
தனியார் வசம் போகப் போகும் மத்திய அரசின்
சொத்துக்கள் பட்டியல்….!
இவற்றை வாங்க, “கொடுத்து” வைத்த
“புண்ணியவான்”-கள் யார் யாரோ …!!!
ஆனால் – எப்படி இருந்தாலும் “அ”-விலிருந்து தானே
துவங்க வேண்டும்……………..!!!
மத்திய அரசின் பெரும்பாலான சொத்துக்களை
தனியாருக்கு குத்தகைக்கு விட்டு பணமாக்கும் புதிய திட்டம்
ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் மொத்தம்
6 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக
புதுமையான, மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில்
சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் குறித்து 2021-22ம்
நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.
மத்திய அரசின் பல்வேறு கட்டுமான திட்டங்கள்,
முக்கியமான அறிவிப்புகளை நிறைவேற்றவும்,
அதற்கான நிதியை திரட்டவும், அரசு சொத்துகளை
ஏலம் மற்றும் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டும் திட்டத்தை
மத்திய அரசு தற்போது உருவாக்கியுள்ளது.
மத்திய அரசின் உள்கட்டமைப்பு சொத்துக்களை அடுத்த
4 ஆண்டுகளில், பணமாக மாற்றுவதை இலக்காக கொண்டு
“தேசிய பணமாக்கல்” ஆதார வழிமுறைகள்
உருவாக்கப்பட்டுள்ளன. இதில், குத்தகைக்கு விட
முடிவு செய்யப்பட்டுள்ள மத்திய அரசின்
சொத்துக்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
25 விமான நிலையங்கள்,
400 ரயில் நிலையங்கள்,
15 ரயில் விளையாட்டு அரங்கங்கள்,
26,700 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், உள்பட
12 அமைச்சகங்களின்
20 சொத்துக்கள் குத்தகைக்கு விட்டு
நிதி திரட்டப்பட உள்ளது.
நிதி ஆயோக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆதார
வழிமுறைகள் புத்தகத்தில், ” நெடுஞ்சாலை, ரயில்வே, மின் உற்பத்தி,
மின் விநியோகம், எரிவாயு குழாய்கள், உற்பத்தி குழாய் / மற்றவை,
தொலைத்தொடர்பு, சேமிப்பு கிடங்கு, சுரங்கம், விமான நிலையங்கள்,
துறைமுகம், விளையாட்டு மைதானம் மற்றும் ரியல் எஸ்டேட்
மூலம் நிதி திரட்ட போவதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் தனியாருக்கு அளிக்கப்படும்
சொத்துக்களின் பட்டியலில்,
சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்கள்,
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3 திட்டங்கள்,
நீலகிரி மலை ரயில் பாதை திட்டம் உள்ளிட்டவை இடம்பெற்று
இருக்கிறது.
தனியாருக்கு கொடுக்கப்பட உள்ள அரசு துறைகளின் சொத்துக்கள்
மற்றும் அவற்றின் மதிப்பு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலை(துறை) – 26,700 கி.மீ (சொத்து) –
ரூ.1,60,200 கோடி (மதிப்பு) - ரயில்வே – 400 ரயில் நிலையங்கள்,
90 ரயில்கள், மற்றும் பல – ரூ.1,52,496 கோடி - மின் விநியோகம் –
28,608 சர்கியூட் கி.மீ – ரூ.45,200 கோடி - மின் உற்பத்தி – 6.5 ஜிகா வாட் கொண்ட
மின் உற்பத்தி சொத்துக்கள் – ரூ.39,832 கோடி - எரிவாயு குழாய்கள் – 8,154 கி.மீ குழாய்கள்
– ரூ. 24,462 கோடி - உற்பத்தி குழாய்கள் / மற்றவை –
3,930 கி.மீ குழாய்கள் – ரூ. 22,504 கோடி - தொலைத்தொடர்பு – 2.89 லட்ச கி.மீ பாரத்நெட் பைபர்,
14,917 பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல் கோபுரங்கள் – ரூ. 35,100 கோடி - சேமிப்பு கிடங்கு – 210 லட்சம்
மெட்ரிக் டன்(எல்எம்டி) – ரூ.28,900 கோடி - சுரங்கம் – 160 திட்டங்கள் – ரூ. 28,747 கோடி
- விமான நிலையங்கள் – 25 விமான நிலையங்கள் –
ரூ. 20,782 கோடி - துறைமுகம் – 9 முக்கிய துறைமுகங்களில்
31 திட்டங்கள் – ரூ. 12,828 கோடி - விளையாட்டு மைதானம் – 2 தேசிய மைதானங்கள்
மற்றும் 2 பிராந்திய மையம் – ரூ. 11,450 கோடி
.
………………………………………………………………………………………………………………………………………………………
ஐயா
சைதாப்பேட்டை ரயில் நிலையம் குத்தகைக்கு எடுக்க என்ன வழி முறை என்பதை விளக்கினால், முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன்.
அஜீஸ்,
அடானி கம்பெனியில் அப்ரெண்டீசாக சேர்ந்து
கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்களேன்…..!!!
ஏற்கெனவே 6 விமான நிலையங்களை
“வளைத்து”ப் போட்ட அனுபவம் அவர்களுக்குத்தான்
உண்டு.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
என்னைப் பொருத்தவரையில், தனியாருக்குப் போவதைத் தீவிரமாக ஆதரிக்கிறேன். As long as the process is transparent and given to Indian companies and all are given fair tender chances, We should all support. அரசுத் துறை, அரசு சார்புத் துறைகள் எதுவுமே நன்றாகச் செயல்படுவது இல்லை, அதிலும் அரசு ஊழியர்கள்……….
