

ஓர் இரவு படம் வெளியானது 1951-ல்.
கதை, வசனம் எழுதியவர் அறிஞர் அண்ணா என்றாலும் கூட
இந்தப்படம் நாடகமாக வெளிவந்தபோது பெற்ற வெற்றியை
பெறவில்லை…
ஆனால், இந்தப்படத்தில் – பாரதிதாசன் எழுதிய “துன்பம் நேர்கையில்..”
என்ற பாடல் இடம்பெற்று மிகவும் பிரபலமானது. இப்பாடலை
படத்தில் – எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர்.
இந்த பாரதிதாசனின் பாடலுக்கு, தனிப்பட இசையமைத்தவர்
திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள்.
பின்னால், அந்தப் பாடலை இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் அவர்கள்
“ஓர் இரவு” திரைப்படத்திற்காக, அதே மெட்டுடன் பயன்படுத்திக்கொண்டார்.
இந்தப்பாடல் புகழ்பெற அந்தப்படமும், படம் புகழ்பெற இந்தப்பாடலும்
காரணமாகியது….!!!
ஓர் இரவு படத்தில் வரும் பாடல் காட்சியின் காணொலியை
கீழே தந்திருக்கிறேன்….
அதற்கு முன்னால், இந்தப்பாடலுக்கு இசையமைத்த அனுபவத்தை
தேசிகர் அவர்களே சொல்லும் ஒர் காணொளி ….
தேசிகர் விளக்கம் மிக அருமை .
இசை மட்டுமல்லாமல் தமிழும் !