விவேக் என்னும் ஒரு அற்புத கலைஞர் …. தேடலில் இருப்பவர்களுக்கு – ( 6 )

vivek in malaysia

……………

டெக்னாலஜி என்னும் தொழில் நுட்ப வளர்ச்சியால்,
நாம் நினைத்த நேரத்தில், நினைக்கும் மனிதர்களையோ,
இடங்களையோ – நினைத்த நொடியில் பார்க்க முடிகிறது.

என்ன….. அதற்கு தேவையான சாதனங்கள் நம்மிடம்
இருக்க வேண்டும்… அதை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் கைவசம் இருந்தாலும் கூட,
அதை நமக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்தத்
தெரியவில்லை என்றால் – அந்த தொழில் நுட்ப வளர்ச்சியின்
பயனை நம்மால் அனுபவிக்க முடிவதில்லை;

இன்றைய முதியவர்கள் பலருக்கு இதுதான் பிரச்சினை.

என் வீட்டருகே வசிக்கும் ஒரு நண்பர், 65 வயதாகிறது.
கல்லூரியில் மூத்த பேராசிரியராக இருந்து அண்மையில் தான்
ஓய்வு பெற்றார். ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்துவது
என்று புரியாமல் தவிக்கிறார்…. அவரிடம், கம்ப்யூட்டரை
பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் என்று திரும்பத் திரும்ப
சொல்லிக் கொண்டே இருக்கிறேன்… ஆனாலும்
தன்னால் இயலாது என்கிற அவநம்பிக்கையோடேயே இருக்கிறார்.
தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தில் 50 – 60 ஆயிரம் ரூபாயை
செலவழிக்கவும் அவர் தயாராக இல்லை;
அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால்,
வீட்டில் வலியுறுத்தி பழகிக்கொடுக்க யாருமில்லை;

நாளைய முதியவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்காது.

இன்றைய தினம், படித்தவர்களில், 50 வயதுக்கு உட்பட்டவர்களில்
ஓரளவாவது கணிணி ஞானம் இல்லாதவர்கள் யாருமே
இருக்க மாட்டார்கள் என்று கூறலாம்.

வெளிநாடுகளில் வசிக்கும், தனித்து வாழும் – முதியவர்களுக்கான
இந்தப் பகுதியில் இன்று உங்களை சந்திக்கவிருப்பது
மலேசியாவிலிருந்து விவேக் ….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , . Bookmark the permalink.

6 Responses to விவேக் என்னும் ஒரு அற்புத கலைஞர் …. தேடலில் இருப்பவர்களுக்கு – ( 6 )

 1. புதியவன் சொல்கிறார்:

  இணையம் என்பது, தனியாக இருப்பவர்களுக்கோ இல்லை பொழுதுபோக்க நினைப்பவர்களுக்கோ மிகப்பெரிய சுரங்கம். அதில் இல்லாத துறைகளே இல்லை.

  முன்பெல்லாம் வீட்டில் வயதானவர்கள் மற்றவர்களுடன் அரட்டை அடித்தோ இல்லை நண்பர்களுடன் ஏதோ திண்ணையில் உட்கார்ந்தோ அரட்டை அடித்துப் பொழுது போக்குவார்கள். நல்லவிதத்தில் பொழுது கழிவது மிகக் கடினம் (கச்சேரி கேட்பது, உபந்யாசம் கேட்பது, பட்டிமன்றம்/பேச்சுக்கள், நாடகங்கள் என்று பலவற்றிர்க்கு அலையணும், கைக்காசு செலவழித்து. இன்னும் வயதானால் தனியாகப் போக முடியாது). ஆனால் இணையத்தில் உட்கார்ந்த இடத்தில் ஒரு நாளைக்கு 64 மணி நேரம் இருந்தாலும் அதற்கும் அதிகமாக பொழுதுபோக்கும் நிகழ்வுகள் இருக்கின்றன.

  ஒரு லேப்டாப், யூபிஎஸ், அவசரத்துக்கு அதனைச் சரி செய்ய ஒரு கணிணி சர்வீஸ் செய்பவர் (இப்போல்லாம் வருடத்துக்கு 2000 ரூபாய்க்கு AMC எடுத்துக்கொள்ள முடியும்), பக்கத்துல ஃப்ளாஸ்கில் வெந்நீர், சாதாரண குடிக்கும் தண்ணீர் என்று உட்கார்ந்துவிட்டால், முதுகு வலி வரும்வரை பார்க்க எத்தனையோ அறிவார்ந்த நிகழ்ச்சிகள் இருக்கிறது.