Pay and get good service – Should be our expectation. தனியாருக்குக் கொடுத்த பிறகு, குடிகாரர்கள், பிச்சைக்காரர்கள், ரவுடிகள் ஆக்கிரமிப்பில் பல இடங்கள் இருக்காது, குறிப்பாக இரயில்வே ஸ்டேஷன்கள்.
எது எது முடியுமோ, அவற்றைத் தனியார் கொண்டுதான் பராமரிக்க வைக்கவேண்டும். அதற்கு அரசு வேலை வாய்ப்பு உருவாக்கவேண்டும் என்று சொல்பவர்கள் சோம்பேறிகளையும், மக்கள் வரிப்பணத்தில் ஓய்வூதியம், லஞ்சம் இவற்றை ஆதரிப்பவர்கள்தாம் என்பது என் நம்பிக்கை. மிகச் சிறுபான்மையினர் siincereஆக இருக்கிறார்கள் என்பதால், அரசு வேலை வாய்ப்புகளை நாம் ஆதரிக்கக்கூடாது, நாடு முன்னேற வேண்டுமானால்.
உங்களுக்கு என்ன வயது? ஓய்வூதியம் தேவை இல்லை என்கிறீர்கள். தனியாரிடம் இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்று யார் சொன்னது? கொரோனாவின் போது மக்களுக்கு துணை நின்றது தனியார் மருத்துவமனைகளா அல்லது அரசு மருத்துவமனைகளா? யெஸ் வங்கி திவால் ஆன போது எஸ்பிஐ வங்கிதானே அதை எடுத்து கொண்டு வாடிக்கையாளர்களை காப்பாற்றியது. வோடஃபோன் / ஐடியா தனியார் நிறுவனம்தானே? ஏன் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனியார் நிறுவனங்கள் பெரும்பான்மையானவை அரசு சொத்துகளை வாங்குவதற்கு அரசு வங்கிகளில் கடன் வாங்கி, எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டிக் கொண்டு, எங்களால் இயலவில்லை என்று மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டு ஓடிப் போவதுதான் நடக்கிறது. தற்போதைய ஒன்றிய அரசு, ஒரு அரசு சொத்துக்களை உருவாக்காமல், முன்னோர்கள் உருவாக்கி வைத்ததை எல்லாம் தனியாருக்கு தாரை வரத்து விட்டு, கூலியாக பாண்டுகளின் மூலம் தன் கஜானவை நிரப்பிக் கொள்கிறது.
Ramani Sankar sir.. நான் இந்த மாதிரி கருத்துக்களைச் சுத்தமாக நம்புவதில்லை. நீங்கள் எக்ஸெப்ஷனலாக இருக்கலாம். எனக்குத் தெரியாது.
1. அரசு மருத்துவ மனைக்குத்தான் செல்வேன் என்று எத்தனை பேர் இருக்கிறீர்கள்?
2. பி.எஸ்.என்.எல் மட்டும்தான் செல்வேன் என்று எத்தனைபேர் சொல்கிறார்கள்? காதி சோப், உள்ளூர் தயாரிப்புகளை மட்டும் வாங்குவேன் என்று எத்தனைபேர் இருக்கிறார்கள்?
3. வாழ்க்கையில் திருட்டு வி.சி.டியோ, காபிரைடை மதிக்காத வழியில் வருவதையோ பார்ப்பதில்லை/படிப்பதில்லை என்று எத்தனைபேர் இருக்கிறார்கள்?
4. அரசுப் பள்ளியில்தான் என் குழந்தைகளைப் படிக்க வைப்பேன். எந்தக் காரணம் கொண்டும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பமாட்டேன் என்று எத்தனைபேர் இருக்கிறார்கள்?
எந்த அரசு நிறுவனத்தில் உங்களுக்கு (வாடிக்கையாளர்களுக்கு) சேவை செய்வது போல நடந்துகொள்கிறார்கள்? பொதுப்பணித்துறையிலா? எஸ். பி. ஐ யிலா (என்னுடைய சமீபத்தைய அனுபவம். என் உறவினரின் பையனுக்கு அவனது அலுவலகத்தில் SBI வங்கிக்கணக்கு salary transferக்கு வேணும் என்றார்கள். அவன் ஆன்லைனில் எல்லாம் அப்ளை பண்ணி, பிராஞ்சுக்குச் சென்றால், (லீவி போட்டுவிட்டு), சாரி.. இங்க எங்கள் கணிணி பழுது என்று என்ன என்னவோ காரணம் சொன்னார்கள். அவன் கடுப்பாகி, HDFCக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணினான். இரண்டாவது நாளில் செக்குடன் வீட்டுக்கு அக்கவுண்ட் வந்துவிட்டது), அல்லது எந்த ஒரு அரசு அலுவலகத்திலா? இல்லை அரசுப் பள்ளிகளிலா?
அரசுப் பணி என்று வந்துவிட்டாலே, பெரும்பான்மையினருக்கு, வேலை செய்யத் தேவையில்லை, ஏகப்பட்ட விடுமுறை, எந்தவித டார்கெட்டும் கிடையாது, திறமை தேவையே இல்லை, ஏகப்பட்ட ஓய்வூதியம் என்பதுதான் மனநிலை எனப் பலர் சொல்கின்றனர். இது தவிர, பல துறைகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று பலர் பேசுவதையும் பத்திரிகைகளில் வருவதையும் நாம் காண்கிறோம்.
//அரசு வங்கியில் கடன் வாங்கி//-இதனை அனுமதித்தவர்களை (அரசியல்வாதிகளை) நாடு கடத்த வேண்டியதுதானே? ஏன் திரும்பவும் வாக்களிக்கிறீர்கள்? மல்லையாவுக்குக் கடன் கொடுத்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ்/திமுக அரசுதானே. மக்களுக்கு சுரணை இருந்தால் ஏன் காங்கிரஸ், திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள்? இதே காங்கிரஸ்/திமுக, HDFC, ICICIயில் பல்லாயிரம் கோடிகள் சும்மா கடன் வழங்குங்கள் என்று திருடர்களுக்கு ஆதரவாக இருந்தால், அந்த வங்கிகள் கடன் கொடுக்குமா? யோசியுங்கள்.
