
மத வெறியைத் தூண்டும் எந்தவித பேச்சுகளையும், செயல்களையும்,
( அது எந்த மதமாக இருந்தாலும் – ) நான் அங்கீகரித்ததில்லை; இந்த விமரிசனம் தளத்தில் பிரசுரித்ததும் இல்லை;
ஆனால், வேறு வழியே இல்லாமல் –
இந்த மதிகெட்ட மனிதரின் பேச்சை இங்கே வேதனையுடன்
பிரசுரிக்கிறேன்.
மதக்கலவரங்கள் ஏற்படக்கூடிய விதத்தில் மிக மோசமாகப் பேசும்
இந்த நபருக்கு, நாகரிக சமூகத்தில் நடமாடக்கூடிய தகுதி இல்லை;
இவரைப் போன்ற பண்பற்ற, சாக்கடை மனிதர்களை வளர்த்து விடுவதும்,
மேடைகளில் பேச அனுமதிப்பதும், கிறிஸ்தவத்திற்கு தான் கேடு
விளைவிக்கும் என்பதை அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்
உணர வேண்டும்.
சர்ச்சில் அவர் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து
அவரை உடனடியாக வெளியேற்றுவதன் மூலமே தாங்கள் இந்த
மாதிரி நபர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பதை கிறிஸ்தவ
அமைப்புகள் இந்த சமூகத்திற்கு உறுதிப்படுத்த முடியும்…
ஒரு அறிவற்ற, முட்டாள்தனமான, வெறித்தனமான, கீழ்த்தரமான
மனிதரின் பேச்சு கீழே –
https://www.dinamalar.com/news_detail.asp?id=2806967
( மேலே உள்ள லிங்க்கில் அவர் பேசிய வீடியோவும் இருக்கிறது… )
‘திமுக வெற்றி நாங்கள் போட்ட பிச்சை’;
‘மோடி, அமித்ஷா புழு புழுத்து சாவார்கள்’: பாதிரியார் சாபம்
Updated : ஜூலை 22, 2021 07:41 |
நாகர்கோவில்: ‘நாங்கள் போட்ட பிச்சையால் தான் திமுக வென்றது’
என சர்ச்சையாக கூறியிருக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார்,
பிரதமர் மோடியையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்தி, மதவெறியை
தூண்டும் வகையிலும் பேசி உள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில்,
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி
ஒன்றில் கலந்து கொண்டு, பாதிரியார் பேசியதாவது:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எத்தனை
கோவிலுக்கு சென்று கும்பாபிஷேகம் செய்தாலும், எத்தனை கோவிலுக்கு
சென்று துணி உடுத்தாமல் சாமி கும்பிட்டாலும், இந்துக்கள் ஒருவர் கூட
ஓட்டு போட மாட்டார்கள்.. (கூட்டத்தினர் கை தட்டுகின்றனர்)
மண்டைக்காட்டு அம்மன் பக்தர்களும், இந்துக்களும் உங்களை ஓட்டு
போட்டு ஜெயிக்க வைக்கவில்லை.. திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும்,
முஸ்லீம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை.. இதை மறந்து
விடாதீர்கள்.. (பலமாக கைதட்டுகின்றனர்)
உங்கள் திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை..
அனைத்து எம்.எல்.ஏ.,க்களிடமும் கூறினேன்.. பிரின்ஸிடமும் கூறினேன்..
உங்களுக்கு ஓட்டு போட சொன்னது யாரு.. எங்கள் ஆயர்கள்
எங்க கண் அசைப்பார்கள்.. கிறிஸ்தவ ஊழியர்கள்..
பெந்தகோஸ்தே ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பார்கள்..
நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில், சுரேஷ் ராஜனிடம் (திமுக
மாவட்ட செயலாளர் – கன்னியாகுமரி) கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு
சென்று சந்தித்து நாங்கள் ஓட்டு கேட்கிறோம் என்று கூறினோம்.
அவரோ, வேண்டாம் பாதர்.. ஒருவேளை இதனால் ஹிந்துக்களின் ஓட்டு
கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது
என்று மறுத்து கேட்டார். இதனால் எம்.ஆர்.காந்தி (பா.ஜ.,) நாகர்கோவிலில்
ஜெயித்துவிட்டார். (கைதட்டுகின்றனர்)
பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம்..
பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம்.. ஆனால் நாம் ஷூ
போட்ருக்கோம் எதற்கு… பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம்
நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ
போட்டு மிதிக்கிறோம்.. (கைதட்டுகின்றனர்)
நமக்கு சொறி, செரங்கு வந்துட கூடாதுனு தமிழக அரசு இலவச
செருப்பு கொடுத்தது.. இந்த பூமா தேவி, ரொம்ப டேஞ்சரான ஆளு..
