
இந்தி(ய) திரைப்பட சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு
படம் 1961- ல் வெளிவந்த மொகலே ஆஜம் (Mugal-e-Azam )…
ஏன் அப்படி….?
சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சரித்திர பாத்திரமான
அக்பரையும், அவர் மகன் சலீமையும் (பிற்காலத்தில் ஜஹாங்கீர்…)
கற்பனை பாத்திரமான அனார்கலி என்கிற அழகிய நாட்டிய
மங்கையையும் வைத்து –
1922-ல் எழுதப்பட்ட கதையை,
1944-ல் வாசித்த திரைப்பட இயக்குநர் ஆசிஃப்,
1950-களின் துவக்கத்தில், புகைப்பட ஷூட்’டுடன் துவக்கி,
தட்டுத்தடுமாறி, ஒருவழியாக 1960-ல் ரிலீஸ் செய்த ஒரு
பிரம்மாண்டமான படம்.
துவக்கிய படத்தை, அகலக்கால் வைத்ததால், முடிக்க முடியாமல்
பல ஆண்டுகள் திணறினார் ஆசிஃப். கடைசியாக முடிக்கும் தருவாயில்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள்
உதவியுடன் வெளியிட்டார்… பிரதியாக தமிழில் dubbing உரிமையை
வாசன் பெற்று, “அக்பர்” என்கிற பெயரில் 1961-ல் வெளியிட்டார்…
பிரம்மாண்டமான அரண்மனை காட்சிகள், முதலில் சில பகுதிகள்
மட்டும் கலரில் – பின்னர் மீண்டும் ஒரு முறை முழுப்படமும்
டிஜிட்டல் உதவியுடன் கலரில் – 2004-ல் வெளியிடப்பட்டது.
இரண்டு முறையும் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றது. இதை ஹிந்திப்படம் என்று கூறுவதை விட உருது மொழிப்படம் என்று தான் சொல்ல வேண்ட்
இந்தப்படத்தைப்பற்றியும், அனார்கலி கதையைப் பற்றியும்
நிறையவே சொல்லலாம்…பின்னர் நேரம் வரும்போது பார்ப்போமே….
இப்போதைக்கு – இதில் வரும் ஒரு அற்புதமான பாடல், நடனக்காட்சி.
நௌஷாத் இசை… அனார்கலியாக மதுபாலா, அக்பராக ப்ரித்விராஜ்கபூர்,
சலீமாக திலீப்குமார்….
ப்யார் கியா தோ டர்னா க்யா -?
சரியான மொழிபெயர்ப்புடன் தமிழில் பாடல் வந்தது…
“காதல் கொண்டாலே பயமென்ன….? “
காட்சி கீழே – திரையை பெரிதாக்கிப் பாருங்கள்…
ஒரு காட்சியில், கண்ணாடிகளில் ஏகப்பட்ட உருவங்கள் தெரிவது,
அற்புதமான கற்பனை… காமிரா நேர்த்தி..
(அனார்கலி உண்மைக்கதை என்றல்லவா நினைத்திருந்தேன்!!)
இந்தப் படத்தை 80களில் சினிமாத்தியேட்டரில் பார்க்கச் சென்றபோது கறுப்பு வெள்ளைப் படம் என்றே நினைத்துச் சென்றேன். இந்தப் பாடல் திரையில் வண்ணக்கலவையில் தோன்றியபோது நான் அடைந்த ஆச்சரியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. எல்லாம் முன்பே இலங்கை வானொலியில் கேட்டுக் கேட்டு ரசித்திருந்த அற்புதமான பாடல்கள். இடைவேளைக்குப் பின் முழுப்படமும் வண்ணத்தில்தான் இருந்தது. குறிப்பாக இந்தப் பாடலைப் பார்க்கப் பார்க்கச் சலிக்காது எனக்கு! அரண்மனை அலங்காரங்கள், அப்பப்பா! அனார்கலி, “பயமென்ன?” என்ற வரிகள் வரும்போது தலையை நிமிர்த்தி அதைக் கூறுவதுபோல் அபிநயம் பிடிப்பது கதைக்கு மிகவும் பொருந்தும்!
இந்த படம் பார்க்க போய் பாதி வசனங்கள் சுத்தமாக
புரியவில்லை .
உ -ம் அக்பர் ராஜா வந்ததும் கட்டியம் கூறுகிறார்கள் .
படம் முழுவதும் நன்றாக உருது தெரிந்தால் மட்டுமே
ரசிக்க முடியும் .
படத்தின் தயாரிப்பாளர் ஒரு பார்சி .
ஷாபூர்ஜி பலோன்ஜி – மிக பெரிய பணக்காரர் .
இதை கலரில் எடுத்தது அவர் பேரன் ஷாபூர்ஜி !
முக்கியமானவர் நவுஷாத் !
படம் பார்க்க போய் பாடலை கேட்டு வந்தேன் .
கருப்பு வெள்ளையில் அருமையாக இருக்கும்.
திலிப் குமார் நடிப்பு அருமை .
இந்த பாடல் இடம் பெற்றது நவுஷாத் பண்ணிய வேலை .
ஒரு கதக் பாடல் இடம் பெற வேண்டும் என எண்ணினார்.
அதற்கு பிருகு மஹராஜ் வைத்து நடனம் இருக்க வேண்டும் .
அதற்காக கதையை மாற்றினார்கள் .
அக்பர் கோகுலாஷ்டமி கொண்டாடுவது போல
காட்சி அமைத்தார்கள் .
அக்பர் ராணி ஒரு இந்து – ஜோதா பாய் .
ஒரு இசையமைப்பாளர் இது போல செய்ய முடியுமா ?
நவுஷாத் அதை செய்தார் .
மதுபாலாவிற்கு கதக் தெரியாது .
அதனால் என்ன ? வேறு ஒருவரை வைத்து
எடுத்து இருக்கிறார்கள் .
எஸ்ட்ராக்கள் அருமையாக ஆடுகிறார்கள் .
அவர்கள் எல்லாம் பிருகு மகாராஜ் மாணவர்கள் .
ஆடும் ஒரு சில பேர் ஆண்கள் !
பாடல் கீழே பார்க்கவும் .
மெய்ப்பொருள்,
நல்ல ரசனையோடு எழுதி இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி…
வடக்கே இருந்தீர்களா…?
ஹிந்தி படம், பாடல்கள் பற்றிய அனுபவம்
நிறைய தெரிகிறதே…?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்