
1955-ல் வெளியான படம் “டவுன் பஸ்” –
பெரிதாக வெற்றி பெற்ற படம் என்று சொல்ல முடியாது.
அஞ்சலிதேவி, எம்.என்.கண்ணப்பா என்று அதிகம்
புகழ்பெறாதவர்கள் நடித்த படம்…
இசையமைப்பு – கே.வி.,மஹாதேவன் அவர்கள்.
ஆனால், இந்தப்பாடல் மட்டும் மிகச்சிறப்பாக அமைந்து,
அனைவருக்கும் பிடித்தது….
முக்கிய காரணம் அந்த குழந்தைக்குரலும்,
அதற்குச் சொந்தமான எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்களுமே …
தமிழ்த் திரையுலகில் தனியாகத் தெரிந்தார் ராஜேஸ்வரி அந்த வித்தியாசமான குழந்தைக் குரலுக்காகவே –
கேட்டுப்பாருங்களேன் அந்த குழந்தைக்குரலை…!!!