காட்டுமிராண்டிகளின் கைகளில் கலாஷ்னிகோவ்….!!!

தாலிபான்-களின் ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தானை
விட்டு விட்டு, தப்பியோடும் அமெரிக்க ராணுவம்…

பரிதவிக்கும் அப்பாவி மக்கள் –

காட்டுமிராண்டிகளின் கைகளில் இத்தனை ஆயிரம்
கலாஷ்னிகோவ் எந்திரத் துப்பாக்கிகள் வந்தது எப்படி….?

அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன இத்தனை
ஆயிரக்கணக்கான வாகனங்கள்…? ஜீப்கள், கார்கள்…?

யார் கொடுத்தார்கள் இத்தனை வாகனங்களுக்கும் பெட்ரோல் ..?

இத்தனையும் யார் கொடுத்த கொடை….?

சவூதியா, பாகிஸ்தானா…? அல்லது அமெரிக்காவேயா…?

காபூல் விமான நிலையம் –
தொடர்ந்து வரும் பொதுமக்களை சுட்டு துரத்தியடித்து விட்டு,
கிளம்பும் அமெரிக்க விமானம்…

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to காட்டுமிராண்டிகளின் கைகளில் கலாஷ்னிகோவ்….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  ரஷ்யா, ஆஃப்கானிஸ்தானத்தை ஆக்கிரமித்தபோது, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தாலிபான்களை வளர்த்தது. ரஷ்யா கடைசியில் தோற்று, ஆஃப்கானிஸ்தானத்தைவிட்டு வெளியேறவேண்டி வந்தது. கடந்த 20 வருடங்களாக அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானத்தை ஆக்கிரமித்தபோது, ஏகப்பட்ட பொருட்செலவு, அதனால் அமெரிக்காவுக்கு குறிப்பிடத்தக்க லாபம் எதுவும் இல்லை. தோல்வியுற்று அமெரிக்கா திரும்புகிறது. உங்கள் தலைப்பே உண்மையைச் சொல்கிறது.

  அந்த அந்த நாட்டு மக்கள், எது தங்களுக்குத் தேவை என்பதில் clearஆக இருக்கணும், அரசியல் தலைவர்கள் அல்லர். ஆஃப்கானிஸ்தான், தங்களுக்கு தாலிபான்கள்தான் தேவை என்று நினைப்பதாகவே இதனைக் கருதணும். அல்லது மத அடிப்படைவாதிகள்தான் வெற்றி பெறணும் என்று பெரும்பான்மையான ஆஃப்கானிஸ்தானியர்கள் நினைப்பதாகவே எண்ணவேண்டும்.

  சௌதி, அரசு மத அடிப்படை வாதத்தைவிட்டு வெளியில் வருகிறது என்றே நான் நினைக்கிறேன். அது எவ்வளவு தூரம் sustainable என்று பார்க்க வேண்டும்.

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  // அந்த அந்த நாட்டு மக்கள்,
  எது தங்களுக்குத் தேவை என்பதில்
  clearஆக இருக்கணும்,
  அரசியல் தலைவர்கள் அல்லர்.

  ஆஃப்கானிஸ்தான், தங்களுக்கு
  தாலிபான்கள்தான் தேவை என்று
  நினைப்பதாகவே இதனைக் கருதணும்.

  அல்லது மத அடிப்படைவாதிகள்தான்
  வெற்றி பெறணும் என்று
  பெரும்பான்மையான ஆஃப்கானிஸ்தானியர்கள்
  நினைப்பதாகவே எண்ணவேண்டும். //

  ஆப்கானிஸ்தானில் ஜனநாயக முறையில்
  தேர்தல்கள் நடந்து, தாலிபான்கள்
  தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தால் தான்
  நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்க முடியும்.

  காட்டுமிராண்டித்தனமான ஒரு கும்பல்,
  ஆயுதங்களை வைத்துக்கொண்டு
  ஆட்சியை பிடித்தால், அதை பெரும்பாலான
  மக்களின் விருப்பம் என்று நீங்கள்
  நினைப்பது எப்படிப் பொருந்தும்….?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   //ஆப்கானிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடந்து, தாலிபான்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தால் தான்//

   இதுபற்றி எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. தற்போது பாஜக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதற்குப் பெரும்பான்மை இருக்கிறது.

