தப்பு தப்பான கொள்கை -கொடுங்கள் 5600 கோடியை …!!!

குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக
அரசியல்வாதிகளை கொஞ்சம் எழுப்பி விட்டிருக்கும்
நீதிமன்ற உரையாடல்கள்….

தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை,
படிப்படியாக குறைந்துகொண்டே வருவது பற்றி,
எந்தவித கவலையும் கொள்ளாமல், தங்களுக்கு
கிடைக்க வேண்டியவை கிடைத்தால் சரியென்று
இருக்கும் தமிழக அரசியல்வாதிகள் அவசியம் படிக்கவேண்டிய
நீதிமன்ற நடவடிக்கைகள் கீழே –

……………

‘அரசியல் அதிகாரம் பறிப்பு..’ மக்கள்தொகை அடிப்படையில்
எப்படி எம்பிக்களை குறைக்கலாம்? ஐகோர்ட் கேள்வி
Updated: Sunday, August 22, 2021

சென்னை: மக்கள் தொகையைக் காரணமாகக் கூறி
தொகுதி மறுவரையறையின் போது மக்களவை உறுப்பினர்களின்
எண்ணிக்கையைக் குறைக்கும் நடைமுறைக்கு ஏன் தடை
விதிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை
உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதன் மூலம் அரசியல்
அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல்
தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில் மக்கள் தொகை எண்ணிக்கையின்
அடிப்படையில் தமிழ்நாட்டின் எம்பிகளின் எண்ணிக்கையைக்
குறைப்பது குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை
எழுப்பியுள்ளனர்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தவறிய மாநிலங்களின்
எம்பிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம்,
அரசியல் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் சமயத்தில் நீதிபதிகள்,
“மத்திய அரசின் கொள்கை முடிவைப் பின்பற்றி
தமிழ்நாடு அரசு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தைத் தீவிரமாக
அமல்படுத்தியது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மக்கள் தொகை
கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் 1962ஆம் ஆண்டு
41ஆக இருந்த தமிழக மக்களவை உறுப்பினர்களின்
எண்ணிக்கை பின்னர் 39ஆகக் குறைக்கப்பட்டது.

அதேநேரம் மத்திய அரசின் கொள்கையை அமல்படுத்தத்
தவறி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாமல் விட்ட
உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்
ஆகிய மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 • 1967ஆம் ஆண்டு முதல் 14 மக்களவை தேர்தல்களில்
  மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதால்
  தலா 2 எம்பிக்கள் வீதம் மொத்தம் 28 எம்பிக்களை
  தமிழ்நாடு இழந்துள்ளது. எம்பிக்களின் எண்ணிக்கை
  குறைக்கப்பட்டதன் மூலம் (தமிழ் நாட்டின்…) அரசியல்
  அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை காரணமாக
  மாநில உரிமைகளும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய
  வளர்ச்சிக்கான திட்டங்களையும் தமிழ்நாடு இழந்துள்ளது.

மொழி வாரி மாநிலங்களைக் கொண்டுள்ள இந்தியாவில்
அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் அதிகாரமும்
உரிமைகளும் சமமாக இருக்க வேண்டும். இதனால்
தொகுதி மறுவரையறையை ஒரு காரணமாகக் கூறி
ஒரு மாநிலத்தின் மக்களவை உறுப்பினர்களின்
எண்ணிக்கையைக் குறைப்பதை ஒரு போதும்
அனுமதிக்கக்கூடாது.

இந்த நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது” என்ற
முக்கிய கருத்துகளை முன் வைத்தனர். மேலும்
மத்திய அரசிடம் சில கேள்விகளையும் எழுப்பினர்.

அதாவது, “ஒவ்வொரு எம்பி- க்கும் தொகுதி மேம்பாட்டு
நிதியாக ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் நலத்திட்டப்
பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த
14 மக்களவை தேர்தல்களில் ஒவ்வொரு தேர்தலிலும்
தலா 2 மக்களவை இடங்கள் என மொத்தம் 28 எம்பிகளை
இழந்துள்ள தமிழ்நாட்டிற்கு இழப்பீடாக ரூபாய் 5,600 கோடியை
மத்திய அரசு ஏன் வழங்கக்கூடாது?

