
அந்தக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் ( 1955 )
“மகாதேவி” படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள்
என்று அனைத்துமே கவிஞர் கண்ணதாசன் தான்…
பி.எஸ்.வீரப்பாவின் “மணந்தால் மகாதேவி –
இல்லையேல் மரணதேவி ” – நீண்டகாலம் வரை
பேசப்பட்டது….
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்
ட்யூனில் – 11 பாடல்கள் ….
அத்தனையும் கேட்க நன்றாக இருக்கும் என்றாலும்,
இங்கே – ஒரே ஒரு பாடல் மட்டும் தான்….
எம்.எஸ்.ராஜேஸ்வரி – பாலசரஸ்வதி குரல்களில் –
“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே –
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா…? “
( ப்ரிண்ட் ரொம்ப சுமார் தான்…
பாடலுக்காக பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்…)