   இப்போது பாஜக, இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் ‘சிறுபான்மையினர்’ அந்தஸ்து கிடையாது என்று சட்ட ரீதியாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி அது சட்டத்தின் கண்களில் நிறைவேற்றப்பட்டால், அதை நாம் எல்லோரும் ஏற்கலாமா? சட்டப்படி, பாஜக அரசு பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்பதால், சிறுபான்மையினருக்கு எந்தவிதச் சலுகையும் கிடையாது என்று அறிவித்தால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

   திமுக அரசு பதவிக்கு வந்தது சிறுபான்மையினரின் வாக்குகளால் என்பதால், அவர்களைத் திருப்திப் படுத்த, இந்துக் கோவில்களின் பாரம்பர்யத்தை உடைக்க நினைப்பதும், இந்துக் கோவில்களின் இடங்களை மாற்று மதத்தனரின் நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுப்பதும் எப்படி ஏற்கத்தக்கதாக இருக்கும்?

   ‘இந்து அறநிலையத்துறை’ என்பதையே ‘இந்து’ என்ற வார்த்தையை திமுக அரசு எடுத்துவிட்டது. இதன் அர்த்தம் என்ன? இந்துக் கோவில்களை மற்றவர்களுக்குச் செலவழிக்கும் வருவாய் வரும் இடங்களாக திமுக அரசு கருதுவதையும், தங்கள் ஆட்களுக்குப் பதவி தரும் ஒரு இடமாகவும் திமுக அரசு கருதுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

   • arul சொல்கிறார்:

    There is always chances for people go for big agitation against it behind the law. But is it possible in TALIBAN rule?

    • புதியவன் சொல்கிறார்:

     We are talking about developments. In China, nobody can raise their voice and the development is in full swing. Even Indian communist party is appreciating China. In India, even for right law, self centered anti Indian elements/parties can agitate and stall the progress. Parties can confuse and ensure that a law, which is right, can’t be implemented or people can be given wrong hopes.

     Which is good for a country?

     Can you also compare TALIBAN rule and British rule in India? Both are absolutely same in standards. (in your term, against the majority people’s will). எப்படி நாம் தாலிபான்களை மட்டும் குறை சொல்லலாம்? பிரிட்டிஷ் ஆட்சியும் அதேபோலத்தானே.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நான் எழுப்பி இருந்த கேள்வி-

    ———
    காட்டுமிராண்டித்தனமான ஒரு கும்பல்,
    ஆயுதங்களை வைத்துக்கொண்டு
    ஆட்சியை பிடித்தால், அதை பெரும்பாலான
    மக்களின் விருப்பம் என்று நீங்கள்
    நினைப்பது எப்படிப் பொருந்தும்….?

    —-

    பொருந்தாத ஒரு கருத்தை சொன்னதை
    ஒப்புக்கொள்ள உங்களுக்கு விருப்பமில்லை
    என்றால் போகட்டும் விட்டு விடுங்கள்.

    சங்கடமான சமயங்களில் பதில்களை
    தவிர்ப்பது உங்களுக்கு ஒன்றும் புதிதல்லவே…!!!

    ஆனால், அதை திசை திருப்புவதற்காக
    என்னை நோக்கி ஒரு “ஸ்பின்”னை போட்டு,
    பாஜக’வையும் தாலிபானையும் ஒப்பிடும்
    பாவத்தை ஏன் செய்கிறீர்கள்….!!!!

    ————-
    நீங்கள் போடும் ஸ்பின் –

    // இப்போது பாஜக, இஸ்லாமியர்களுக்கும்
    கிறிஸ்துவர்களுக்கும் ‘சிறுபான்மையினர்’
    அந்தஸ்து கிடையாது என்று சட்ட ரீதியாக
    பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி அது
    சட்டத்தின் கண்களில் நிறைவேற்றப்பட்டால்,
    அதை நாம் எல்லோரும் ஏற்கலாமா?