தொகுதி வரையைக் காரணமாக மக்களவை எம்பிக்களின்
எண்ணிக்கையைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை
என்றால், அதற்குப் பதில் மாநிலங்களவை எம்பிக்கள்
எண்ணிக்கையை ஏன் அதிகரிக்கக்கூடாது” என்று
முக்கிய கேள்விகளை எழுப்பினர்.

இது தவிர, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட
பிரதான அரசியல் கட்சிகளையும் இந்த வழக்கில்
எதிர் மனுதாரர்களாக நீதிமன்றமே தானாக முன்வந்து
சேர்த்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க
மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளும்
நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணை
ஒத்தி வைத்தனர்….

https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-madurai-bench-questioned-why-states-should-lose-lok-sabha-members-on-the-grounds-o/articlecontent-pf585582-430652.html

……………………….

நீதிமன்றம் கேட்ட பிறகு, இப்போது மாநில கட்சிகள்
வக்கணையாகப் பேசும்… பிரச்சினைகளை
உரக்கக் கிளப்பும்… இப்போதாவது – ஒழுங்காக,
உரிய தீர்வை எட்டும் வழியை பார்க்க வேண்டும்.!!!

( பின் குறிப்பு – நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட
தகவல்கள் எந்த அளவிற்கு சரியானவை என்பது
தெரியவில்லை;

தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை
எவ்வெப்போது மாறியது என்கிற விவரங்களை
கீழே தந்திருக்கிறேன்…

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது
அதாவது – 1954-ல்
நமது எம்.பி.க்களின் எண்ணிக்கை -42

அதன் பிறகு மாறிய காலங்கள் –
1967-ல் -41
1971-ல் -43
1977-ல் -40
1989-ல் -39
1991-ல் -40
1996-ல் -39
1999-ல் -41
2004-ல் -39 – இன்று வரை அதே எண்ணிக்கை தான்.

இதைத்தவிர, ஏற்கெனவே – மாநிலங்களுக்கான எம்.பி.க்களின்
எண்ணிக்கையை 2026 வரை மாற்றுவதில்லை என்று
மத்திய அரசு சட்டம் இயற்றியிருப்பதாகவும் தெரிகிறது.)

……………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

21 Responses to தப்பு தப்பான கொள்கை -கொடுங்கள் 5600 கோடியை …!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  அரசியல் அதிகாரம் மக்கள் கையில்தான். எண்ணிக்கைக்கேற்ற எம்பிக்கள். நாம் போராட வேண்டியது, எம்.பி தொகுதி மக்கள் எண்ணிக்கை (பரப்பளவு அல்ல) ஓரளவு யூனிஃபார்ம் ஆக இருக்கவேண்டும் என்பதைத்தான். ஒரு தொகுதிக்கு 15 லட்சம் வாக்காளர்கள் என்பது போல.

  புதுச்சேரி முதல்வரும், தமிழக முதல்வரும், கோவா முதல்வரும், உத்திரப் பிரதேச முதல்வரும் ஒன்றாக ஆகிவிட முடியாது. மக்கள் எண்ணிக்கையை ரெப்ரெசெண்ட் செய்வதற்கேற்ற முக்கியத்துவம்தான் கொடுக்கவேண்டும்.

  கோர்ட் சொல்லியுள்ள கருத்தில் அர்த்தம் உள்ளதாக எனக்குத் தோன்றவில்லை.

  • vimarisanam - kavirimainthani சொல்கிறார்:

   அதே போல், உத்திரப் பிரதேசம் போன்ற
   80 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களையும்
   அனுமதிக்கக்கூடாது… எப்போது உத்தராகாண்ட்,
   உத்தராஞ்சல், ஹிமாசல் பிரதேசம்,
   என்று ஒரே மொழி பேசும் மாநிலங்களை
   பிரித்தார்களோ, அதேபோல் உ.பி.யிலிருந்து
   இன்னும் சில பகுதிகளைப் பிரித்து,
   உ.பி.யின் எம்.பி.க்களின் எண்ணிக்கையை
   குறைக்க வேண்டும்…. இல்லையேல்,
   ஒரே மாநிலம், இந்தியாவையே ஆளக்கூடிய
   ஆபத்து தொடரும்….!!!

