
எடப்பாடியாரும், ஓபிஎஸ் அவர்களும், மெனக்கெட்டு
டெல்லி வரை சென்று, பிரதமரை சந்தித்துவிட்டு
திரும்பி இருக்கிறார்கள்… அவர்களை சந்திப்பதற்கென்று
பிரதமரும் விசேஷமாக நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறார்.
வெளியே வந்த எடப்பாடியார் – செய்தியாளர்களிடம்
கூறி இருக்கிறார்….
” சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக
பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்கு
தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம்
வலியுறுத்தினோம்.
மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி
தரக்கூடாது என்றும் பிரதமரிடம் கூறினோம்.
நீர்ப்பற்றாக்குறையை போக்க காவிரி-கோதாவரி இணைப்பு
திட்டத்தை செயல்படுத்த கோரினோம்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை
தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். “
எடப்பாடியாரே – தான் சொல்வதை, மற்றவர்கள்
நம்புவார்கள் என்று நினைக்கிறாரோ இல்லையோ –
ஆனால், நாம் அவசியம் நம்புவோமாக….
எடப்பாடியாருக்கு நன்றாக கதை சொல்லத் தெரிகிறதென்று….!!!
Sir, keeping aside the politician’s revelation to the press, I will squarely blame the Press for the Mess we are in now. The Press wants to know everything and will report what they want. So the politicians also are making a mockery of them. I doubt if this is the only thing Mr.EPS told the press or is this the only thing that the press wants us to know 😦
Neither Mr.EPS nor the press will tell the truth.
ஸ்ரீதர்,
நீங்கள் சொல்வதும் உண்மையே.
அரசியல்வாதிகள் முழு உண்மையை
சொல்வதில்லை என்பதில் வியப்பில்லை;
அது அவர்களின் இயல்பு.
ஆனால், செய்தியாளர்கள் -மீடியாக்கள்
அவரவர்க்கு சௌகரியமான செய்திகளை,
அவர்களுக்கு வேண்டிய கோணத்தில்
வெளியிடுகிறார்கள் என்பது தான்
வருந்தத்தக்க விஷயம்.
நடுநிலைச் செய்தியாளர்கள் / தொலைக்காட்சிகள்
என்பதை இப்போதெல்லாம் காண்பது
அரிதான விஷயமாகி விட்டது.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்