
பல வருடங்கள் மேஜர் சுந்தரராஜன் (1925-2003), சிவாஜிக்கு மிகவும்
நெருக்கமானவராக இருந்தார்….ஏதோ காரணங்களால், சிவாஜிக்கும் இவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, நெருக்கம் குறைந்தது….
அதன் பின்னர் எம்.ஜி.ஆருடன் நிறைய படங்களில் நடித்தார்…..
மேடை நாடகங்களிலும்,
திரைப்படங்களிலும், இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களால்
உருவாக்கப்பட்ட பல பாத்திரங்களுக்கு சுந்தரராஜன் உயிர் கொடுத்தார், மேஜர் சந்திரகாந்த் நாடகத்தின் மூலம் இவர் பெயருடன் மேஜர் சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் மேஜர் சுந்தரராஜன் என்றே அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். அவர்களுடனான தனது நினைவுகள், அனுபவங்களை
இந்த காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்…