   • புதியவன் சொல்கிறார்:

    நீங்கள் எம்.பிக்களின் எண்ணிக்கையை வைத்துச் சொல்கிறீர்கள்னு நினைக்கிறேன். தமிழகத்தையே இரண்டாகப் பிரிக்கவேண்டும். அதாவது எல்லா மாநிலங்களையுமே பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து, கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையில் எம்.பிக்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் (கோவா, யூனியன் பிரதேசங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் தவிர) என்பது உங்கள் விருப்பம் என்றால், அதில் தவறில்லை.

    தமிழகத்தை ஏன் சென்னை ஆளவேண்டும்? ஏன் தென் பகுதி தமிழகத்திலிருந்து அல்லது வட பகுதி தமிழகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு தலைவர் வரக்கூடாது? (நீங்கள் பிரதமர் உ.பிரதேசம் என்ற எண்ணத்தில் எழுதியிருந்தால் இந்தக் கேள்வி)

  • Kamal சொல்கிறார்:

   புதியவன்,
   சனத்தொகை காட்டுப்பாடு பற்றிய உங்கள் கருத்து என்ன? நீங்கள் அதை வரவேற்கிறீர்களா?

   • புதியவன் சொல்கிறார்:

    சனத்தொகை என்பது ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை பெற்றுக்கொள்வதினால் வருவது. அரசு ஜனநாயக நாட்டில் ஒரு பெற்றோர் எவ்வளவு குழந்தைகள் பெற்றுக்கொள்ளணும் என்று கட்டுப்படுத்துவது சரியாக இருக்காது. என்னால் காப்பாற்ற முடியும் என்றூ நினைத்தால் நான் பத்து குழந்தைகளையும் பெற்றுக்கொள்வதை அரசு சட்டம் போட்டுத் தடுக்க இயலாது. அதே சமயம் அதீத மக்கள் தொகை ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பெருமளவு தடையாக இருக்கும், as each one is not contributing to the development (வரவு) of the country. தேசம் என்ன செய்யலாம் என்றால், அரசு இரு குழந்தைகளுக்கு மேல் ஆதரிக்க இயலாது, ரேஷன் பொருட்கள் பெற்றோர், இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்தான் தர இயலும், அரசு வேலை ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் (கணவன், மனைவி, குழந்தை என்று அரசு வேலையில் பொழுது போக்கி ஓய்வூதியத்தை அபகரித்துக்கொள்வது தடுக்கப்பட வேண்டும்), அரசின் சலுகைகள் இரு குழந்தைகளுக்கு மேல் (அதாவது முதல், இரண்டாவது) கொடுக்கப்படாது என்று சட்டம் போடலாம். சில மதங்களில் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளக்கூடாது என்று மத ரீதியாக குழந்தை பெற்றுக்கொள்வதைத் தடை போட்டுக்கொள்வதில்லை. அதனால் அரசு இந்த விஷயங்களில் நுழையக்கூடாது. ஆனால் அரசு வேலை, சலுகை எதுவுமே இரண்டு குழந்தைகளுக்கு மேல் கிடையாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும், அரசு வேலையும் கணவன் மனைவி இருவருக்கும் கொடுக்கவே கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் அரசு வேலை. அதுபோல, ஓய்வூதியம், கணவன், முதல் மனைவி (ஓய்வு பெறும்போது உயிரோடு இருக்கும் மனைவி) ஆகிய இருவருக்கும் மட்டும்தான் உண்டு என்றும் சட்டம் போட வேண்டும்.

 2. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

  இதற்கும் காரணம் பா ஜ க ன்னு சொல்லிட்டா போச்சு அதையும் இந்த அப்பாவி தமிழன் நம்பாமலா போவான்.. உண்மை இந்த 5600 கோடி இழப்பு என்பது இந்த திராவிட கட்சிகளுக்கு ( தமிழகத்துக்கு அல்ல ) மிகப்பெரிய இழப்பு தான்

 3. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

  “அதன் பிறகு மாறிய காலங்கள் –
  1967-ல் -41
  1971-ல் -43
  1977-ல் -40
  1989-ல் -39
  1991-ல் -40
  1996-ல் -39
  1999-ல் -41
  2004-ல் -39 – இன்று வரை அதே எண்ணிக்கை தான்.”

