜா இப்படி நான்கு அணிகள் செயல்படுது.

புதுக்கோட்டை நகரத்தில் எந்த பணியாக இருந்தாலும் என்னைக்
கேட்காம அதிகாரிகள் செய்யக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார் எம்.எல்.ஏ.

இரண்டு வாரத்துக்கு முன்பு நகர நிர்வாகி வீரமணி, டெண்டர் படிவம் கேட்டப்ப,எம்.எல்.ஏ. சொன்னால்தான்
தருவோம்ன்னு சொல்ல, அவர் நகராட்சி அலுவலகத்தில்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் தரப்பிலும் அமைச்சர்களைவிட எம்.எல்.ஏ. தரப்புதான்
செல்வாக்கு காட்டுது.

கட்சிக்காரங்க எந்தப் பிரச்சனையையும் இந்த 4 பேரில் யாருகிட்ட
கொண்டு போனாலும் மற்றவர்கள் எங்களை விரோதியா
பார்க்கறாங்க. இதுபற்றி கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு போக நினைக்கிறோம். வாய்ப்பே அமையலை”
என்கிறார்கள் புதுக்கோட்டை நிர்வாகிகள்.

தி.மு.க. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகியும்,
மூத்த வழக்கறிஞருமானவர் நம்மிடம், “வழக்கறிஞர்களின்
சீனியாரிட்டி, உழைப்பு போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளாமல்,

மாவட்ட அரசு வழக்கறிஞருக்கு – (பி.பி)
சிபாரிசு செய்ய 10 லட்சம்,
கவர்மென்ட் ப்ளீடருக்கு (ஜி.பி) 5 லட்சம்,

அடிஷனல் பி.பி, ஜீ.பிக்கு – 5 முதல் 3 லட்சம்வரை கேட்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் பி.பிக்கு – 25 லட்சம்,
ஜீ.பிக்கு – 15 லட்சம் வரை கேட்கறாங்க,
அமைச்சர்கள் – மா.செ.க்கள்னு டீல் பேசுறாங்க.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், திமுக நிர்வாகிகள்,
தொண்டர்கள் மீது போடப்பட்ட பல வழக்குகளில் ஆஜராகி
வாதாடியது, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள்
மீது போடப்பட்ட வழக்குகளில் ஆஜரானது, தேர்தல் வழக்குகளில் ஆஜரானது,

இதெற்கெல்லாம் கட்சி வக்கீல்கள்
ஃபீஸ்கூட வாங்கவில்லை. அப்படி உழைத்தவர்களுக்குப்
பதவி கொடுங்கன்னு கேட்டால், டீல் பேசுனா எப்படி?

நம்மிடம் பேசிய திமுகவின் முக்கிய நிர்வாகியொருவர்,
“எங்க மாவட்டத்தில் ஒரு காண்ட்ராக்ட்டுக்கான டெண்டர்
படிவம் வாங்கப் போனேன்.

தகவல் தெரிந்து சம்பந்தபட்ட
துறையோட அமைச்சரின் பி.ஏ. என்னோட லைன்ல
வந்து – 10% பேசினார்.

சின்ன வேலைதானே என்றால், எல்லாத்துக்கும்
ஃபிக்சட் ரேட் என்கிறார்.


கட்சியைப் பலமா வளர்த்து வச்சிருக்கிற சீனியர் ஒன்றிய
நிர்வாகியான எங்கிட்ட இப்படி சொல்றீங்களேன்னு கேட்டதுக்கு,
எதுக்கு டெண்டர் எடுக்கறிங்க, கட்சி வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதானேன்னு கேட்டார்.

வந்த கோபத்தை அடக்கிக்கிட்டேன். அந்த டெண்டரில் வேற
சிலரையும் கலந்துக்குங்கன்னு அமைச்சர் தரப்பே சொல்லியிருக்கு.
அவுங்கள பின்வாங்க வைக்க 3 லட்ச ரூபாய் செலவாச்சி. இது என்ன நியாயம்?