    சட்டப்படி, பாஜக அரசு பெரும்பான்மை
    பெற்றிருக்கிறது என்பதால், சிறுபான்மையினருக்கு
    எந்தவிதச் சலுகையும் கிடையாது என்று
    அறிவித்தால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்? //

    ——
    உங்கள் “ஸ்பின்”னை நான் புரிந்து
    கொண்டேன் –

    கவலையே படாதீர்கள்….
    “அத்தை”க்கு மீசை முளைக்கும் போது
    அவரை எப்படி அழைப்பது என்பதை
    ” மீசை முளைக்கின்ற சமயத்தில்”
    யோசித்துக் கொள்ளலாம்.

    இப்போதைக்கு – நீங்கள் தயவுசெய்து –
    பாஜகவை, தாலிபானுடன் ஒப்பிடாமல்,
    தாலிபானைப்பற்றி மட்டும் பேசினால்
    போதுமென்று நினைக்கிறேன்….

    சரி தானே….?

    இப்போதாவது சொல்லுங்களேன் –

    காட்டுமிராண்டித்தனமான ஒரு கும்பல்,
    ஆயுதங்களை வைத்துக்கொண்டு
    ஆட்சியை பிடித்தால், அதை பெரும்பாலான
    மக்களின் விருப்பம் என்று நீங்கள்
    நினைப்பது எப்படிப் பொருந்தும்….?

    .
    வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  // எப்படி நாம் தாலிபான்களை மட்டும்
  குறை சொல்லலாம்? பிரிட்டிஷ் ஆட்சியும்
  அதேபோலத்தானே. //

  இந்தக் கேள்வி உங்களுக்கே அபத்தமாகத்
  தெரியவில்லை…?

  முதல் பாயிண்ட் – பிரிட்டிஷார் இந்தியாவுக்கு
  அந்நியர்; தாலிபான் ஆப்கன் மக்களிலேயே
  ஒரு பிரிவினரால் உருவாக்கப்பட்டது.

  இரண்டையும் எப்படி ஒப்பிடலாம்…?
  முதல் பின்னூட்டத்தில் பாஜக-வையும்,
  தாலிபானையும் ஒப்பிட்ட மாதிரி…!!!

  இரண்டாவது பாயிண்ட் –

  பிரிட்டிஷ் ஆட்சியை நாம் குறை
  சொல்லாமலா இருந்தோம்…?
  எத்தனையெத்தனை போராட்டங்கள்,
  சிறைவாசங்கள், உயிர்த்தியாகங்கள்…?

  ——-

  பொதுவாகவே – விதண்டாவாதம் செய்யாமல்,
  கருத்துகளின் அடிப்படையில்
  நேரடியாகவே விவாதிப்பது தான் நல்லது
  என்பது என் கருத்து….

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   //முதல் பின்னூட்டத்தில் பாஜக-வையும், தாலிபானையும் ஒப்பிட்ட மாதிரி…!!!// – இது உங்கள் கருத்து. என் கருத்தல்ல.

   நீங்கள் எழுதியது என்ன? ஜனநாயகமாக தாலிபான்கள் வெற்றி பெற்றிருந்தால். என்று சொல்லியிருக்கீங்க. இப்போ, ஆயுதங்கள் இருந்தும், ஆப்கானிய ராணுவம் ஒவ்வொரு இடங்களிலும் தாலிபான்களுக்கு எதிராகப் போராடவில்லை. அப்படி என்றால், அவர்களுடைய ஆதரவு தாலிபான்களுக்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம். அவர்களும் மக்களில் ஒரு பகுதிதானே. தாலிபான்களுக்கு ஆயுதங்கள் எப்படி வந்தது? எப்படி அமெரிக்கா, தோஹாவில் வைத்து ஒரு ஒப்பந்தம்/understandingக்கு வந்தது? Who were them, for USA to come to an understanding? ஏன் உடனே ரஷ்யா, தாலிபான்களை அங்கீகரிக்கிறது? பாகிஸ்தான், சைனாவிற்கு உள்நோக்கம் இருக்கிறது. ஏன் ஒரு பெரிய நாடான அமெரிக்கா, இவ்வளவு வேகமாக ஒரு நாட்டை விட்டுவிட்டு ஓட வேண்டும்?