  Youtube or Google – எதையேனும் டைப் படித்துத் தேடினால், எல்லாவற்றையும் கொண்டுவந்து கொட்டும். Touring Talkies-சித்ரா லட்சுமணன், Waste Paper-Manobala, KP Channel-Kutti padmini, என்று சினிமாச் செய்திகளுக்கும் அனுபவ பேட்டிகளும், ஏகப்பட்ட திரைப்படங்களும், அரசியல் அக்கப்போர் சேனல்களும், உணவு செய்வது தொடர்பான சேனல்களும்,, பக்தி சேனல்களும்….. என்று லிமிட்டே இல்லாமல் குவிந்து கிடக்கிறது.

  இந்தத் தளத்தைப் படிப்பவர்களும் எப்படித் தேடுவது, எந்த எந்த நிகழ்வுகள் interesting என்று எழுதணும். பலருக்கு உபயோகமாக இருக்கும்.

  கொரோனாவின் கண்டுபிடிப்பு Online Learning facility. இது எனக்கு நிறைய உதவியிருக்கிறது. என்ன என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதற்கும் அளவில்லை. உதாரணமாக நான் கிரந்தம் மொழி கற்றுக்கொண்டேன் (செலவு மாதம் 100 ரூ, 3-4 மாதங்களில்). பல மொழிகளையும் இதுபோலச் சொல்லித் தருவதற்கு ஆட்கள் இருக்கின்றனர். எதையாவது படிக்கலாம், எழுதிப் பார்க்கலாம், பொழுது போக்கலாம். வாசகர்கள் இது பற்றி இங்கு எழுதணும் என்று வேண்டுகிறேன்.

 2. Selvadurai Muthukani சொல்கிறார்:

  அறுபதுகளிலேயே பொறியியல் மாணவனாக இருந்த எனக்கு கால்குலேட்டர் என்று ஒரு கருவி வரும் என்று சொல்லியிருந்தாலே நம்பிக்கை ஏற்பட்டிருக்காது. ஒருசில பொத்தான்களை அமுக்கினால் கணக்குப் போடும் என்று யாராவது சொன்னால் எதோ மாயா ஜாலக் கதை போன்றுதான் இருந்து இருக்கும். கால்குலேட்டரையே நான் எண்பதுகளின் ஆரம்பத்திலேதான் கையாண்டிருக்கிறேன். கணினி உலகில்தான் எவ்வளவு ஆச்சரியப்படத்தக்க முன்னேற்றம். எனக்கு வயது எழுபத்தி நான்கு. என்னுடைய வயது நண்பர்கள் பலருக்கு மின்னஞ்சல் அனுப்பக் கூடத்தெரியாது!! அவ்வளவு அக்கறையின்மை. இப்போது பொடிசுகள் கூட மொபைலில் கலக்குகின்றன!! இன்டர்நெட் உலகில் கணினி மூலம் எவ்வளவு அறிவு உற்றுகள்!!! ஆர்வம் இருந்தால் எதையும் கற்றுக்கொள்ளலாம். வயது மூப்பினால் அதிக நேரம் உட்கார்ந்து இருக்கத்தான் முடியவில்லை. கணிணியைத் திறந்தால் மூடவே மனம் வராது. அவ்வளவு பெரிய அறிவுப் பெட்டகம். அதில் இல்லாத சமாச்சாரமே இல்லை. சில பொத்தான்களைத் தட்டினாலே அனைத்தும் வந்து திரையில் கொட்டும். கடவுள் கொடுத்த வரப்பிரசாதம்!!!

  • புதியவன் சொல்கிறார்:

   செல்வதுரை சார்… என்னவோ உங்கள் பின்னூட்டத்திற்கு எழுதணும்னு தோன்றியது.