சொறி பிடிக்கும்.. செரங்கு பிடிக்கும்.. அதனால செருப்பு போட்டுக்கங்கனு
கொடுக்கிறாங்க. அழகாக சொன்னார்கள் இஸ்லாமியர்கள்..
‘எங்கள் முடி.. ரோமத்தை கூட..’ ரோமம் என்ன எங்கள் பாஷையில்,
எங்க மயிரை கூட நீங்க பிடிங்க முடியாது.. (பலமாக கைதட்டுகின்றனர்)
அதான் அர்த்தம்.. பைபிள்ளயே இருக்கு.. ஒரு மயிரை கூட
நீ பிடுங்க முடியாது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், நாங்கள் மெஜாரிட்டி 42 சதவீதத்தில்
இருந்தோம்.. இப்போது அது 62 சதவீதத்தை தாண்டி விட்டது..
விரைவில் அது 70 சதவீதத்தை தொட்டு விடும்.. (பலத்த கைதட்டல்)
நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருப்போம்.. உங்களால் அதை
தடுக்க முடியாது.. அதனை மிகவும் எச்சரிக்கையாக ஹிந்து
சகோதரர்களுக்கு நாங்கள் சொல்லி கொள்கிறோம்.. ஆர்.எஸ்.எஸ்.,காரன்
என்றாலும் சரி, பா.ஜ.,காரன் என்றாலும் சரி எங்களுக்கு கவலையே
கிடையாது.. நீ எங்களை தடுக்க முடியாது.
பிரதமர் மோடியின் கடைசி காலம் மிகவும் பரிதாபமாக இருக்கும்.
எழுதி வைத்து கொள்ளுங்கள். (கைதட்டுகின்றனர்) நாம் நம்புகின்ற கடவுள்
உயிரோடு இருக்கிறார் என்றால், அமித் ஷா, மோடியை நாயும்,
புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும்…
வரலாறு காணும். (பலமாக கைதட்டுகின்றனர்) எங்களது சாபம்
உங்களை அழிக்கும்; நிர்மூலமாக்கும். இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.
அமைதியையும், அன்பையும் போதிக்கும் நிறைய பாதிரியார்கள் மத்தியில்,
இவர் போல இப்படி மததுவேஷம் பேசுபவர்களால் தான், நாட்டில் மத
சண்டைகள் வந்து இப்படி கஷ்டப்படுகிறது.
I agree.
மதங்கள் எதுவும் தீயதை ஒதுக்க வேண்டும் என்றே சொல்கின்றன.
இவரைப் போல் ஒரு சிலர் மதத்தின் பெயரை கெடுப்பதற்கு
என்றே கிளம்பியுள்ளார்கள் .
மதத்தின் பெயரால் , சாதியின் பெயரால் ஊர் எரிந்தாலும்
பரவாயில்லை இவர்கள் பிழைப்பு நடந்தால் போதும் .
டெட்டால் போட்டு இவர்கள் வாயை கழுவ வேண்டும் .
avarkal moliyil solvathenraal “SAATHTHAAN”
இந்த பாதிரியாரின் வெறிப்பேச்சை யூடியூபில் கேட்கும் போது, ஒரு கிறிஸ்தவனான எனக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. இந்த ஆளுக்கு பாதிரியார் பட்டம் எப்படிக் கிடைத்தது என்று என்னால் நம்ப முடியவில்லை.
மூன்றாம் தரப் பேச்சாளர்கள் கூட, இந்த அளவுக்கு நம் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் காயப்படுத்தும்படி பேச மாட்டார்கள்.
நாங்கள் கும்பிடும் கடவுளான கிறிஸ்து இயேசு, பூமாதேவியின் மீது கால்பதித்துதான் நடந்தார். பைபிளில் எந்த இடத்திலும் இயேசு செருப்பு போட்டு நடந்தார் என்று பதிவாகவில்லை.
பூமியில் விளைந்த அரிசி காய்கறிகளைத்தானே நாம் சாப்பிடுகிறோம். இந்த பாதிரியார் இந்து சகோதரர்களை மட்டுமல்ல, புழுதியில் வேலை செய்யும் கட்டடத் தொழிலாளர்களையும், சகதியில் வேலைசெய்யும் வேளாண் பெருமக்களையும் இழிவுபடுத்தியிருக்கிறார்.