  நான் தேடியவரையில் 1967 முதல் தமிழகத்தில் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் தான்.

  https://en.wikipedia.org/wiki/Elections_in_Tamil_Nadu

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Karthikeyan Palanisamy,

  என் மீது தவறு கண்டுபிடித்து எழுதும் முன்னர்,
  கொஞ்சம் முயற்சி செய்து – முழுமையாக தேடுங்கள்……
  நீங்கள் எழுதுவது சரியா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.

  நீங்கள் சொல்லி இருக்கும் அதே லிங்க்கில்
  சட்டமன்ற தேர்தல்களை மட்டும் பார்க்காமல், கீழே
  கடைசி வரை சென்று – லோக் சபா வரை படியுங்கள்…

  நீங்கள் கொடுத்திருக்கும் அந்த லிங்க் கூட முழுமையான /
  சரியான தகவல்களை தரவில்லை;
  இருந்தாலும், அதில் கூட –

  1977-லிருந்து 39 எம்.பி.க்கள் என்று தான் இருக்கிறது….

  1977-க்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு எம்.பி.க்கள் யாரும்
  கிடையாதா…?

  நான் கொடுத்திருப்பது சரியான தகவலே….

  என் மீது நம்பிக்கை இல்லையென்றால் – நீங்களே
  இன்னும் முயற்சி செய்து சரியான லிங்க்கை தேடிக்கொள்ளுங்கள்…!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

   மன்னிக்கவும் உங்களை குற்றம் சொல்வதோ அல்லது குறை சொல்வதோ எனது நோக்கம் இல்லை. அந்த இணைப்பில் 1957லிருந்து தகவல்கள் இருக்கு…

   இந்த புகைப்படத்தை பாருங்கள்

   தாங்கள் 1991ல் தமிழ்நாட்டில் 40 மக்களவை தொகுதிகள் என கூறியுள்ளீர்கள்.. உங்களால் முடிந்தால் அந்த 40 தொகுதிகள் எவை எவை என கூற முடியுமா …

   https://en.wikipedia.org/wiki/1991_Indian_general_election_in_Tamil_Nadu

   தாங்கள் 1971ல் தமிழ்நாட்டில் 43 மக்களவை தொகுதிகள் என கூறியுள்ளீர்கள்.. உங்களால் முடிந்தால் அந்த 43 தொகுதிகள் எவை எவை என கூற முடியுமா …

   https://en.wikipedia.org/wiki/1971_Indian_general_election_in_Tamil_Nadu

   அல்லது நீங்க எங்க இருந்து இந்த தகவல்களை சேகரித்தீர்கள் என தெரிவித்தால் நானும் படித்து அறிந்து கொள்வேன்

   • புதியவன் சொல்கிறார்:

    அடுத்தது, தமிழகத்தில் எம் எல் சிக்களுக்கான சபை ஒழிக்கப்பட்டதால் மக்களுக்கு 500 கோடி ரூபாய் மிச்சமானதை (நேரிடையாக… மறைமுகமாக ஏகப்பட்டது), ஏதோ மக்கள் நலத் திட்டங்களுக்கு இடையூறாக அமைந்துவிட்டது என்று மதிப்புக்குரியவர்கள் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் சரிதான்.

  • Moha சொல்கிறார்:

   HC is not mentioning these numbers. Needs more editing.

 5. Rajs சொல்கிறார்:

  Only 39 MPs for TN 1999 – see the wiki leak and not 41 as mentioned https://en.wikipedia.org/wiki/1999_Indian_general_election_in_Tamil_Nadu

  Only 39 MPs for TN 1991 – see the wiki leak and not 40 as mentioned
  https://en.wikipedia.org/wiki/1991_Indian_general_election_in_Tamil_Nadu

  39 is the total TN MPs since 1967.
  https://en.wikipedia.org/wiki/1971_Indian_general_election_in_Tamil_Nadu

  • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

   This is what I told in my replies. But he took it differently and asked me to search. I did and put another comment but there is no reply.

   I was the reader of your blogs almost 6 years. Sorry to say this I will try not to come to your blogs.

