தென்றல் உறங்கியபோதும் -50 ஆண்டுகளுக்கும் மேலாக- ( 15 )

1958-ல் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸ் படம்
பெற்ற மகனை விற்ற அன்னை -விசித்திரமான பெயர்…!

அப்போதெல்லாம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி, வருடத்திற்கு
3-4 தமிழ்ப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வந்தது.

அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவருமே
மாதச்சம்பளத்திற்கு தான் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்…
துவக்க கால வாழ்க்கையில் இருந்தபோது,
கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதியும்
கூட இதில் சேர்த்தி.

நான் இந்தப் படத்தை இன்று வரை பார்க்கவில்லை;

ஆனால், இதில் வரும் ஒரே ஒரு பாடல் –
என்றுமே மறக்க முடியாத அளவிற்கு சின்ன வயதிலேயே
என்னைக் கவர்ந்தது.

விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் அருமையான
ஆர்கெஸ்டிரேஷன் தான் இந்தப்பாடலின்
வெற்றிக்கு காரணம்….

இந்தப்பாடலை இயற்றியவர் அ.மருதகாசி.
பாடியவர்கள் – ஏ.எம்.ராஜா-பி.சுசீலா.
காட்சியில் எஸ்.எஸ்.ஆர். மற்றும் விஜயகுமாரி.

துவக்க காலங்களில், வெறும் பாடலை மட்டும் தான்
கேட்டுப்பழக்கம்… பதிவு செய்து வைத்திருந்தேன்….

பிற்காலத்தில் தொலைக்காட்சிகள், யூ-ட்யூப், வசதிகள்
வந்தபிறகு தான் அந்த பாடல் காட்சியை பார்த்தேன்…

“தென்றல் உறங்கியபோதும், திங்கள் உறங்கியபோதும்”

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தென்றல் உறங்கியபோதும் -50 ஆண்டுகளுக்கும் மேலாக- ( 15 )

  1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    இந்த பாடல் வானொலியில் அடிக்கடி கேட்டது .
    உங்களை போல You Tube வந்த பிறகுதான்
    பார்க்க முடிந்தது .
    எதனால் இந்த பாடல் நினைவில் நிற்கிறது என்பது
    விடை இல்லாத ஒரு கேள்வி .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.