தனியார் நிறுவனம் ஏன் தாக்குப்பிடிக்க முடியவில்லை? இந்தக் கேள்விக்கே பெரிய பதில் எழுதலாம். சுருக்கமாக, Survival of the fittest. இது அரசு நிறுவனங்களில் இல்லை. ஒரு உதாரணம். நீங்கள் ஏன் ‘X’ தனியார் பேருந்தில் பயணம் செய்கிறீர்கள், ஏன் ‘Y’ பேருந்தைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று யோசித்தால், வாடிக்கையாளர் சேவை, நம் சௌகரியம், கட்டணம் என்று ஏகப்பட்ட காரணிகள் இருக்கும். Y திருந்தவில்லை என்றால், தாக்குப்பிடிக்க முடியாது.
Ramani Sankar R,
இதே திட்டத்தை பாஜக அல்லாத
வேறு எந்த அரசு அறிவித்திருந்தாலும்
புதியவன் சாரின் பதில்
முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்
என்பதை இந்த தளத்தின் மற்ற வாசகர்களைப்போல்
நீங்களும் அறிவீர்களென்று நம்புகிறேன்.
அடானி, அம்பானி ஆகிய 2 கம்பெனிகள்
சார்ந்த எந்த நிறுவனத்திற்கும்
மேற்படி குத்தகைகள் கொடுக்கப்படாது
என்று புதியவன் சாரால் சொல்ல முடியுமா….?
முதல் கட்டமாக சென்ற வருடம்
6 விமான நிலையங்கள் maintenance -க்கு
ஏலம் அறிவிக்கப்பட்டு, அத்தனையும்
(எந்தவித முன் அனுபவமும் இல்லாவிட்டாலும்,)
அடானி கம்பெனிக்கே கொடுக்கப்பட்டது
ஏனென்று மட்டும் அவரிடம் கேட்டு விடாதீர்கள்.
தகுதி, திறமை – உள்ளவர்களுக்கு
கொடுப்பதில் என்ன தவறு என்று மீண்டும்
உங்களையே கேட்பார்….!!!
கடந்த 7 வருடங்களில் மத்திய அரசு
எந்த தவறும் செய்யவில்லையா என்று
கேட்டுப்பாருங்கள்…
காங்கிரஸ் செய்யாத தவறா ….?
என்று counter வரும்.,
பதில் வருமா என்று கவலையே
படாதீர்கள்…
பாஜக அரசை குறை கூறி நீங்கள் என்ன
எழுதினாலும், தூக்கத்தில் இருந்தாலும் கூட
எழுந்து வந்து counter கொடுப்பார் –
கவலையே படாதீர்கள்.
(பி.கு. இதற்காக எனக்கும் புதியவனுக்கும்
சண்டை என்று நினைத்து விடாதீர்கள்.
அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்…!!!
அது வேறு – இது வேறு…..!!! )
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இந்த அதானி யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்தது காங்கிரஸால் என்று நிச்சயமாகத் தெரியும்.. (அம்பானி க்ரூப் வளர்ச்சியைப்பற்றிப் படித்திருக்கிறேன்) பாஜக ஆட்சியில் அதானியை வளர்த்துவிடுவதும் புரிகிறது (நிறைய காண்டிராக்டுகள் அவர்களுக்குக் கிடைப்பதிலிருந்து). இதை ஒரு பெரிய விஷயமாக நான் கருதுவதில்லை, ஊழல் வெளிப்படையாகக் கண்டுபிடித்து விஷயம் வெளியில் வந்தாலொழிய. நாம தமிழ்நாட்டுல பார்க்காத such thingsஆ?
//எந்தத் தவறும் செய்யவில்லையா?// – தவறே செய்யாதது இறைவன் ஒருவனாகத்தான் மட்டுமே இருக்க இயலும். பாஜகவின் தவறு என்று நான் கருதுபவைகளையும் இங்கு எழுதியிருக்கிறேன் (பணமதிப்பிழப்பு-Later I didn’t see any advantage, known to common persons, 2000 நோட்டுகள் சம்பந்தமாகப் பிடிபட்ட அரசியல் தொடர்புள்ளவர்கள் யாருமே தண்டிக்கப்படவில்லை, while common man was struggling to get money from bank during those time, பலரும் குற்றவாளிக்கூண்டுக்குள் நிறுத்தப்படாமல் அந்த விஷயங்களிலும் அரசியல் செய்யப்படுவது என்பது போன்று). அரசியல் விஷயங்களிலும் பாஜகவின் நேர்மையின்மையை இங்கு எழுதியிருக்கிறேன் (புதுச்சேரி அரசியல், அதிமுகவில் சசிகலா/நடராஜன் ஆதரவு, பிறகு எடப்பாடி/ஓபிஎஸ் வைத்து விளையாடியது போன்று)
Also I always support Privatization. அரசுப் பணி என்பது வெறும் செலவுதான், அதனால் மக்களுக்கு எந்தவிதப் பிரயோசனமும் இல்லை. We are showing our hypocrisy in supporting அரசுப்பணி. அவ்ளோதான்.
Ramani Sankar R,,
விஜய் மால்யா,
லலித் மோடி,
நீரவ் மோடி,
நித்யானந்தா, -வகையறாக்களை
ஏன் இன்னும்
இந்தியாவுக்கு கொண்டு வரவில்லை
என்று கேட்காதீர்கள்…
அது சட்டத்தின் குறை… அரசு என்ன செய்யும்…!!!