 6. moha சொல்கிறார்:

  HC has not mentioned the numbers given at the end of this article. Needs more editing.

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நான் தந்திருக்கும் புள்ளி விவரங்கள் இந்திய
  பாராளுமன்ற வலைத்தளத்திலிருந்து
  எடுக்கப்பட்டவை –

  அதற்கான லிங்க் –
  https://loksabha.nic.in/Members/statear.aspx?lsno=1&tab=15

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

   Plz check 1999 parliament elections again in the link you provided.

   Tiruchi constituency has been mentioned two time since there is by election. And one more is nominated MP (anglo Indian)

   • புதியவன் சொல்கிறார்:

    கார்த்திகேயன் – Your point is valid. In my view, நியமன எம்.பிக்களே கூடாது. நியமன எம்.எல்.ஏக்களும் கூடவே கூடாது.

 8. Raghavendra சொல்கிறார்:

  I think we are deviating from
  the issues mentioned in the
  Blog. Let’s discuss about the
  huge disparity in the size of States and
  how it affects the democracy
  in India.

  • புதியவன் சொல்கிறார்:

   மொழிவாரி மாகாணங்கள் என்று பிரித்தபோதே இந்தக் கேள்வி அடிபட்டுவிடுகிறது. உங்கள் லாஜிக் பிரகாரம், பெரும்பாலான எம்.பி.க்கள் ராஜஸ்தானுக்கும் மத்தியப் பிரதேசத்துக்கும், மகாராஷ்டிராவுக்கும் உத்திரப் பிரதேசத்திற்கும் இருக்கவேண்டும். தமிழகத்திற்கு குறைவாகத்தான் இருக்கவேண்டும். (ராஜஸ்தான், ம.பி, மகா வை விட மூன்றில் ஒரு பகுதி, உத்திரப் பிரதேசத்தை விட இரண்டில் ஒரு பகுதி)

 9. Raghavendra சொல்கிறார்:

  Why Uttar Pradesh shd. have 80 MPs ?
  With the exception of one or two
  all our Prime Ministers were from
  U.P. only. Why UP should be allowed
  to dominate in the National Politics ?

  • புதியவன் சொல்கிறார்:

   உங்கள் கேள்வி தவறு என்று நினைக்கிறேன் ராகவேந்திரா. நேரு, இந்திரா, ராஜீவ் போன்றவர்கள் (காங்கிரஸ்) பெரும்பான்மையாக கோலோச்சியதால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. உத்திரப் பிரதேசத்தில் இந்திராவைத் தோற்கடித்ததால் சரண்சிங்கிற்கு முக்கியத்துவமும், முக்கிய பதவியில் அப்போது இருந்ததால் நரசிம்மராவிற்கும், இந்திராவுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்து கட்சியில் இருந்ததாலும், அவரை மீறித்தான் காமராஜ் இந்திராவை ஆதரித்ததாலும் மொரார்ஜிக்கும், ராஜீவ்/காங்கிரஸ் பதவி போகக் காரணமாக மக்களைத் திரட்டியதால் விபி.சிங்கிற்கும் பிரதமர் பதவி கிடைத்தது. மற்றவர்கள் அனைவரும் திறமையினால் அந்தப் பதவிக்கு வந்தவர்கள் அல்லர். பாஜக வைப் பொறுத்த வரையில், கட்சியின் முகமாகவோ இல்லை வசீகரிப்பவர்களாகத் தோன்றுபவர்களோ, வெற்றிக்கு அழைத்துச் செல்பவர்களோதான் பிரதம மந்திரியாக இருந்திருக்கின்றனர். வாஜ்பாயி, மோடி போன்று. ஹிந்தி ஒழிக என்று கோஷம் போடுபவர்கள் பிரதமர் பதவிக்கு வருவது கனவில்தான் நடக்கும்.

   பாராளுமன்ற அங்கத்தினர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையைப் பொறுத்தது. ( இது எதிர்காலத்தில் மிகப் பெரும் பிரச்சனையை இந்தியாவிற்குக் கொடுக்கப்போகிறது.). இட ஒதுக்கீது (அல்லது அரசு பதவி…அரசியல் கட்சியில் பதவி) ஜாதியில் உள்ள மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது என்பது சரி என்றால், இதுவும் சரிதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.