   நான் கணிணித் துறையில்தான் இருந்தேன். (PC வர ஆரம்பித்த காலத்திலிருந்து..88). 95ல், பாக்கெட் சைஸில் ஒரு கம்ப்யூட்டர் வர வைக்க மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டிருக்கிறது, பைரஸியை நிறுத்த, அந்த பாக்கெட் சைஸ் கம்ப்யூட்டர் நேரடியாக (தொலைத் தொடர்பு கேபிள் வழியாக அல்லது வேறு புது வகையில்) மைக்ரோசாஃப்ட் நிறுவன சர்வரில் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் என்றெல்லாம் வர இருக்கும் புதிய டெக்னாலஜியைப் பற்றி கல்ஃபில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் RDBMSல் இருந்தேன். அப்புறம் அப்போது பேஜர் வந்தது. அதனுடைய உடனடி உபயோகம், ஆபீஸை ஏமாற்றிவிட்டு எங்கும் செல்லமுடியாது. Client placeல இருக்கோமா, எங்க இருக்கோம் என்பதை உடனடியாக check செய்ய முடியும். பிறகு 98ல் செங்கல் சைஸ் மொபைல் எனக்கு ஆபீஸில் கொடுத்தார்கள். அது ஒரு அதிசயப் பொருள். பக்கத்து டேபிளில் இருப்பவனிடம் பேசவே அதனை உபயோகித்தனர் (கம்பெனி பில் கட்டும்). 2003ல் அடிப்படை ஸ்மார்ட் போன் வந்தது (மைக்ரோசாஃப்ட் லைசன்ஸ் ஆபீஸுக்கு நிறைய வாங்கியதற்கு 3 இலவசமாகக் கொடுத்தார்கள்). 2008களில், ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பதற்கு உடனடி படம் எடுத்து அனுப்பச் சொல்வேன். கடந்த 10 ஆண்டுகளின் வளர்ச்சி பிரம்மிக்கத்தக்கது. நிறைய தகவல் பிழைகள் இருப்பினும் பல sourceகளில் check செய்து உண்மைத் தகவலைப் பெற முடியும்.

   கொரோனா காலத்தில் இன்னும் பிரம்மாண்ட வளர்ச்சி என்று நினைக்கிறேன். பல விஷயங்களை வீட்டில் இருந்த இடத்தில் இருந்துகொண்டு, ஒரு ஆசிரியர் பல மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்.

   You wont believe. I was CIO (Chief Info. Officer). 2012ல் என் மகன் (8ம் வகுப்பு) என் ஆபீஸுக்கு வந்தபோது, why don’t you invest in Bit Coins என்றான். That is the future dad என்றான். அப்போது என் Network Manager என்னுடன் இருந்தார். அப்போ, ஒரு நாள் சம்பளத்தில் பல பிட் காயின் என்னால் வாங்கியிருந்திருக்க முடியும். I brushed aside his comments.

   அடுத்த ஜெனெரேஷன், நம் ஜெனெரேஷனைவிட மிக மிக புத்திசாலியாக இருப்பார்கள். அறிவியலின் வளர்ச்சியை பொழுதுபோக்கப் பயன்படுத்துபவர்கள் வளருவது கடினம். அதனை knowledgeக்குப் பயன்படுத்தினால், வானமே எல்லை.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    // அடுத்த ஜெனெரேஷன்,
    நம் ஜெனெரேஷனைவிட மிக மிக
    புத்திசாலியாக இருப்பார்கள். //

    ——————
    அதனால், நம் ஜெனரேஷன் மட்டம் என்று
    நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

    அவர்கள் படிப்பு காரணமாக, அவர்களுக்கு
    தெரிந்தது விஷயங்கள், அதைப்படிக்காததால்
    உங்களுக்கு தெரியவில்லை என்றால்,
    நீங்கள் மட்டம் என்று அர்த்தமா…?

    ஒரு பைலட், ஒரு டாக்டர், ஒரு எஞ்ஜினியர்,
    ஏன் ஒரு பஸ் டிரைவர் –
    செய்வதை நம்மால் செய்ய முடியவில்லை
    என்றால், நாம் அவர்களை விட மட்டம் என்று
    சொல்லி விட முடியுமா…?

    என்னைக் கேட்டால், 5000 ஆண்டுகளுக்கு
    முன்னர் இங்கே இருந்தவர்கள், இன்றைய
    மனிதர்களை விட புத்திசாலிகள் என்பேன்…

    நாம் இன்று புதிதாக கண்டுபிடிப்பதையெல்லாம் –
    அவர்கள் என்றோ பழக்கத்திலேயே
    வைத்திருந்தார்கள்….

    நம் அப்பாவையோ, தாத்தாவையோ –
    அவர்களை விட நமக்கு அதிக விஷயம் தெரியும்
    என்பதால்,
    மட்டம் என்று சொல்லி விட முடியுமா…?

    அந்தந்த தலைமுறையைப் பொறுத்தது அது…!!!

    அடுத்த ஜெனரேஷனிலும் –
    முட்டாள்களும் இருப்பார்கள்;
    புத்திசாலிகளும் இருப்பார்கள்….!!!

    – ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல
    முடியும்; ஜெனரேஷனுக்கு ஜெனரேஷன் –

    மனிதாபிமானம் குறைகிறது;
    அன்பு குறைகிறது;
    பாசம் குறைகிறது.
    இரக்கம், கருணை குறைகிறது…
    பிறரிடம் நம்பிக்கை குறைகிறது….
    சுற்றத்தாரின் எண்ணிக்கை குறைகிறது….
    பெரியவர்களிடம் மரியாதை குறைகிறது.

