தங்கர் பச்சான் வீட்டுக்கு ஓடிய மின் வாரிய அதிகாரிகள்…..இது பத்திரிகையாளர்கள் கதைக்கும் பிரச்சினை மட்டுமல்ல -!!!

கீழே இருப்பது இன்று மாலை வெளியாகியுள்ள ஒரு செய்தி –


தங்கர்பச்சான் வீட்டுக்கு ஓடோடிய மின் வாரிய அதிகாரிகள்…
இதற்கு காரணம் அந்த ஒற்றை கேள்வி..! : Sunday, August 8, 2021,

சென்னை: மின்கட்டணக் கொள்ளை முடிவுக்கு வருமா என
சினிமா இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,
மின்வாரிய அதிகாரிகள் அவரது வீட்டுக்கே சென்று குறைகளை
கேட்டறிந்தனர். மின்கட்டண விவகாரத்தில் முதலமைச்சர்
மனமிறங்குவாரா என அவர் எழுப்பியிருந்த ஒற்றைக் கேள்வி தான்
மின்வாரிய அதிகாரிகளை இல்லம் நோக்கி செல்ல வைத்துள்ளது.

இதுவே பொதுமக்களில் யாரேனும் ஒருவர் மின்வாரிய குறைகளை
இப்படி சுட்டிக்காட்டினால் அவர்களது வீட்டுக்கும் சென்று அதிகாரிகள்
புகார்களை கேட்டறிவார்களா என்ற கேள்வி பிறந்துள்ளது.

தமிழக மின்சார வாரியத்தின் மின் கட்டண கணக்கீடு முறையை
விமர்சித்து இயக்குநர் தங்கர்பச்சான் நேற்று ஒரு அறிக்கை
வெளியிட்டிருந்தார். தனது வீட்டு மின் கட்டண கணக்கீடு முறையில்
குளறுபடி நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து
இன்று அவரது வீட்டுகே சென்ற மின்வாரிய செயற்பொறியாளர்கள்
தங்கர்பச்சானின் புகாரை கேட்டறிந்து நடவடிக்கை
எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

நல்ல விஷயம் மின் வாரிய அதிகாரிகளின் இது போன்ற
துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது தான். ஆனால் இதுவே சாமனியர்களில்
ஒருவர் இப்படி புகார் கூறியிருந்தால் அவர்களது குறையும்
இதேபோல் உடனடியாக களையப்படுமா என்றால் அது சந்தேகமே.

சினிமா, அரசியல், தொழில் பிரபலங்களுக்கு காட்டும் மரியாதையில்
சிறிதளவாவது பொதுமக்களுக்கும் மின் வாரிய அதிகாரிகள்
காட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையே நேற்று தங்கர்பச்சான் விடுத்த அறிக்கையின் விவரம்
பின்வருமாறு;

”அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில்தான் ஊதியங்களைப்
பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள்கூட தாமதமாகாமல். ஆனால்,
மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு
ஒருமுறை குறிக்கப்படுகின்றன. மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால்
16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த
வேண்டும்.

ஆனால் கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக்கட்டணமாக
செலுத்தியுள்ளேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என
கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த
வேண்டியுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கைகளில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை
தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக்
கொண்டு வருவோம் என முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணிஅஞ்சிக்கொண்டிருக்கிறேன். ஒரு வீட்டின் மின் கட்டண செலவே
இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது
எனத் தெரியவில்லை.

அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச்சொன்னால் அதற்கான திறன் தமிழ்நாட்டில் எத்தனைக் குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.”

தொழில் வாய்ப்பின்றி, வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி,
கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக்
கொண்டிருக்கும் மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர
மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகிறேன்.” இவ்வாறு
அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதனிடையே மின் கட்டணத்தை
மையமாக வைத்து கடந்த சில நாட்களாக புகார்கள் அதிகரித்து
வருவது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/thangar-bachan-question-whether-electricity-bill-robbery-will-end/articlecontent-pf580749-429362.html

(கடந்த வாரம் (திமுக ஆதரவு)செய்தியாளர் திரு.ராதாகிருஷ்ணன்,
கடந்த 3 வருடங்களாக மின்வெட்டே இல்லாமல் இருந்த தங்கள் ஏரியாவில்,
புதிய ஆட்சியில், ஒரு வாரத்திற்குள் 3 முறை மின்வெட்டு ஏற்பட்டதாகவும்,
புகார் எழுப்பிய சமயத்தில் – 3 மணிநேரங்களுக்கும் மேலாக அவர் வசிக்கும் பகுதியில் மின்விநியோகம் இல்லை என்றும் ட்விட்டரில் எழுதினார்…. உடனடியாக -இரவு 11 மணியளவில் – மின் துறை அமைச்சர்
அவருடன் தொடர்பு கொண்டு, நிலைமையை உடனடியாக
சரி செய்ய உத்திரவிட்டிருப்பதாகக் கூறி இருக்கிறார்…..

இது செய்தியாளர்கள் கதைக்கும் விஷயமல்ல… பயன்பாட்டாளர்கள் சந்திக்கும் கொடூரமான பிரச்சினை…


நாங்கள் வசிக்கும் பகுதியிலும் கடந்த 3 மாதங்களாக இதே நிலை தான்.

மின்வெட்டும், திமுக ஆட்சியும் உடன் பிறந்தவை போலும்….
கடந்த முறை திமுக ஆட்சியில் ஆற்காடு வீராசாமியார்

மின் துறை அமைச்சராக இருந்தபோது – ஸ்டேட்டஸ் வித்தியாசம் இல்லாமல்
அனைவருக்கும் மின்வெட்டு இருந்தது….

இப்போது வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் புகார் வந்தவுடன் நிவாரணம் அளிப்பது
என்று கொள்கை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று தெரிகிறது ….!!!

தங்கர் பச்சான் உண்மையில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
அவருக்கும் வி.ஐ.பி. ஸ்டேட்டஸ் கிடைத்திருக்கிறதே….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to தங்கர் பச்சான் வீட்டுக்கு ஓடிய மின் வாரிய அதிகாரிகள்…..இது பத்திரிகையாளர்கள் கதைக்கும் பிரச்சினை மட்டுமல்ல -!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    //இப்போது வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் புகார் வந்தவுடன் நிவாரணம் அளிப்பது
    என்று கொள்கை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது//

    பத்திரிகைகளுக்கு விலை இருக்கிறது. கொடுத்தாகிவிட்டது. இன்னும் பத்திரிகையாளர்கள் அரசுப் பணியாளர்கள் என்று மட்டும்தான் சொல்லவில்லை. பிரபலஸ்தர்களின் வாய்க்கு இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லையே..

    அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவிகித வெற்றி கிடைக்கணும்னா, 1000 ரூபாய் கொடுத்து பெண்கள் வாயை அடைக்கவேண்டும், பிரச்சனைகளை மக்கள் கவனத்திற்கு யாரும் கொண்டுவந்துவிடக் கூடாது.

    அது சரி… புதுக்கோட்டை கருக்காகுறிச்சி வடதெரு, ராமநாதபுரம் ஆகிய இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஸ்டாலின் அனுமதி வழங்கினார் என்று வாட்சப் செய்திகளில் பார்த்தேனே (சன் தொலைக்காட்சியில் வந்ததாக படத்துடன் வந்திருந்தது) உண்மையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.