
1963 -ல் வெளியான படம் “குங்குமம்”.
சிவாஜியின் சொந்தப்படம்.
இயக்குநர்கள் -கிருஷ்ணன்-பஞ்சு.
கே.வி.மஹாதேவன் அவர்கள் இசையமைப்பு.
இதில் வரும் ஒரு நீண்ட பாடல் (5.48 நிமிடம்) …
சின்னஞ்சிறு வண்ணப்பறவை….
இசையமைப்பு அருமை என்பதோடு,
இந்த பாடலின் முக்கியத்துவம்
சிவாஜியின் முகபாவங்கள் தான்….
நிஜமாகவே இந்தப்பாடலை ஒரு பாடகர் பாடினால் கூட
இந்த அளவு சிறப்பாக பாவங்கள் அமைய வாய்ப்பில்லை.
இந்தப்பாடலை டி.எம்.எஸ். தான் பாடி இருக்கிறார் என்கிற நினைப்பே நமக்கு எழுவதில்லை.
இடையில், மேடையில் சாரதா வார்த்தைகளை மறந்து
திணறும்போது, சிவாஜி அரங்கத்திலிருந்து பாடிக்கொண்டே
எழுந்து செல்வதும், அதைத்தொடர்ந்து அவரது
உடல், முக மொழிகளும் – மிகச்சிறப்பு..
நீங்களே பாருங்களேன்.