சுவிஸ் வங்கியில் யாருமே கறுப்புபணம்
வைத்திருக்கவில்லையா…?
7 வருடங்களில் ஏன் ஒரு ரூபாய் கூட
கொண்டு வரவில்லை என்று கேட்டு விடாதீர்கள்.
அங்கே பணம் போட்டவர்கள் எல்லாம்
உத்தமர்கள் என்று ஏற்கெனவே
சர்டிபிகேட் வந்து விட்டது.
ஊழல் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதுள்ள
வழக்குகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள்
முடிக்கப்பட்டு, பாராளுமன்றம் சுத்தம்
செய்யப்படும் என்று சொன்ன நியாபகம்.
நமக்குத் தெரிந்த உள்ளூர் திருவாளர்கள்,
திருமதிகள் (தயாநிதி மாறன், ஆ.ராசா,,கனிமொழி)
ஆகியோரின் வழக்குகளே ஆண்டுக்கணக்கில்
தூங்கிக்கொண்டிருக்கின்றன. இன்னும்
அகில இந்திய அளவில் எவ்வளவோ…?
நீங்கள் வேண்டுமானால், இங்கே
பா.ரா.வைப்பற்றி எதாவது எழுதிப்பாருங்களேன்.
அதற்கும் துள்ளிக்குதித்து எதிர்ப்பு வரும்…
பலர் புத்திசாலிகளாக இருந்தாலும்,
நிறைய விஷயம் தெரிந்தவர்களாக இருந்தாலும் கூட,
கட்சிப்பற்று அவர்கள் கண்களைக் கட்டி விடுகிறது –
என்ன செய்ய….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//ஊழல் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு, பாராளுமன்றம் சுத்தம் செய்யப்படும்// – இதை எழுதவும் சொல்லவும் முடியாத நீண்ட தொடர்கதை. உங்களுக்குத் தெரிந்திருக்கும் சி.பி.ஐ தலைவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பலமுறை சந்தித்தார் என்றெல்லாம் செய்திகள் வந்தது… அரசாங்க அதிகாரிகள், அலுவலர்கள் என்று மிகப் பெரிய நெட்வொர்க், பிறகு நீதித்துறை…… ப.சிதம்பரத்தின் தேர்தல் வழக்கே…….. எப்படி தொடர்கதையாக முடிந்தது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்களே இங்கு ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர்கள்’, ‘என்கவுண்டர்’ இவைகளை ஆதரித்து எழுதியிருக்கிறீர்கள். ஏன் என்று உங்களிடமே கேட்டுப் பாருங்கள். லோகல் குற்றங்களுக்கே அந்த நிலைமை என்றால், அகில இந்தியக் குற்றங்களுக்கு? 2ஜி போய், 5ஜி வருது.
நான் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், அரசாங்க தொலைத்தொடர்பை, கண்ணுக்கு முன்னால் தன் சொந்த பிஸினெஸுக்கு உபயோகித்த, அதற்கான தடயங்கள் எல்லாவற்றையும் விட்டுச் சென்றிருந்திருப்பதால், உடனே என்ன முடிவு எடுத்திருப்பேன் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நாம் ஜனநாயக நாட்டில் அல்லவா இருக்கிறோம். இங்கு பணம் உள்ளவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி, சாமானியர்களுக்கு ஒரு நீதி என்று இருப்பதாக எத்தனையோ பேர், பத்திரிகைகள் எழுதுகின்றன.
எதையேனும் சொன்னால் நான் வாழ்நாளில் வாக்களிக்காத கட்சியின் மீது எனக்குப் பற்று என்று சொல்லி, விஷயத்தைக் கடந்துவிடுகிறீர்கள். என்ன செய்ய?
புதியவன்,
பாராளுமன்றத்தை ஒரே ஆண்டுக்குள் சுத்தம்
செய்து விடுவேன் என்று தேர்தலின்போது
மக்களுக்கு “வாக்கு” கொடுத்தவர் – ஒன்றும்
யதார்த்தம் தெரியாத அப்பாவி அல்லவே…..
ஏற்கெனவே ஒரு மாநில முதலமைச்சராக
பத்தாண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர்….
எது முடியும், எது முடியாது என்பது
வாக்கு கொடுக்கும்போது அவருக்கு
தெரியாமலா இருந்திருக்கும்….?
நிச்சயம் நிறைவேற்ற முடியாது என்று
தெரிந்தும், ஒருவர் வாக்குறுதி கொடுத்தால்,
அதற்கு என்ன அர்த்தம் …?
அய்யோ பாவம் அவரென்ன செய்வார் என்று
நீங்கள் அதற்கு வக்காலத்து வாங்கினால் –
அதற்கென்ன அர்த்தம்….?
நான் சிரமப்பட வேண்டிய
அவசியமே இல்லாமல் –
இங்கே மீண்டும் மீண்டும் நீங்களே நிரூபிக்கிறீர்கள்
உங்கள் பார்வையை, அணுகுமுறையை –
எது மறைக்கிறது என்று.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//நிச்சயம் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும், ஒருவர் வாக்குறுதி கொடுத்தால், அதற்கு என்ன அர்த்தம் …?//
அதற்கு என்ன அர்த்தம் என்று எழுதினால், அதனை நான் உபயோகிக்க ஹேதுவாக இருக்கும். ஏனென்றால், சிலர், ஒன்றல்ல, பலப் பல வாக்குறுதிகள் கொடுத்து, அந்தக் கட்சி அடிமைகள், நிச்சயம் நிறைவேற்றுவார் என்று பஜனை பாடிக்கொண்டிருந்தனர்.
