அறிக்கை – எந்த கலரில் இருந்தாலும் சரி வரவேற்போம் ……..!!!ஆனால் பட்ஜெட் ….???

தமிழகத்தின் நிதியமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்….
கருப்பு வண்ண எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டு, வெள்ளை அறிக்கை
என்று சொல்லப்படும் ஒரு அறிக்கை….

விஷயத்திற்கு வருவோம் –

அறிக்கை பூராவும் முந்தைய அதிமுக அரசை குறை சொல்கிறது.
அதில் உண்மையும் உண்டு, உண்மை அல்லாத அரசியலும் உண்டு.
ஊழல்கள் என்று சொல்லப்படுவது ஒரு பக்கம்….

ஆனால், அதிமுக அரசு வரிகள் போடாததை –
நிர்வாகத்திறன் இன்மை என்று குறை கூறுகிறார்.

இது குறித்து – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சொல்வதை
கொஞ்சம் பார்ப்போமே…

“” தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்

தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தின் பொதுக்கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகவும்,
மின்வாரியம், போக்குவரத்து கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2

லட்சம் கோடியாகவும்
அதிகரித்து விட்டதாக அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன்
அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர், கடன் சுமையில் இருந்து தமிழகத்தை

மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான
செயல் திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பார் என்று
நம்புவோம். மானியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; பயனற்ற இலவசங்கள், மானியங்கள் கண்டிப்பாக

தவிர்க்கப்பட வேண்டும்.
அரசின் உதவிகள் தேவையானோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.. “”

நமது கருத்து –
முந்தைய ஆட்சியில், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த
திமுக-வுக்கு, தமிழக அரசின் நிதிநிலவரம் குறித்து 100 சதவீதம்
தேர்தலுக்கு முன்னதாகவே தெரியும்… இருந்தாலும், பல கோடி ரூபாய்கள்
செலவழிக்க வேண்டிய பல இலவச திட்டங்களை திமுக தனது
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக தந்திருந்தது.

பெண்கள் அனைவருக்கும் இலவச பஸ் பயணம்,
ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள் அனைவருக்கும்
மாதம் 1000 ரூபாய் ரொக்க உதவி.
LPG சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்… என்கிற ரீதியில்
முழுக்க முழுக்க பணம் சம்பந்தப்பட்ட வாக்குறுதிகள் எக்கச்சக்கம்.

5.7 லட்சம் கடன் இருக்கக்கூடிய ஒரு அரசை நிர்வகிக்கும்போது,
இத்தகைய இலவச திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்
என்று திமுக நினைத்தது….?

ஆட்சியைப் பிடிக்க, இலவச வாக்குறுதிகளை நிறைய தந்தது.
இப்போது பொறுப்புக்கு வந்த பிறகு அவற்றை எப்படி நிறைவேற்றுவது
என்று திணறுகிறது.

ஊழல்கள் ஒருபுறம் இருக்க –

பஸ் கட்டணத்தை உயர்த்தாதது …
மின் கட்டணத்தை உயர்த்தாதது ….
சொத்து, குடிநீர் -வரிகளை உயர்த்தாதது

ஆகியவற்றிற்காக அதிமுக ஆட்சியை கடுமையாக சாடி இருக்கிறார்
திமுக நிதியமைச்சர்….

( அதிமுக ஆட்சியில் -பஸ் மற்றும் மின் கட்டணங்களை உயர்த்தாததும்,
சொத்து வரியை மாற்றாததும் – நிர்வாகத்திறமை இன்மையால்
நிகழ்ந்தவை அல்ல…. விலையை உயர்த்தினால், மக்களின் எதிர்ப்பை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்… மக்களுக்கு பிடிக்காத அரசாக இருக்க
விரும்பாததால், மக்களுக்கு இணக்கமாக செயல்படவே அதிமுக அரசு
முனைந்ததால் நிகழ்ந்த விளைவுகள் தான் அவை…!!! )

கட்டணங்களை உயர்த்தாதற்காக, அதிமுக அரசை நிதியமைச்சர்
கடுமையாக சாடுவதன் பொருள் என்ன…?

அடுத்து சில நாட்களில் வெளிவரப்போகும் தமிழக அரசின்
பட்ஜெட்டில், இவற்றிற்கான கட்டணங்கள், வரிகள், உயரும் என்பதா…?

ஆனால், நிதியமைச்சர் வேறு மாதிரி சொல்கிறார் –

இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

கூறுகையில் –

அரசியல் துணிச்சலும், நிர்வாக திறமையும் இருந்தால்
நிச்சயம் இந்த கடன் சுமையை சரி செய்யலாம்.

மேலும் வரி வசூலில் உள்ள சிஸ்டங்களை மாற்ற வேண்டும்.

கிளப் ஹவுஸில் வீடு வைத்திருக்கும் பணக்காரருக்கும் ஒரே சொத்து வரி, எங்கோ ஒரு

மூலையில் வீடு வைத்திருக்கும்
ஏழைக்கும் ஒரே வரி வசூலிக்கப்படுகிறது.
அது போல் குழாய் இணைப்பும் அதே போல்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே

வரியாக உள்ளது.
இதை மாற்ற வேண்டும்.