அதிமுக ஆட்சியில யாருக்கு டெண்டர்ங்கறதை அமைச்சர்
முடிவுசெய்து, அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிடுவார்.
அதுக்கப்பறம் எத்தனை பேர் கேட்டாலும் சம்பந்தபட்டவங்களுக்கே
தரப்படும். அமைச்சர், அதிகாரிகளுக்கான கமிஷனோட முடிஞ்சிடும்.

இப்போ கட்சிக்காரன் டெண்டர் போட்டான்னா அவனுக்கு எதிரான ஒப்பந்தக்காரங்களைத் தூண்டிவிடறாங்க. கட்சிக்காரனைவிட

காண்ட்ராக்டர்களுக்குத்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்
எல்லாரும் முக்கியத்துவம் தர்றாங்க. 10 வருஷம் கஷ்டப்பட்டு,
போராட்டம் நடத்தி, சிறை சென்று, தேர்தல் வேலை பார்த்து,
பூத்துல உட்கார்ந்து சண்டை போட்டு, அடிவாங்குன, வழக்குகள்
வாங்கி கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலையற என்னையப் போய் ஒ.செ, ந.செ, கி.செ.க்கள் வேண்டாம்னு புறக்கணிக்கறது
எந்தவிதத்திலங்க நியாயம்?

அமைச்சர்களைத் தேடி அலுவலகத்துக்கோ, வீட்டுக்கோ
போனால், இப்ப அவங்களைச் சுற்றி இருப்பவங்க துரத்துறாங்க.
ஒன்றிய – நகர நிர்வாகிகளுக்கே இந்த நிலைமைன்னா,
சாதாரண தொண்டர்களோட நிலைமை என்னன்னு யோசிச்சிக்குங்க.

இதையெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியலை” என்றவரிடம், கட்சித்தலைவரிடம் முறையிட முடியவில்லையா
என்றோம்.

“முதல்வர் முழு நேரமும் மக்களுக்காக உழைக்கிறார்.
கட்சிக்காரங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாமல்
இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொஞ்சம்
முயற்சி செய்தால் சந்திக்க முடிஞ்சது, நாலு வார்த்தையாவது
பேச முடிஞ்சது. அறிவாலயத்துக்குப் புகார் மனு அனுப்பினால்,

யார் மீது புகார் அனுப்புறோமோ, அவுங்களே அந்தக்
கடிதத்தைக் கொண்டு வந்து நம்ம மூஞ்சி மேல வீசியதைக்
கடந்த காலத்தில் அனுபவிச்சிட்டேன். இப்ப என்ன நிலைமைன்னு தெரியாததால புகார் மனு அனுப்பவில்லை”
என்றார் வருத்தமாக.

……………………………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to எல்லாத்துக்குமே பிக்சட் ரேட் – 10 % -திமுக பற்றி – “நக்கீரன்” சொன்னால்பொய்யாகவா இருக்கும்…..?

  1. புதியவன் சொல்கிறார்:

    அது சரி.. நீங்க ஏடாகூடமான படங்கள்லாம் வெளியிடமாட்டீங்களே… வேறு அட்டைப்படம் கிடைக்கவில்லையா? அல்லது ஏதேனும் உள்குத்து இருக்கிறதா?

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நக்கீரன் இப்போது சொல்வது உண்மையாக
    இருக்குமென்று வாசகர்கள் நம்ப, இதற்கு முன் நக்கீரன்
    வெளிப்படுத்திய “மிகப்பெரிய உண்மை”யை
    நினைவுபடுத்தினால் தானே,
    “மக்களுக்கு” அதன் நம்பகத்தன்மை நினைவிற்கு வரும் …!!!!

    இது ” உள் குத்தா” – இல்லையா என்பது
    உங்களுக்கும் – atleast now – புரிய வருமே ….!!!

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  3. Rajs சொல்கிறார்:

    At least

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.