புதியவன்,
நீங்கள் பதில் சொல்லி தப்பிக்க வழியின்றி
மாட்டும்போதெல்லாம் செய்யும்
அதே தந்திரத்தை – திசைதிருப்பலை – இங்கும் செய்ய
முயற்சிக்கிறீர்கள்…
இங்கே நாம் எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோமோ….
யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோமோ,
யாருக்கு நீங்கள் ஒருதலைப்பட்சமாக
வக்காலத்து வாங்கிக்கொண்டிருப்பதாக
சொல்கிறோமோ –
அவர் கொடுத்த வாக்குறுதியைப்பற்றி மட்டும்
இங்கே பேசுங்கள்… நிறைவேற்ற முடியாது என்று நன்கு
தெரிந்திருந்தும், இந்த நாட்டு மக்களுக்கு அவர் கொடுத்த
அந்த வாக்குறுதியைப்பற்றி மட்டும் பேசுங்கள்.
நீங்கள் சொன்னதை உங்களாலேயே
விளக்க முடியவில்லையென்றால் –
அதை பளிச்சென்று ஒப்புக்கொண்டு,
பிறகு அடுத்த சப்ஜெக்டுக்கு போங்கள்…
இல்லை – மற்றவர்களுடன் ஒப்பிட்டு தான் பேசுவேன்
என்றால், மற்றவர்களுக்கும் இவருக்கும் எந்தவித
வித்தியாசமும் இல்லை; இவரும் அவர்களைப்போலவே –
நிஜமாகவே நிறைவேற்ற வேண்டும் என்கிற
எண்ணம் இல்லாமல் தான் இவராலும் வாக்குறுதிகள்
கொடுக்கப்பட்டன என்று நீங்களே எழுதி விட்டு,
தாராளமாக மற்ற அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு எழுதுங்கள்…..
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
// பாஜக ஆட்சியில் அதானியை வளர்த்துவிடுவதும்
புரிகிறது (நிறைய காண்டிராக்டுகள் அவர்களுக்குக் கிடைப்பதிலிருந்து).
இதை ஒரு பெரிய விஷயமாக நான் கருதுவதில்லை, //
அதானே….!!!
அதானியை வளர்த்து விடுவது பாஜக அரசு ஆயிற்றே…!!!
அதை எப்படி தவறாக, பெரிய விஷயமாக கருத முடியும்…!!!
// இந்த அதானி யாரென்று எனக்குத் தெரியாது. //
நம்புவோம் …அவசியம் நம்புவோம்…..!!!
உங்களுக்காக நான், இந்த அதானி யார் என்று கண்டுபிடிக்க முயற்சித்தேன். எதற்காக அதானிக்கும் அம்பானிக்கும் மட்டுமே மத்திய அரசு உதவுகிறது? எதற்கு இந்த புதியவனுக்கும் காவிரிமைந்தனுக்கும் காண்டிராக்டுகளை மத்திய அரசே முனைந்து வந்து கொடுப்பதில்லை என்று யோசிக்கிறேன். அது சரி… திமுக காங்கிரஸ் மத்திய அரசு கேடி பிரதர்ஸுக்கு 50 சேனல்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கியதைப் போல, ஜெ வுக்கு நியூஸ் சேனல் தொடங்க அனுமதி வழங்காமல், அவர் கோர்ட்டுக்குப் போய்த்தானே பல வருடங்களுக்குப் பிறகு அனுமதி வாங்கினார் என்பதையும் நினைத்துக்கொள்கிறேன்.
பாம் ஆயில் விற்க அதானி என்பவருக்கு ராஜீவ் காந்தி (காங்கிரஸைச் சேர்ந்தவர், அவரது மரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு, தேச ரகசியங்களை பிற நாட்டினருக்கு பாஸ் செய்ததற்காக ஒரு முதலமைச்சரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது) 1989ல் லைசன்ஸ் கொடுத்தார்.
இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகம்/கடல் வர்த்தகத்தை அதானிக்கு நரசிம்மராவ் (காங்கிரஸைச் சேர்ந்தவர்) 1993ல் வழங்கினார்.
கேரளம் விழிஞம் துறைமுகத்தை அதானிக்கு வழங்கியது மன்மோகன் சிங் 2013-2014, மாநில அரசு கேரள கம்யூனிஸ்ட் அரசு.
அதானிக்கு 6100 மெகா வாட் பவர் ப்ளாண்ட் 2020ல் காங்கிரஸ் அரசால், அம்ரிந்தர் சிங், பஞ்சாப் வழங்கப்பட்டது.
அம்பானிக்கு ரிலையன்ஸ் ரீட்டெயிலுக்கு லைசன்ஸ் கொடுத்தது பொம்மை மன்மோகன்சிங்+ திமுக மத்திய அரசு 2005ல்.
அம்பானிக்கு 4ஜி லைசன்ஸ் 2013ல் காங்கிரஸ்+திமுக அரசால் வழங்கப்பட்டது. அம்பானிக்கு நெடுஞ்சாலை காண்டிராக்டுகள் முழுமையாக வழங்கப்பட்டது டி.ஆர்.பாலு 2009-2013 வருடங்களில்.
ஏதோ அதானி, அம்பானிகள்லாம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த மாதிரியும், பாஜக அரசுதான் அவர்களுக்கு காண்டிராக்டுகளை வழங்கியது போலவும் எழுத (பொய்யை எழுத) எப்படித்தான் மனம் வருகிறதோ. நாம் டெண்டரில் கலந்துகொண்டு, அவர்களைவிட அதிகமாக quote செய்து, பிறகு அரசு (2ஜியில் திமுக செய்ததுபோல) அதானிக்கோ அம்பானிக்கோ காண்டிராக்டுகளை வழங்கியது என்று ஆதாரத்துடன் எழுதினால் அது நியாயம்.