யாரெல்லாம் வரி உயர்வை கட்ட இயலுமோ அவர்கள் மீது
வரியை உயர்த்த திட்டங்களை வகுப்போம்….

கடன் வாங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த
கடன் வாங்குவது, பின்னர் திட்டங்களுக்கு கடன் வாங்குவது
என கடன் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்காமல்
ஆட்சி நடத்த முடியாது. ஆனால் வாங்கிய கடனை திருப்பி எடுக்கும் திட்டங்களில் பயன்படுத்த

வேண்டும்.
தொழில் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும்.
அப்போதுதான் அரசால் வட்டி செலுத்த முடியும் ….
-என்று
அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நிதியமைச்சர் சொல்வதை அவரது பட்ஜெட் அப்படியே
பிரதிபலிக்குமேயானால், எந்த கலரில் அது இருந்தாலும்,
நாம் நிச்சயம் வரவேற்போம்… !!!

இல்லையேல்…..?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அறிக்கை – எந்த கலரில் இருந்தாலும் சரி வரவேற்போம் ……..!!!ஆனால் பட்ஜெட் ….???

 1. புதியவன் சொல்கிறார்:

  நான் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன். கம்பெனி நன்றாகப் போகவில்லை. அதனை மீட்டெடுக்க, அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த 4 பேரை கம்பெனி வேலையிலிருந்து எடுத்தது. பிறகு அதைவிட அதிக சம்பளத்தில் (மொத்தமாகக் கூட்டினால்) ஒரு கன்சல்டண்டை நியமித்தது. கம்பெனியின் வருவாய் மோசமாக இருந்தால் கன்சல்டண்ட் என்ன செய்ய முடியும்?

  தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாததனால் அரசுக்கு நஷ்டம்… என்றெல்லாம் வெள்ளை அறிக்கை சொல்கிறது. உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்து நடத்தவிடாமல் செய்தது திமுக. கட்டணங்களை உயர்த்தாதனால் அரசுக்கு நஷ்டம் என்று அறிக்கை சொல்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே இலவச பஸ் பிரயாணம். ஆட்சிக்கு வந்த உடனேயே பதவிகள், பொருளாதார புளி, வெளிநாட்டு கன்சல்டண்ட்ஸ். இப்போது ஊராட்சி தேர்தல் வரப்போகிறது என்ற உடனேயே நகைக்கடன் தள்ளுபடி, 1000 ரூபாய் என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறது. தன் மருமகன் பிஸினெஸுக்காக இலவச தொலைக்காட்சி கொடுத்தவர்கள் இப்போது அரசு நிதிநிலையைப் பற்றி ரொம்பவே கவலைப்படுகிறார்கள்.

  //பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே வரியாக உள்ளது. இதை மாற்ற வேண்டும்.// – ஹா ஹா ஹா. நல்ல நகைச்சுவை. என்னுடைய ஆதங்கமெல்லாம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே சட்டம் implement பண்ணப்படுவது இல்லையே, பணக்காரர்களுக்கு சட்டம் சலுகை எதுவுமே கொடுக்கக்கூடாதே என்பதுதான் (ஏழையால் சுப்ரீம் கோர்ட், வாய்தா என்றெல்லாம் அரசை ஏமாற்ற முடியுமா?)

 2. Raghuraman சொல்கிறார்:

  Sir, some how I relate this to the Sundara Ramaswamy story.Sengamalam (DMK) is now bothered about Gowrikutty (ADMK) taking bath and is going to forget her own bathing.

  They will say that all the promises will not be met, as told in white paper.

 3. Selvadurai Muthukani சொல்கிறார்:

  இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கமே திமுகவின் ஊதாரித்தனமான இலவசங்களுக்கு பணம் ஒதுக்குவதற்கு வாய்ப்பில்லை என்பதனை பறைசாற்றத்தானே தவிர மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த அல்ல. நிர்வாகத்தை சீர்படுத்தி ஊழலற்ற திறமையான நிர்வாகத்தின் மூலம் இந்த பொருளாதாரப் பின்னடைவிலிருந்து விடுபட வாய்ப்பிருந்தாலும், திமுகவினால் அதை செய்ய முடியாது. “தேர்தலுக்கு உங்களால் எவ்வளவு பணம் செலவிடமுடியும்?” என்ற கேள்வியின் அடிப்படையிலேயே போட்டியிட வாய்ப்புப் பெற்றவர்கள் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே முன்னெடுப்பார்கள். மக்கள் நலம் என்பது கிஞ்சித்தும் கருதப்பட வாய்ப்பில்லை. எவ்வளவுதான் ஸ்டாலின் முயன்றாலும் அவர் மகன் மருமகன் உள்பட யாரும் அவரைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே என்னுடைய கணிப்பு. கடவுள்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்!!!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.