   சரி… பிரிட்டிஷார் அந்நியர் என்ற உங்கள் கண்டுபிடிப்பை நான் ஒத்துக்கொள்கிறேன். பத்து பிரிட்டிஷார், பத்தாயிரம் இந்தியர்களை மிரட்டி அடிமைப்படுத்தினார்கள் என்று நீங்கள் எழுதுவதே அபத்தமாக இல்லையா? அது சாத்தியமாகுமா? பத்து பிரிட்டிஷாரும், ஆயிரம் இந்தியர்களும் சேர்ந்து, பத்தாயிரம் இந்தியர்களை ஆக்கிரமித்தார்கள் என்று எழுதுவதுதானே நியாயம். அந்நியக் கைக்கூலிகளெல்லாம் சுதந்திர இந்தியாவில் ‘தலைவர்’ அந்தஸ்துக்கு வந்துவிடவில்லையா? யோசியுங்கள்…

   தாலிபான் நிகழ்வில் நிறைய விஷயங்கள் வெளிவரவில்லை. நாம் மிக வேகமாக இதனை விவாதிப்பது உள் விஷயங்களை வெளிக்கொணராது.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வாதம், விவாதம் என்றால் –
  நான் எப்போதும் தயார்…

  ஆனால் விதண்டாவாதம்…..?

  ஹுஹூம்….
  You are the best in that – I agree.

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தாலிபான்கள் என்ற அமைப்பு உருவானது பாகிஸ்தான்
  ISI என்ற உளவுத்துறை மூலம். பணம் என்னவோ
  அரேபியாவில் இருந்து வந்தது . சவுதி அரசர்
  மட்டுமன்றி மற்ற ஷேக்குகளும் கொடுத்தார்கள் .

  தாலிபான் ஆட்சி புரிந்தார்கள் என்று சொல்ல முடியாது .
  துப்பாக்கி ஏந்தி முதலில் சோவியத் ரஷ்யாவையும் ,
  பின் அமெரிக்க , நேச நாட்டு படைகளையும் எதிர்த்து
  போர் புரிந்தது .

  தாலிபான்கள் கையில் இப்போது ஆப்கான் சென்று விட்டது .
  இதில் யாரும் மக்கள் கருத்தை கேட்கவில்லை .
  அமெரிக்க படையெடுத்த போதும் அப்படியே !

  அமெரிக்கா இப்போது நாட்டை விட்டு வெளியேறி உள்ளது .
  17 தேதி தாலிபான்கள் பிரஸ் மீட் இருந்தது .
  அதில் சொன்னது .
  பெண்கள் வேலை ஏற்கலாம் .
  ரஷ்யா , ஈரான் ,சீனா போன்ற நாடுகள் கூட பேச்சு
  நடைபெறுகிறது .
  பாகிஸ்தான் பற்றி பேச்சு இல்லை .
  சீனாவில் உள்ள சிங்க்யாங்க் மாநிலம் ஆப்கான்
  அருகே உள்ளது . அங்கே உயிகுர் மக்கள் மீது
  சீனா போர் போல நடவடிக்கை எடுத்து உள்ளது .
  ரஷ்யாவிற்கும் ஆப்கான் இடையே உள்ளவை
  எல்லாம் முஸ்லீம் நாடுகள் .
  ஈரான் ஷியா பிரிவு முஸ்லீம் .

  தாலிபான்கள் இந்த நாடுகள் உள்ளே
  தலையிட மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்கள் .

  அமெரிக்கா இவ்வளவு கேவலமாக தோற்கும் என
  யாரும் எதிர்பார்க்கவில்லை . வெறும் 11 நாட்களில்
  ஆப்கான் முழுவதும் அவர்கள் கையில் !

