

இன்றைய இளைஞர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர் –
இசையமைப்பாளர், தயாரிப்பாளர் திரு.ஆதி நாராயண ராவ்.
30 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டவர் –(1915–1991)
(புகழ்பெற்ற நடிகை திருமதி அஞ்சலி தேவியின் கணவர்..
ஆனால் அஞ்சலி தேவியை மணக்கும் முன்னரே
இவர் இசையமைப்பாளராகி இருந்தார்….)
இவரது பாடல்கள் அற்புதமான தனித்தன்மை பெற்றவை.
மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து இவரது பாடல்கள்
தனித்து விளங்கும். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி அடிப்படை ராகங்களில்,
அற்புதமான ஆர்கெஸ்டிரேஷனுடன் –
இறவாப்புகழ் பெற்றவை.
அநேகமாக எல்லா பாடல்களும், தெலுங்கிலும், தமிழிலும்
அதே மெட்டுக்களில் வந்தன.
இவரது பெரும்பாலான பாடல்கள் எனக்குப் பிடிக்கும்….
அதுவும் கண்டசாலாவின் கரகரத்த குரலில்…!!!
சாம்பிளுக்கு – கீழே –
1955-ல் வெளிவந்த – அனார்கலி படத்திலிருந்து –