



சுமார் 22 நிமிடங்களுக்கு ஓடும் ஆவணப்படம் ஒன்றை
அண்மையில் National Geographic Channel
வெளியிட்டிருக்கிறது….
அந்தக் காணொலியை இந்த இடுகையின் இறுதியில்
தந்திருக்கிறேன்….
இந்த வீடியோ முக்கியமாக ‘அங்கோர் வாட்’ இடிபாடுகளை
மறுகட்டமைப்பு செய்வதையே காட்டுகிறது என்றாலும் கூட,
வர்ணனையில் –
தமிழ் நாட்டிலிருந்து, கம்போடியா வரை சென்று
“அங்கோர் வாட்” டை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்
உருவாக்கிய பல்லவ மன்னர்களின், தமிழர்களின் – பங்களிப்பு
இதில் முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது
வருந்தத்தக்க விஷயம்….. அங்கோர் வாட்’டை மறுகட்டமைப்பு செய்வதில் இந்தியாவும் மிக முக்கிய பங்காற்றியது என்கிற வகையில், இந்த தவறை தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு அவசியம் உணர்த்த வேண்டும்.
“அங்கோர் வாட்” பற்றி – மிக விவரமாக, அனைத்து
தகவல்களையும் உள்ளடக்கி பல ஆண்டுகளுக்கு முன்னரே
இந்த விமரிசனம் தளத்தில் சில இடுகைகள் வந்தது
பழைய வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்.
அண்மைக்காலங்களில் வரத்தொடங்கிய புதிய வாசகர்களுக்காக –
முதலில் 2012-லும், பின்னர் 2016-லும் வெளிவந்த
விமரிசனம் தளத்தின் இடுகைகளின் லிங்க்கை கீழே
தந்திருக்கிறேன். இதுவரை படிக்காதவர்கள் அவசியம்
படியுங்கள் என்று வேண்டுகிறேன்….
யார் மறைத்தாலும், தனது இருப்பால் –
பண்டைத்தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும்
ஒரு பிரம்மாண்டமான படைப்பு “அங்கோர்வாட்”….
………………………………………………………………………………………………………………………….……….
ஏஞ்ஜலினா ஜோலி – தா ப்ரோம் – ஜெயவர்மன் –
நமக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் ?
ஆகஸ்ட் 9, 2012
ஏஞ்ஜலினா ஜோலி – தா ப்ரோம் – ஜெயவர்மன் – நமக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் ?
…………………………………………………………………………………………………………………………….…….
( பகுதி-2 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன …
19/06/2016
( பகுதி-2 ) புதைந்து, மறைந்த 1200 வருட ரகசியங்கள் வெளிவருகின்றன …
………………………………………….
நேஷனல் ஜியோக்ரபி’யின் தற்போதைய ஆவணப்படம் –