
1958- வாக்கில், திரையுலகில் வாய்ப்பு தேடி
சென்னையில் முகாமிட்டிருந்த –
திருவாளர்கள் வாலி, நாகேஷ், நடிகர் ஸ்ரீகாந்த்
எல்லாரும் தி.நகரில் -ஒரே அறையில் ஒன்றாக
வசித்து வந்தவர்கள்…
அதில் அப்போதைக்கு மாத வருமானத்தில்
வேலைக்கு இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும் தான்…
( சில வருடங்கள் முன்பு – 2 ? – ஸ்ரீகாந்தை,
நாரத கான சபா -உட்லண்ட்ஸ் ஓட்டலில் பார்த்தேன்…
ரொம்ப சிம்பிளாக, 4 முழ வேட்டி, டப்பா கட்டுடன்
காபி சாப்பிட வந்திருந்தார் …)
வாலி சொல்லும் அந்த துவக்க காலத்தில் –
ஸ்ரீகாந்த், அமெரிக்கன் எம்பஸியில் ஸ்டெனோகிராபராக
பணியாற்றி வந்தார்…(வெண்ணிற ஆடை -க்கு முன்னதாக…!)
அவர் ஒருவரது சம்பளத்தில் இவர்கள் அனைவரும்
காலம் தள்ளி வந்தார்கள்….
பல முறை இந்த சம்பவங்களைப்பற்றி எல்லாம்
கேள்விப்பட்டிருக்கிறேன்… இப்போது மறைந்த
கவிஞர் வாலி அவர்களே சொல்லும் காணொலி
ஒன்றை பார்த்தேன்…. இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
………………………………………………………………………………………………………………………………………………………………………….