// ஏதோ அதானி, அம்பானிகள்லாம் பிச்சை
எடுத்துக்கொண்டிருந்த மாதிரியும்,
பாஜக அரசுதான் அவர்களுக்கு
காண்டிராக்டுகளை வழங்கியது போலவும்
எழுத (பொய்யை எழுத) எப்படித்தான்
மனம் வருகிறதோ. //
பாஜகவுக்கு எதிராக எதையாவது எழுதினால்
” பொய்யை எழுதுகிறேன்” என்று கூசாமல்
எழுதும் நண்பருக்கு ….
“கருத்து / விமரிசனம் ” என்பது வேறு –
” பொய் ” என்பது வேறு –
என்பது “மதம்” பிடித்தவர்களுக்கு தெரியாது
என்பதை பளிச்சென்று நிரூபிக்கிறீர்கள்.
என் இத்தனை வருட அனுபவத்தில் என்னை
“பொய்” சொல்கிறேன் என்று சொல்லும்
முதல் ஆசாமி நீங்கள் தான்…. என்னை
மிக மிக வெறுப்பவர்கள் கூட – நான் சொல்லும்
கருத்துகளைத் தான் எதிர்க்கிறார்களே தவிர,
நான் பொய் சொல்வதாக இதுவரை யாரும்
சொன்னதில்லை; இத்தனை நாட்களாக இங்கே
என்னைப் பார்த்த பிறகும்,
என்னைப்பற்றி அறிந்த பிறகும்,
சற்றும் மனசாட்சியின்றி,
முதன் முதலாக இப்படிச் சொல்லி இருப்பவர் என்பதற்காக
உங்களுக்கு என் நன்றிகள்….
என்ன செய்வது
“மதம் / கட்சி -வெறி ” பிடித்தவர்களிடம் நியாயத்தை
எதிர்பார்க்க முடியுமா….?
பாஜக ஆதவாளன் என்று காட்டிக்கொள்ள
வெட்கப்பட்டுக் கொண்டு, ஆனால்,
மீண்டும் மீண்டும் அதற்கு மாறாகவே
எழுதுபவர்கள், எப்படி ஊரை ஏமாற்றுகிறார்கள்
என்பதற்காக இந்த விவரங்கள் –
—————–
After starting out as a commodities
trader in the late 1980s, Adani is
now richer than Jack Ma and is India’s
second-wealthiest person with a
net worth of $56 billion. …
—————–
Adani Group got land at
cheapest rates in Gujarat
The rates at which the Gautam Adani-
promoted Adani Group bagged land from
the Narendra Modi-led Gujarat
government for its port and special
economic zone (SEZ) project —
between Re 1 and Rs 32 per square metre —
were much lower than other companies
that set up units in the state.
Concessional pricing apart,
the group did not face land acquisition
hurdles, as the state allotted
non-agricultural government land
for Adani Port and Special Economic
Zone (APSEZ), the country’s
largest multi-product SEZ spread
across 15,946.32 acres
(6,456 hectares) in Kutch district’s
Mundra block
——————–
Gujarat Govt. was –
flayed the Gujarat government for
bestowing undue favours on an Adani
group company that is operating
India’s largest private port at Mundra.
The Public Accounts Committee of the
legislative Assembly has rebuked
the state government for not acting
on reports submitted earlier by the
Comptroller and Auditor General of
India that documented how
the company
benefitted because the Gujarat
government chose to not
recover its dues.
—————-
EXCLUSIVE: How Gujarat Government
Helped Adani’s Port Company
The Public Accounts Committee (PAC)
of the Gujarat legislative Assembly
recently prepared a report to
follow up audit observations that
had been submitted in 2014 by the
Comptroller and Auditor General
(CAG) of India to the Gujarat
government sharply criticising it
for bestowing “undue” favours on
a company in the Adani
group that operates India’s
largest private port.
In its report, the PAC rebuked the
Gujarat government for giving “undue”
favours to India’s largest private
port operator Gujarat Adani Port
Limited, which is now known as the
Adani Ports and Special Economic Zone
Limited.
GUJARAT MARITIME BOARD’S ACTIONS
HELPED ADANI-
The 2012-13 report of the CAG report
had noted that Gujarat Adani Port
Limited (GAPL) had received benefits
from the Gujarat Maritime Board (GMB),
a state government undertaking,
while constructing the largest
private port in the country in Mundra,
Gujarat. The CAG had found defects
in the lease and possession agreement
(LPA) signed between GMB and GAPL.
———————–
Controlling the Airports of India –
When the Indian government approved
the privatisation of six airports
in 2018,
it relaxed the rules to widen
the pool of competition,
allowing companies without any
experience in the sector to bid.
There was one clear winner from
the rule change: Gautam Adani, the
billionaire industrialist with
no history of running airports,
scooped up all six.
———————-
Illegal Profiteering Charge on
Adani Real Estate JV
The National Anti-profiteering
Authority has alleged
that a joint venture by Adani
Realty and the M2K Group
earned illegal profits by
not passing on tax benefits
to over 400 apartment-owners
in Gurugram in Haryana.
———————-
Adani power project was on the
brink of bankruptcy –
but the BJP government in Gujarat
saved it by enacting a special law.
——————–
இந்த விஷயத்தில் மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள
விரும்பும் வாசக நண்பர்களுக்கு –
சும்மா google search -ல் ” Adani corruption ”
– என்று போட்டு, தேடிப்பாருங்கள்….
நான் இவ்வளவு சிரமப்படுவதை விட, அது இன்னும்
அதிக தகவல்களைத் தரும்….
