
1954-ல் வெளிவந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி”
திரைப்பட இலக்கணப்படி கதாநாயகனும், நாயகியுமாக
டி.ஆ.ராமச்சந்திரனையும், ராகினியையும் தான் கருத
வேண்டும்….
ஆனால், நிஜத்தில், சிவாஜியும், பத்மினியும் தான் இதில்
முக்கிய பாத்திரங்கள்..
வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் முழுநீள
நகைச்சுவைப்படம் இது…. வெற்றிகரமாக ஓடியது.
பார்க்காதவர்கள் – வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்….
இப்போதும் ரசிக்கும்.
முழு படமும் யூ-ட்யூபில்
கிடைக்கிறது…லிங்க் – கீழே – கடைசியில்….
பாரதிதாசன் அவர்கள் இயற்றிய
இந்தப்பாடலை டி.ஜி.லிங்கப்பா’வின் இசையமைப்பில்
பாடியிருப்பவர் ராதா ஜெயலக்ஷ்மி.
அழகான தமிழ்….
மெல்லிய, மயக்கும் இசை….
நெஞ்சைவிட்டு அகலாத பாடல்களில் ஒன்று –
” வெண்ணிலாவும் வானும் போலே –
வீரரும் தம் வாளும் போலே….”
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, முழு படத்திற்கான லிங்க் –