
‘மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை;
பக்கத்து மாநிலங்களில் விளம்பரம்’: அண்ணாமலை
ஆக 21, 2021 06:59 |
சென்னை : ‘மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே,
அரசிடம் பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு,
எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில்,
பிற மாநிலங்களில், முழு பக்க விளம்பரங்களை
கொடுக்கிறது’ என, தமிழக பா.ஜ., தலைவர்
அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: கொரோனாவால் பொருளாதாரம்
மிக மோசமான சரிவை கண்டுள்ள நிலையில்,
நிதி நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது.
அதேசமயம், கடன் அளவும் உயர்ந்து வருகிறது.
தமிழக அரசின் நிதி நிலவரம் குறித்து,
நிதி அமைச்சர் தியாகராஜன், புள்ளிவிபரங்களுடன்
விளக்கி இருந்தார்.
இதற்கு முன், தமிழகம் இவ்வளவு பெரிய
பற்றாக்குறையை சந்தித்தது கிடையாது. இனி
என்ன செய்து, தமிழக அரசு, எப்படி இந்த கடனை
அடைக்க போகிறது என்ற கேள்விக்கு,
தி.மு.க., அரசின் பட்ஜெட்டில் பதில் இல்லை.
வாக்குறுதிகளை நம்பி, மக்கள் ஏமாற்றம் அடைந்து
நிற்கின்றனர். அடிப்படை வாக்குறுதிகளை
நிறைவேற்ற இயலாமல் போனதற்கு காரணம்,
அரசின் மோசமான நிதி நிலைமை என்று
கூறும் அரசு,
தங்கள் 100 நாள் சாதனைகளை விவரித்து,
கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களின்
பத்திரிகைகளில், முழு பக்க விளம்பரங்களை
பெரும் செலவில் கொடுத்துள்ளது.
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே
பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு,
எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில்,
பிற மாநிலங்களில், பிற மொழிகளில் முழு பக்க
விளம்பரங்களை கொடுக்கிறது?
https://www.dinamalar.com/news_detail.asp?id=2827849
தமிழக அரசு செய்துள்ளதாகக் கூறும் சாதனைகளை,
மற்ற மாநில செய்தித்தாள்களில் முழுபக்க அளவில்
திமுக அரசு கொடுத்ததை எந்த விதத்தில்
நியாயப்படுத்த முடியும் …..? தமிழக அரசு இந்த
விளம்பரங்கள் ஏன் கொடுக்கப்பட்டன என்பது குறித்து
விளக்கம் தர வேண்டும்.
தமிழக அரசின் சாதனைகளை பிற மாநில மக்கள்
தெரிந்துகொள்ள மக்கள் பணம் செலவழிக்கப்பட்டது ஏன்…?
திமுக, தங்களது கட்சியின் நிதியில் இந்த விளம்பரங்களை
கொடுத்தால் – அதில் தவறு காண முடியாது…
அது கட்சிக்கான விளம்பரம் என்று கொள்ளலாம்.
இந்த செயல் முற்றிலும் முறைகேடானது.
அரசுக்கு இந்த விளம்பரங்களால் எத்தனை பணம்
செலவானது என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு,
அந்தப் பணம் திமுக கட்சியால், அரசு கஜானாவில்
செலுத்தப்படுவதே முறையாகும்….
முன்பு அதிமுக அரசு, மக்கள் வரிப்பணத்தை செலவழித்து,
தங்கள் சாதனைகளை தமிழ்நாட்டில் விளம்பரப்படுத்தியதை
எதிர்த்து, நீதிமன்றத்திற்கு போயிற்று திமுக….
அதே திமுக இப்போது அதைவிட மோசமாக, மக்கள் பணத்தில்
பிற மாநிலங்களில் விளம்பரம் செய்வது எப்படி …?
ஊதாரித்தனமாக இருந்தது – முந்தைய அரசு பணத்தை
தாறுமாறாக செலவழித்தது என்று வெள்ளை அறிக்கையை
வெளியிட்டு, முந்தைய அரசை
கடுமையாக குறை கூறிய நிதியமைச்சர் –
இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்….?
இந்த விளம்பரங்களுக்கான செலவை அவர் எப்படி
அனுமதித்தார்…?
……………………………………..
1. தங்கள் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தும் பணம் சொந்தப் பணமா இல்லை திமுக கட்சிப் பணமா? பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எப்படி மாஸ்க் அணிவது என்று விளம்பரப்படுத்துவது தங்களின் சொந்தப் பணத்தில்தான் என்று நான் நம்புகிறேன்.
2. பணமே இல்லை என்று சொல்லி இலவசங்களுக்கு எங்கிருந்து பணம் வரும்? போக்குவரத்து நஷ்டம் என்று சொல்லி, பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தது ஏன்?
3. தற்போது மூன்று மாதங்களிலேயே 40,000 கோடி கடன் அதிகமானது என்று பேச்சு எழுகிறதே. அதற்கு என்ன விளக்கம்?
4. பூசாரிகள்/அர்ச்சகர்கள் இல்லாத கோவில்களுக்கு ஏன் நியமனம் செய்யவில்லை? அதற்குப் பதிலாக இருக்கும் கோவிலில் நியமனம் செய்ததன் உள்நோக்கம் என்ன?
5. பெட்ரோல்/டீசல் விலைகளை ஏன் தமிழக வரியை பாதியாக்கி 20 ரூபாய் குறைக்கக்கூடாது?
6. அரசின் வருவாயில் 90 சதவிகிதம் எதற்கு அரசு ஊழியர்களுக்கு வீணாகச் செலவழிக்கப்படுகிறது? அரசு ஆசிரியர்களால் திறமையுடைய மாணவர்களை உருவாக்க முடியவில்லை (கொரோனா சமயத்தில் வேலை செய்யாமலேயே முழுச் சம்பளம்). அரசு அதிகாரிகளில்/ஊழியர்களில் மிகப் பெரும்பான்மையினர் லஞ்ச வருமானம் பெறுகிறார்களே. பிறகு எதற்கு அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம்?
7. செலவு அதிகம் என்று சொல்லும் அரசு, ஏன், அரசு வேலை, அரசுப் பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மட்டும், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று சொல்லக்கூடாது? கணிணிமயமாகிவிட்ட இந்தக் காலத்தில் ஏன் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எண்ணிக்கையைப் பாதிக்கும் குறைவாக்கக்கூடாது?
எதிர்கட்சியாக இருந்தும் (தலைவராக), (பலப் பல வருடங்கள் ஆளுங்கட்சியாக இருந்தபோது அங்கமாக இருந்தும்) அரசின் நிதி நிலை என்றால் என்னவென்று புரிந்துகொள்ளாத திமுக தலைமை, இப்போது மட்டும் என்ன புரிந்துகொள்ளப் போகிறது?