பல உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் நாட்டின் பிரதமருக்காகவும், குடியரசுத் தலைவருக்காகவும், அமைச்சர்களுக்காகவும் ஜெபிப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த ஜெபங்களில், ‘எங்களை ஆளும் தலைவர்களுக்கு இறைவா நல்ல உடல்நலத்தையும், நாட்டை நல்லபடியாக ஆட்சிசெய்ய ஞானத்தையும் கொடு’ என்ற வார்த்தைகள் கண்டிப்பாக இருக்கும். நாட்டில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்ற வேண்டுகோளும் இருக்கும்.
ஆனால் 65 – 70 ஐத் தொடும் இந்த மனிதர், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் இந்த அளவுக்குக் கேவலமாக சாபம் போடுவதைக் கேட்டு நடுங்கினேன். இந்த பாதிரியார் பேசுவதைக் கேட்டு கைதட்டும் அந்த மக்களின் (மாக்களின்) அறியாமையை என்ன சொல்வது?
இப்போது மதமாற்றம் செய்வது என்பது பலருக்கும் ‘ஆம்வே’ பிசினஸ் போல் ஆகி விட்டது. ஒருவன் எதற்கு மதம் மாற வேண்டும்? இருக்கும் மதத்திலேயே இருந்துவிட்டுப் போகட்டுமே?
மதம் மாறிவிட்டால் வறுமை போய்விடுமா? நோய் நொடி தீர்ந்து விடுமா? மதம் மாறினால், உடைதான் வெள்ளையாக மாறுமே தவிர, உள்ளம் அழுக்காகத்தான் இருக்கும்.
கிறிஸ்தவர்கள் 60 சதவீதம் இருக்கிறோம், 70 சதவீதம் இருக்கிறோம் – என்று கொக்கரிப்பதில் என்ன பெருமை இருக்கிறது? நாங்கள் ‘நல்ல மனிதர்களாக, நேர்மையுடன், மனித நேயத்துடன் இருக்கிறோம்’ என்று சொல்வதில்தான் பெருமை.
இந்தப் பாதிரியாரின் பேச்சைக் கேட்டால், நம் பிரதமரின் / உள்துறை அமைச்சரின் மனம் எந்தளவுக்கு காயப்படும் என்பது எனக்கு வேதனையாக இருக்கிறது. இந்த பாதிரியாரை கிறிஸ்தவ திருச்சபையிலிருந்தே நீக்க வேண்டும். அப்போதுதான் என்னைப் போன்ற கிறிஸ்தவர்களின் மனம் ஒரளவு ஆறுதல் கொள்ளும்.
(பின் குறிப்பு : என்னைப் போன்ற கிறிஸ்தவர்கள் காமராஜருக்கும் ஓட்டுப் போட்டிருக்கிறோம், அண்ணாவுக்கும் ஓட்டுப் போட்டிருக்கிறோம்; எம்ஜிஆருக்கும் ஓட்டுப் போட்டிருக்கிறோம்; கருணாநிதிக்கும் ஓட்டுப் போட்டிருக்கிறோம்; ஜெயலலிதாவுக்கும் ஓட்டுப் போட்டிருக்கிறோம்; காங்கிரஸ்சுக்கும் ஓட்டுப் போட்டிருக்கிறோம். பிஜேபிக்கும் ஓட்டுப் போட்டிருக்கிறோம். அந்தந்த காலத்திற்கு எது சரியென்று படுகிறதோ, அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவோம். எங்கள் பாதிரியார் / பாஸ்டர் – இந்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என இதுவரை சொன்னதுமில்லை, அப்படி ஒருவேளை சொன்னாலும் கிறிஸ்தவர்கள் எல்லோரும் கேட்பதுமில்லை. சில போதகர்கள் ஜெபிப்பதைக் கேட்டுள்ளேன், ‘ஊழல் இல்லாத கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்’ என. ஆனால் எந்தக் கட்சிதான் நாட்டில் ஊழல் செய்யவில்லை?)
ஜஸ்டின்,
மிகத்தெளிவாக நிலைமையை
புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் விரிவான பின்னூட்டத்தை
வரவேற்கிறேன்….
பாராட்டுகிறேன்.
எல்லா மதங்களைச் சேர்ந்த
பெரியவர்களும், போதகர்களும்
மதங்களுக்கிடையே
நல்லுறவை வளர்க்கும்
முயற்சியில் ஈடுபட வேண்டும்.
அது தான் நாட்டில் அமைதியையும்,
ஒருவருக்கொருவரிடையே
நம்பிக்கையையும் கொண்டு வரும்.
.
–
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்