



சந்தேகமே இல்லை – பெண் என்பவள் இயற்கையின் சீதனப்பரிசு தான்….!!!
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ
பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா
.
இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே
- ஒரு பெண்ணின் அத்தனை சிறப்புகளையும்,
அவளது தேவையையும்,
கொஞ்சம் கூட விரசமின்றி, இத்தனை அழகாக
யாரால் சொல்ல முடியும்…..? கண்ணதாசனைத் தவிர….!!!
1965-ல் வெளிவந்த படம் ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் –
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன் –
இசை -விஸ்வநாதன் -ராமமூர்த்தி
முதலில் இந்தப்பாடல் ஒரு ஆண் பாடுவதாக –
ஜெமினி கணேசனுக்காக பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடுவார்….
ஆனால், அழகான சிரித்த முகத்துடன் சாவித்திரி
அதே பாடலை மீண்டும் நினைவுபடுத்திப் பாடுவது தான்
எனக்கு மிகவும் பிடிக்கிறது….
எனவே – சாவித்திரிக்காக, பி.சுசீலா பாடும்
“இளமை கொலுவிருக்கும்…..”