
கணவனின் “ஆண்மை இழத்தல்” என்பதையே
படத்தின் மையக் கருத்தாகக் கொண்டு எடுக்கப்பட்ட
இந்தப்படத்தின் கதாசிரியர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
“சாரதா” வெளியானது 1962-ல். முக்கிய பாத்திரங்களில்
மிகச்சிறப்பாக நடித்திருந்தனர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும்,
விஜயகுமாரியும்.
பல நண்பர்களின் ஆலோசனையையும் மீறி துணிச்சலாக
இந்தப்படத்தை தயாரித்தார் திரு.ஏ.எல்.ஸ்ரீநிவாசன்.
இந்தக் கதையை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
தான் இதை இயக்கவும் பொருத்தமானவர் என்றும்
நினைத்து அவரையே இயக்குனர் ஆக்கினார்.
இந்தப்படத்தின் மூலம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
என்னும் அருமையான இயக்குநர் ஒருவர் தமிழ்
திரையுலகிற்கு கிடைத்தார்.
திரையிடும் முன்னர் படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள்
இந்தப்படம் சரியாக ஓட வாய்ப்பில்லை என்று சொல்லி
தாங்கள் கொடுத்த அட்வான்ஸை திரும்பக் கேட்டனர்.
தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ். துணிச்சலாக அத்தனை பேரின்
அட்வான்சையும் திரும்பக்கொடுத்து விட்டு,
மிகுந்த தன்னம்பிக்கையுடன் தானே நேரடியாக திரையிட்டார்.
படம் சூப்பர் ஹிட் ஆனது.
படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன்
அவர்களின் இனிமையான பாடல்களும் ஒரு முக்கிய காரணம்.
ஆறு பாடல்களுமே மிகச்சிறப்பாக அமைந்திருந்தன.
இங்கு கவிஞர் கண்ணதாசனின் மிக அழகிய
பாடல் ஒன்றை மட்டும் பார்ப்போம்…..
(மற்ற பாடல்களை அடுத்த ரவுண்டில் பார்த்தால் போயிற்று….!!!)
பாடல் – சுவாரஸ்யமான கேள்வி, பதில்களால் நிறைந்தது.
“ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்,
அந்த நினைவிற்கு பெயர் என்ன….? “