
பழைய திரைப்படப் பாடல்கள் என்றால் எனக்கு உயிர்….
(தமிழிலும், ஹிந்தியிலும் கூட …!!! )
சின்ன வயதிலிருந்தே, முதலில் ரேடியோ சிலோன்,
பிறகு டேப் ரிக்கார்டர்,
பிறகு CD player, Video CD Player, பின்னர்
தொலைக்காட்சிகள், தற்போது பென்-ட்ரைவ், யூ-ட்யூப்
என்று வடிவங்கள் மாறினாலும்,
நான் தொடர்ந்து என் மனதுக்குப் பிடித்த சில பாடல்களை
தவறாமல் வாரம் ஒருமுறையாவது கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.
என் இறுதி மூச்சு வரை எனக்கு இந்த வசதியை
இறைவன் கொடுக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்….
அப்படி நான் ரசித்துக் கேட்கும் பழைய பாடல்களிலிருந்து
சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்…
ஒரு சமயத்தில் – ஒன்று மட்டுமே….!!!
இன்று – கல்கி’யின் மறக்க முடியாத அமர காவியம்
“கள்வனின் காதலி” பழைய படத்திலிருந்து – (1955)
பானுமதி – டி.எம்.எஸ். குரல்களில் –
பாரதியின் பாடல் –
இசையமைப்பு – கோவிந்தராஜுலு மற்றும் கண்டசாலா….