50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 7 ) -இந்தப் புறா ஆட வேண்டுமானால்…..!!!

நான் பணியில் இருந்த காலத்தில், பல ஆண்டுகள், ஞாயிறு தோறும்
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை டேப் ரிக்கார்டரை
தோட்ட வாசல்படியில் வைத்து விட்டு, நான் தோட்டத்தில் வேலை
செய்துகொண்டிருப்பேன்…

இந்தப்பாடலின் துவக்கத்தில் ஒரு உரையாடல் வரும்…
“இந்தப் புறா ஆட வேண்டுமானால், இளவரசர் பாட வேண்டும்…”
அதைத்தொடர்ந்து -“வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்
வெண்புறாவே” பாடல் துவங்கும்.

சில சமயம் நான் தொலைவில் இருந்தால், என் குழந்தைகள்
இந்த வசனத்தை கேட்டதும் “அப்பா – உன் பாட்டு” என்று
சத்தமாக குரல் கொடுப்பார்கள்…அந்த டேப்பில் இருந்த
அத்தனை பாடல்களும் என் தேர்வு தான் என்றாலும் இதற்கு
அப்படி ஒரு முக்கியத்துவம்.

“சாரங்கதரா” படம் -1958-ல் வெளிவந்தது.
சிவாஜி, பானுமதி,ராஜசுலோசனா நடித்தது.
படம் வெற்றிபெறவில்லை…
முக்கிய காரணம் – படத்தில், பானுமதி சிவாஜியின் சித்தி….
வில்லி வேடம்….மக்களால் ஜீரணிக்க முடியவில்லை….!!!

ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பில்
நிறைய பாடல்கள் நன்றாக இருந்தன.
அதில் முக்கியமான ‘ஹிட்’ வசந்தமுல்லை….
மருதகாசி அவர்கள் இயற்றிய பாடல்.

ராமநாதன் அவர்களின் பாடல்கள் பலவற்றில்,
அவரது முந்திய பாடல்களின் சாயல் தெரியும்…
இருந்தாலும் கூட – ரசிக்கும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to 50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 7 ) -இந்தப் புறா ஆட வேண்டுமானால்…..!!!

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  சாருகேசி ராகம் .!

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மெய்ப்பொருள்,

  எனக்கு கர்நாடக சங்கீதத்தை
  ரசிக்க மட்டுமே தெரியும்…
  ராகங்கள் சொல்லத் தெரியாது.
  அந்த அளவிற்கு ஞானம் கிடையாது…

  நீங்கள் ஒவ்வொரு பாடலுக்கும்
  அடிப்படையான ராகத்தை எழுதுவது
  எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

  தொடருங்கள்…

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  கா மை சார்
  எனக்கும் சங்கீதம் அவ்வளவு தெரியாது .
  பாடலைக் கேட்டு ரசிப்பதோடு சரி .
  சில பாடல் கேட்கும் போது தெரிந்த ராகம்
  என்றால் புலப்படும் .
  நீங்கள் நீல வண்ண கண்ணா வாடா என்ற
  பாடலை பற்றி எழுதி இருந்தீர்கள் .
  ஏன் இந்த பாடல் இவ்வளவு நன்றாக இருக்கின்றது
  என்று கேட்டால் பதில் தெரியாது .
  நன்றாக இருக்கிறது என்று மட்டும் தான் சொல்லமுடியும்.
  குரல் ,இசை , பாடல் வரி , பாடலில் வரும் உணர்ச்சி
  இது எல்லாம் சேர்ந்தே வருகின்றது .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.