நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்காக – தற்போது (16/08/21) கிடைத்த ஒரு புகைப்படத்தையும், வீடியோவையும் இங்கே பதிவு செய்கிறேன்.
ஒவ்வொரு வருடமும். இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15அன்று. சிதம்பரம் நடராஜர் கோவிலில் –
– அதிகாலையில் நமது தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள் பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்கிறார்கள்.







இன்று காலை (16/08/21) கிடைத்த ஒரு வீடியோவையும்,
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் மூவர்ணக்கொடி
பறக்கும் புகைப்படத்தையும் இடுகையின் மேற்பகுதியில்
புதிதாக சேர்த்து பதிவு செய்திருக்கிறேன். ஏற்கெனவே
இடுகையை பார்த்துவிட்ட நண்பர்கள் இந்த அற்புதமான
காட்சிகளையும் அவசியம் காணவேண்டுமென்று விரும்புகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்