ஜெண்டில்மேன் அரசியல்வாதி திரு.இல.கணேசன் ….

தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர்
திரு.இல.கணேசன் அவர்கள் மணிப்பூர் கவர்னராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு.இல.கணேசனை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்.

சென்னையில் இருப்பதால், கடந்த 15-16 ஆண்டுகளாக
பல நிகழ்ச்சிகளில், அடிக்கடி நேரிலும் பார்த்து வருகிறேன்.
சென்னையில், “பொற்றாமரை” என்கிற பெயரில்
ஒரு இலக்கிய அமைப்பை அவர் இயக்கி வருகிறார்.
ஒரு சமயம் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து,
கொஞ்ச நேரம் அவருடன் பேசியும் இருக்கிறேன்.
எனக்கு அவரை நன்றாகத் தெரியும்…ஆனால் அவருக்கு
காவிரிமைந்தனை தெரியாது….!!!

தமிழக அரசியல்வாதிகளில் கணேசன் ஒரு ஜெண்டில்மேன்.
எனக்குத் தெரிந்து, யாரையுமே அவர் தரக்குறைவாக
என்றும் பேசியது கிடையாது.

பழுத்த அரசியல்வாதி. சிறந்த தேசபக்தர். இலக்கியவாதி…
தமிழில் மிக அழகாக பேசக்கூடியவர், ஒழுக்கத்தில்
சிறந்தவர், பிரம்மச்சாரி … என்று அவரைப்பற்றி
நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக்கொண்டே
போகலாம்.

தகுதி வாய்ந்த அவர் எப்போதோ மத்திய அமைச்சராக
ஆகி இருக்க வேண்டியவர்… அமைச்சராகி இருந்தால்,
அவரது பணி, தமிழகத்திற்கு பயன்பட்டிருக்கும்…
இருந்தாலும், தாமதமாகவேனும், இப்போது கவர்னர் பதவியில்
அவர் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

திரு.இல.கணேசன் அவர்களுக்கு இந்த விமரிசனம்
வலைத்தளத்தின் சார்பாக வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஜெண்டில்மேன் அரசியல்வாதி திரு.இல.கணேசன் ….

 1. Kamal சொல்கிறார்:

  நீங்கள் இவரை gentleman என்கிறீர்கள். ஆனால் பா.ராகவன் வரிசையில் இவரது வீடியோ ஆதாரங்களும் உள்ளதாக மதன் ரவிச்சச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Kamal,

  தயவுசெய்து தவறான செய்தியை இங்கே தராதீர்கள்.

  எனக்குத் தெரிந்து, மதன் ரவிச்சந்திரன்,
  இல.கணேசன் அவர்களைப்பற்றி
  எங்கும் சொல்லவில்லை;

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.