———————————
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வழக்கம் போல், நான் எழுப்பியிருந்த
இதர விஷயங்களை மறக்கடிக்க /திசை திருப்ப
உங்களது தந்திரம் வழி செய்யும்
என்கிற வகையில், அசராமல், சலிக்காமல்,
மீண்டும் மீண்டும் திசை திருப்பலை
தொடர்வதற்கு என் பாராட்டுகள் –
இருந்தாலும்,
நண்பர்கள் மறந்து விடாமலிருக்க
நான் அவற்றை மீண்டும் கீழே தருகிறேன்….
—————
விஜய் மால்யா,
லலித் மோடி,
நீரவ் மோடி,
நித்யானந்தா, -வகையறாக்களை
ஏன் இன்னும்
இந்தியாவுக்கு கொண்டு வரவில்லை
என்று கேட்காதீர்கள்…
அது சட்டத்தின் குறை… அரசு என்ன செய்யும்…!!!
சுவிஸ் வங்கியில் யாருமே கறுப்புபணம்
வைத்திருக்கவில்லையா…?
7 வருடங்களில் ஏன் ஒரு ரூபாய் கூட
கொண்டு வரவில்லை என்று கேட்டு விடாதீர்கள்.
அங்கே பணம் போட்டவர்கள் எல்லாம்
உத்தமர்கள் என்று ஏற்கெனவே
சர்டிபிகேட் வந்து விட்டது.
ஊழல் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதுள்ள
வழக்குகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள்
முடிக்கப்பட்டு, பாராளுமன்றம் சுத்தம்
செய்யப்படும் என்று சொன்ன நியாபகம்.
நமக்குத் தெரிந்த உள்ளூர் திருவாளர்கள்,
திருமதிகள் (தயாநிதி மாறன், ஆ.ராசா,,கனிமொழி)
ஆகியோரின் வழக்குகளே ஆண்டுக்கணக்கில்
தூங்கிக்கொண்டிருக்கின்றன. இன்னும்
அகில இந்திய அளவில் எவ்வளவோ…?
——————–
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
*காங்கிரஸ் ஒரு அரசாங்க வங்கியை உருவாக்குகிறது…. மோடி அரசாங்கம் அதை விற்கிறது, பலர் அந்த பொய்யையும் நம்புகிறார்கள் என்று ஒரு அற்புதமான பொய் பரப்பப்படுகிறது°*
*இன்று, தனியார் துறையில் உள்ள மூன்று பெரிய வங்கிகள், அதாவது ICICI வங்கி, HDFC வங்கி, மற்றும் AXIS வங்கி, இவை மூன்றுமே அரசாங்க வங்கிகளாக இருந்தன, ஆனால் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அவற்றை தனியாருக்கு விற்றார்*
ஐ.சி.ஐ.சியின் முழுப்பெயர் “இந்திய தொழில்துறை கடன் மற்றும் முதலீட்டுக் கூட்டுத்தாபனம் ”.. இது இந்திய அரசாங்கத்தின் அமைப்பாகும், இது பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தது, ஆனால் ஒரே ஒரு கட்டத்தில், நிதியமைச்சர் மன்மோகன் சிங் அதை முதலீடு செய்து தனியாமைப்படுத்தினார்.
இன்று, எச்.டி.எஃப்.சி வங்கி, அதன் முழுப்பெயர் “”இந்திய வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்”, இது இந்திய அரசின் ஒரு அமைப்பாக இருந்தது, இது நடுத்தர வர்க்க மக்களுக்கு வீட்டுக் கடன்களை மலிவான வட்டிக்கு வழங்கிவந்தது.
நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், அரசாங்கத்தின் வேலை ஆளுகை மட்டுமே, வீட்டுக் கடன்களை விற்க வேண்டாம் என்று கூறினார்.
மன்மோகன் சிங் இதை ஒரு அவசியமான நடவடிக்கை என்று கூறி, அரசாங்கத்தின் வேலை அரசாங்கத்தை நடத்துவதே, ஒரு வங்கியை நடத்துவதோ, கடன்களை வழங்குவதோ இல்லை என்று கூறினார்.
ஒரு கட்டத்தில், நிதி மந்திரி மன்மோகன் சிங் எச்.டி.எஃப்.சி வங்கியை விற்றார், அது ஒரு தனியார் துறை வங்கியாக மாறியது.
இது அச்சு வங்கியின் மிகவும் சுவாரஸ்யமான கதை
இந்திய அரசாங்கத்தின் ஒரு அமைப்பாக இருந்தது, அதன் பெயர் “யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா” இந்த நிறுவனம் சிறிய சேமிப்புகளை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது, அதாவது நீங்கள் அதில் சிறிய தொகையை டெபாசிட் செய்யலாம். திட்டத்தை இயக்குவது அல்ல, அது ஒரே பக்கத்திலேயே விற்கப்பட்டது, முதலில் அதற்கு யுடிஐ வங்கி என்று பெயரிடப்பட்டது, பின்னர் அதற்கு ஆக்சிஸ் வங்கி என்று பெயர்மாற்றமடைந்தது.
இன்று இதேபோல், ஐடிபிஐ வங்கி ஒரு தனியார் வங்கியாகும். ஒரு காலத்தில் இது “இந்திய தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்” என்றழைக்கப்படும் இந்திய அரசாங்க அமைப்பாக இருந்தது.இதன் வேலை தொழில்களுக்கு கடன் வழங்குவதாகும், ஆனால் மன்மோகன் சிங்கும் அதை விற்றார், இன்று அது தனியார் மயமானது.
உங்கள் நினைவகம் ஒருபோதும் பலவீனமடைய வேண்டாம்
இந்தியாவுக்கு முதலீட்டுக் கொள்கையை யார் கொண்டு வந்தார்கள், நரசிம்மராவின் காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது யோசித்துப் பாருங்கள், மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில், அதிகபட்ச அரசு லெஸ் கவர்னன்ஸ் என்று கூறியபோது, அரசாங்கத்தின் பணிகள் செய்யப்படக்கூடாது என்று கூறினார். கொடுப்பது என்பது இந்த சூழலை மக்கள் வழங்க வேண்டும்.