    சுயநலம் பெருகுகிறது;
    தன்னைப்பற்றிய நினைப்பே எப்போதும்
    இருக்கிறது….
    (நான் எல்லாரையும் சொல்லவில்லை –
    விதிவிலக்காக நிறைய பேர் இருக்கிறார்கள்…

    பொதுவாக, generation gap -ல்
    உருவாகும் குணங்களைச் சொல்கிறேன்…)

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     கா.மை. சார்… இங்கு புத்திசாலித்தனம் என்று நான் குறிப்பிட்டது, புதிய புதிய காட்ஜெட்களை (அறிவியல் கண்டுபிடிப்புகளை) உபயோகப்படுத்துவதில். என்னுடைய பெரியப்பா மாநில அளவில் கணக்கில் தங்கப் பதக்கம் வாங்கியவர். அவர் என்னிடம், அவரது 60களில், 1988ல், இந்தக் கம்ப்யூட்டர்னா என்ன, அது எப்படி நம்மைவிட வேகமாகப் பணியாற்றுமாமே என்று என்னிடம் கேட்டது நினைவுக்கு வருகிறது. அவர்களுக்குத் தெரிந்ததில் எனக்கு 5 சதவிகிதம்கூடத் தெரியாது, ஆனால் நுகர்வு கலாச்சாரத்தில் அவர்களைவிட நான் கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கிறேன்.

     If we analyze properly, நினைவாற்றல், ஜெனெரேஷனுக்கு ஜெனரேஷன் குறைகிறது (விதிவிலக்குகளை விட்டுவிடுங்கள்). கான்சண்ட்ரேஷன் குறைகிறது. இதனை நான் நிறையப் பார்க்கிறேன். இதற்குக் காரணம் கவனச் சிதறல்தான். நானும் 8ம் வகுப்பு படிப்பவனும் சேர்ந்தே ஒரு வகுப்பில் கற்றுக்கொள்கிறோம். அவன் 12 நாட்களில் முழுவதுமாக மனப்பாடம் செய்துவிடுகிறான், எனக்கு 25 நாட்களானாலும் தடுமாறுகிறது.

     அந்த அந்த ஜெனெரேஷனுக்கு உள்ள புத்திசாலித்தனம் இளையவர்களிடம் அதிகமாக இருக்கும் அவ்வளவுதான். அதனால் தன் முன்னேற்றத்துக்கோ (பக்தி இறை உணர்வு நற்குணங்கள்) சமூக முன்னேற்றத்துக்கோ அவ்வளவு உபயோகம் இல்லை என்பது என் அநுமானம்.

     நாம் சுயநலம் சார்ந்த சமூகமாக என்றைக்கோ (60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே) மாற ஆரம்பித்தாகிவிட்டது. பணம் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம், அதுதான் மகிழ்ச்சியைத் தரும், அதுதான் பிறரை விட என்னை/என் குடும்பத்தை மேம்பட வைக்கும், என்று எப்போது நினைப்பு வந்துவிட்டதோ-இது பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி காலத்திலிருந்து வந்தது, அப்போதே நாம் சுயநலமாக இருக்க ஆரம்பித்துவிட்டோம். அது இன்னும் அதிகமாகத்தான் ஆகும்.

     பெற்றோர் என்பதெல்லாம், தாங்கள் வளரும் வரைதான். பிறகு தங்கள் உபயோகத்திற்குத்தான். அவர்களுக்கான கடமை என்பதெல்லாம் அடுத்த தலைமுறை மனதில் படிவதே மிகக் குறைவு. இது இரண்டு தலைமுறையாகவே அதிகமாகிக்கொண்டே போகின்றது. இதற்கு முழுக் காரணம் நுகர்வு கலாச்சாரம், தான் தன் சுகம் என்ற எண்ணமும்தான். உறவு என்பதும் பணம் சார்ந்ததாகி பல தலைமுறைகள் ஆகிவிட்டது. கணவன் மனைவி இடையேயும் இந்த ‘தான், தன் சுகம்’ என்ற எண்ணம் வந்தே இரண்டு தலைமுறைகள் ஆகிவிட்டது என்பது என் அநுமானம்.

     எப்போதும்போல விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Selvadurai Muthukani,

  நீங்கள் எத்தனை வயதில் கம்ப்யூட்டர்
  கற்றுக் கொள்ள ஆரம்பித்தீர்கள்…?

  நான் 60-க்கு மேல் தான்…!!!
  அதுவும் ரொம்ப கொஞ்சமாக …!

  பிறகு நானாகவே பழகிக்கொண்டது தான்
  இப்போதிருப்பது…!!!

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.