
1954-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்ட
படம் “சுகம் எங்கே…? “
கதை, வசனம் – கவிஞர் கண்ணதாசன்.
அது ரிலீஸ் ஆகி 2 வாரங்களில் ரிலீசான படம்
“அம்மையப்பன்” – இதன் கதை, வசனம்
கலைஞர் கருணாநிதி.
அந்த காலத்தில் இந்த திரைப்படங்களையொட்டி,
நிறைய சண்டைகள் நடந்தன… காரணம் இரண்டும்
ஒரே கதை… அம்மையப்பன் சரித்திரப்படமாகவும்,
சுகம் எங்கே சமூகப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.
இந்த பிரச்சினையின் அடிப்படையென்னவென்றால்,
இவை இரண்டுமே ஒரு ஆங்கிலப்படத்தை தழுவி
எடுக்கப்பட்டவை… கண்ணதாசன், கருணாநிதி
இருவருமே மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றி
வந்தபோது, இந்தக் கதையைப்பற்றி யோசித்து,
விவாதித்திருக்கின்றனர்… பின்னர் இருவருக்கும்
தொழில் ரீதியாக போட்டி ஏற்பட்டு, பிரிந்தனர்….
தனித்தனியாக அதே கதையை டெவலப் செய்தனர்….!!!
மோதலுக்குப் பிறகு வெளிவந்தவை இந்த 2 படங்களும்…
அம்மையப்பன் -தோல்விப்படம் ஆனது.
சுகம் எங்கே – பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும்,
ஓரளவு பேசப்பட்டது. 2-3 பாடல்கள் நன்றாக
வந்திருந்தன….
இந்தப்பாடலை பாடியவர்கள் – ஜிக்கி, மற்றும்
நடிப்பிசைப்புலவர் என்றழைக்கப்பட்ட – கே.ஆர்.ராமசாமி.
இயற்றியவர் – கண்ணதாசன்.
“சுகம் எங்கே” படத்திற்கு இசையமைப்பு –
விஸ்வநாதன், ராமமூர்த்தி…
எனக்கும் …..இளையராஜா அவர்களுக்கும் – மிகவும் பிடித்த பாடல் இது …!!!
எம்.எஸ்.வி. மறைவிற்குப் பின் ராஜா நடத்திய நிகழ்ச்சியில்
இந்தப்பாடலையும் சேர்த்திருந்தார்….