  • புதியவன் சொல்கிறார்:

   //அமெரிக்கா இவ்வளவு கேவலமாக தோற்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை .// – மெய்ப்பொருள்….. அமெரிக்காவின் அஜெண்டா என்ன? (1) அமெரிக்க மண்ணில் பயங்கரவாதம் புரிந்தவர்களை, அதற்குக் காரணமானவர்களை முழுக்க ஒழிப்பது (2) உலகில் ஜனநாயகம் இருந்தால் (நாடுகளில்) அமெரிக்க வியாபாரம் செழிக்கும், அமெரிக்காவிற்கு நிறைய லாபம் (3) நில வளங்களைக் கொண்டுள்ள நாடுகளில் (கனிம வளம்), அமெரிக்க நலனுக்காக கனிம வளங்களை வாங்கிக்கொள்வது (சுலபமாக, போட்டியின்றி). அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத, அமெரிக்காவிற்குச் சாதகமான அரசியல் தலைமையை அந்த அந்த நாடுகளில் ஏற்படுத்துவது, இல்லாவிட்டால் ஆளும் அரசிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி (தங்கள் நலன் சார்ந்த அமைப்புகள் மூலம் பணம் வழங்கி) முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்ப்பது. (ஈராக்கில் அமெரிக்கா செய்தது இதனைத்தான்)

   பின்லேடன் வகையறா, தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக, அவர்கள் ஆப்கானிஸ்தானில் நுழைந்தார்கள். பயங்கரவாதிகளை (அதாவது தங்களுக்கு எதிர்ப்பானவர்களை) விரட்டி, தங்களுக்கான அரசை அமைத்தார்கள். நிறைய செலவழித்தார்கள் (பில்லியனில்). 20 ஆண்டுகள் ஆனது. ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆப்கானிய மக்களுடைய எண்ண ஓட்டம் தெரியவில்லை. (இடையில் தாலிபான்களுக்கு, அமெரிக்க எதிர்ப்பு நாடுகளிடமிருந்து மறைமுக உதவி தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருந்தது). எதற்கு ஒரு உபயோகமும் இல்லாமல் அமெரிக்காவிற்கும் லாபம் இல்லாமல், அமெரிக்கா பணத்தை இழக்க வேண்டும் என்று நினைத்த தற்போதைய அமெரிக்க அதிபர், ஆப்கனைவிட்டு வெளியேறும் முடிவை எடுத்தார். இதில் லாபம், தனக்கு உபயோகமில்லாத விஷயத்தில் அமெரிக்கப் பணம் வீணாவதைத் தடுப்பது. (தொடர்ந்து போர் இருந்தால் அமெரிக்க ஆயுத வியாபாரிகளுக்கு லாபம். அதனால் அதனை ஆதரிக்கும் கட்சிக்கு அவர்கள் நிறைய தேர்தல் உதவிகள் அளித்திருக்க வேண்டும்).

   அமெரிக்கா நினைத்தது, தனக்கு கௌரவமாக, தங்கள் உளவு அமைப்புகள் கூறுவது போல 90 நாட்களாவது தாலிபான்கள் காபூலைப் பிடிக்க ஆகும் என்பது. ஆனால் அமெரிக்காவிற்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு வாரத்திலேயே ஆப்கானை தாலிபான்கள் பிடித்துவிட்டது. இராணுவம் போரிடவில்லை, மக்கள் வீதிக்கு வரவில்லை என்பதை நாம் கண்டோம். அதன் அர்த்தம், அமெரிக்காவை, தங்களைக் காக்க வந்தவர்களாக ஆப்கானிய மக்கள் எண்ணவில்லையோ என்பதைத்தான்.

   இன்னும் சில மாதங்களில் நிலைமை தெளிவாகத் தெரிந்துவிடும்.

   எனக்கென்னவோ, அமெரிக்கா தாலிபன்களுக்கு எதிராக இதுவரை இருந்தது, பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறது என்பதற்காக பாகிஸ்தான் எதிர்ப்பு நிலை எடுத்தது, இந்தியாவிற்குச் சாதகமாக இருந்தது, ஒருவேளை அமெரிக்காவைவிட இந்தியாவிற்குத்தான் கூடுதல் சாதகமாகிவிட்டது என அமெரிக்கா கருதுகிறதோ என்னவோ. இந்த இடைவெளியில் இந்தியத் தலைமை உலகளாவிய ரெகக்னிஷன் பெற்றுவிட்டது, அதனால் அமெரிக்காவிற்கு பைசா பிரயோசனமில்லை என்று நினைக்கிறதோ என்னவோ

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.