முதன்முதலில் சுங்க வரிக் கொள்கையை கொண்டுவந்தது மன்மோகன் சிங் தான் * அதாவது, தனியார் நிறுவனங்களால் சாலை அமைத்து, அந்த நிறுவனங்களுக்கு கட்டண வரி வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது.
மன்மோகன் சிங் *முதலில் விமான நிலையங்களை தனிப்பயனாக்கத்தை* தொடங்கினார், டெல்லியின் *இந்திரா காந்தி விமான நிலையம் GMR குழுமத்திற்கு வழங்கப்பட்டது*
இன்று, சம்பக் குதித்து நடனமாடி, மெல்லிசை ராகத்தை பாடுகிறார், “மோடி அதை நண்பர்களுக்கு விற்றுவிட்டார் என்று ..
*மன்மோகன் சிங் அதைச் செய்தால் – முதலீடு*
*மோடி செய்தால் – நாட்டை விற்கிறார் .. !!* என்ன நியாயமடா..
*மன்மோகன் சிங் 2009-10 ஆம் ஆண்டில் 5 நிறுவனங்களை விற்றார்* –
NHPC லிமிடெட்.-
ஆயில் – ஆயில் இந்தியா லிமிடெட்
என்டிபிசி – தேசிய வெப்ப மின் கழகம்
REC – கிராமப்புற மின்மயமாக்கல் கழகம்
NMDC – தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்
*2010-11 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் 6 நிறுவனங்களை விற்றார்!*
SJVNL – சட்லுஜ் ஜல் வித்யுத் நிகம் லிமிடெட்
EIL – பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்
CIL- கோல் இந்தியா லிமிடெட்
PGCIL – பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
MOIL – மாங்கனீசு ஓரே இந்தியா லிமிடெட்
ISC – இந்திய கப்பல் கழகம்.
*மன்மோகன் சிங் 2011-12 ஆம் ஆண்டில் 2 நிறுவனங்களை விற்றார்*
PFC- பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்.
ONGC- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
*2012-13 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் 8 நிறுவனங்களை விற்றார்-*
SAIL – ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட்
நால்கோ – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்
RCF – தேசிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள்
NTPC- தேசிய வெப்ப மின் கழகம்
ஆயில் – ஆயில் இந்தியா லிமிடெட்
NMDC- தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்
HCL – இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்
என்.பி.சி.சி.
2013 *மன்மோகன் சிங் 2013-14 ஆம் ஆண்டில் 12 நிறுவனங்களை விற்றார்* –
NHPC – தேசிய நீர்மின்சாரக் கழகம்
BHEL- பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்
EIL – பொறியாளர்கள் இந்தியா லிமிடெட்
NMDC- தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்
சிபிஎஸ்இ – CPSE-எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்
PGCI- பவர் கிரிட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்.
NFL – தேசிய உர லிமிடெட்
MMDCஎம் – உலோகம் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகம்
HCL – இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்
ஐ.டி.டி.சி – இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்
SDC- மாநில வர்த்தக கழகம்
NLCL- நெய்லி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்
*இவை அனைத்திற்கும் சான்றுகள் உள்ளன …*
1.) மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ், *முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்*: http://www.dipam.gov. இல்.
2.) முதலில் *Dis-Investment ஐக் கிளிக் செய்க. பின்னர் Past Dis-Investment* ஐக் கிளிக் செய்க
3.) இடுகையில் கொடுக்கப்பட்ட அனைத்து தரவுகளும் அங்கு கிடைக்கின்றன.
*மோடி நாட்டை விற்கிறார் என்று நினைப்பவர்களின் கண்களைத் திறக்கவே இந்த பதிவு. மோடி நாட்டை விற்கவில்லை.. மன்மோகன் ஏற்கனவே நாட்டை விற்றுவிட்டார்*
உங்கள் மொழியில் –
*மன்மோகன் சிங் 2009-14 ஆம் ஆண்டில் 5 ஆண்டுகளில் 26 அரசு நிறுவனங்களை 33 முறை விற்றிருக்கிறார்!*
அவர் செய்ததை தான் இவரும் செய்கிறார் என்றால்,
அதைவிட பன்மடங்கு அதிகமாக செய்கிறார் என்றால்,
அவர் செய்தது சரி என்று சொல்கிறீர்களா ?
அவரை இவர் பின் பற்றுகிறார் என்று சொல்கிறீர்களா ?
அதை வெளிப்படையாகச் சொல்வது தானே ?
காங்கிரஸின் கொள்கைகளைத்தான்
பாஜகவும் பின்பற்றுகிறது என்று ?
மன்மோகன் சிங் அவர்கள் நாட்டின் சொத்துக்களை விற்கும் போது (அதாவது முதலீடு செய்யும் போது ), ஏன் யாரும் இதை போல், நாட்டை விற்கிறார் என்று குய்யோ முறையோ என்று அலறவில்லை ?
பிஜேபியின் ஒவ்வொரு செயலையும் , நாட்டின் இறையாண்மையுடனும், மத வெறியுடனும் தொடர்பு படுத்துவது அவர்களுக்கே சாதகமாக முடியும்.
அதானி ஆனவர், அதிகபட்ச கொட்டேஷன் மூலமே, விமான நிலையங்களை குத்தகைக்கு எடுத்துள்ளார் என்றே கேள்விப்படுகிறேன்.அப்படியிருக்க அதில் என்ன குற்றமோ?
அவரை விட அதிகமாக யாரேனும் குத்தைகை தொகையை குறிப்பிட்டும், அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதா?