யார் போனை யார் ஒட்டுக்கேட்டாலென்ன…..?சுவாமிக்கென்ன நஷ்டம் ….?

யார் போனை யார் ஒட்டுக்கேட்டாலென்ன…..?
சுவாமிக்கென்ன நஷ்டம் ….?

இவர் போனை ஒட்டுக்கேட்காத வரைக்கும்
சந்தோஷப்பட வேண்டியது தானே….!!!!!

நரி ……. வலம் போனாலென்ன,
இடம் போனாலென்ன –

மேலே விழுந்து பிடுங்காத வரை சரி ….
என்று தானே….சுவாமி இருக்க வேண்டும்…!!!

________________________________________________________________________

பெகாசஸ் ஸ்பைவேர்-க்கு பணம் கொடுத்தது யார்….?: சு.சுவாமி கேள்வி
Updated : ஜூலை 20, 2021

( https://www.dinamalar.com/news_detail.asp?id=2806029 )

புதுடில்லி: ‘பெகாசஸ் ஸ்பைவேர்-க்கு யார் பணம் கொடுத்தார்கள்
என்பது தவிர்க்க முடியாத கேள்வி’ எனவும், ‘அது இந்திய அரசு
இல்லையெனில் வேறு யார் கொடுத்தார்கள் என்பதை மக்களுக்கு
சொல்வது மோடி அரசின் கடமை,’ என்றும் பா.ஜ., மூத்த தலைவர்
சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர்
மூலம் பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின்
போன்களை உளவு பார்த்தது மட்டுமல்லாமல் ஒட்டுக்கேட்டதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகி வரும்
சூழலில், இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என பா.ஜ.,
மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், ‛ஒட்டுக்கேட்பு விவகாரம்
மிகவும் பெரிய பிரச்னை.
தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு தரவுகளை சேகரித்து வரும்
இஸ்ரேல் நிறுவனத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை என்பது
குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லி.,யில் விளக்கம்
அளிக்க வேண்டும். இல்லையென்றால், அமெரிக்காவின்
வாட்டர்கேட் ஊழல் போன்று இது பா.ஜ.,விற்கு பெரும்
சோதனையாக மாறும்,’ எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளதாவது:
பெகாசஸ் ஸ்பைவேர், கட்டண ஒப்பந்தங்களில் பணியாற்றும்
ஒரு வணிக நிறுவனம் என்பது தெளிவாக உள்ளது. இந்திய
“நடவடிக்கைக்கு” அவர்களுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பது
தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. அது இந்திய அரசு
இல்லையென்றால் வேறு யார்? அதை மக்களுக்கு சொல்வது
மோடி அரசின் கடமை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to யார் போனை யார் ஒட்டுக்கேட்டாலென்ன…..?சுவாமிக்கென்ன நஷ்டம் ….?

  1. Raghavendra சொல்கிறார்:
  2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    திரு சுவாமி அவர்கள் சொல்வது மிகவும் சரி .
    இது இந்தியா மட்டுமன்றி பிரான்ஸ் போன்ற
    நாடுகளிலும் நடந்து இருக்கலாம் என்று வருகிறது .

    ஒட்டுக் கேட்டது யார் ? அரசுக்கு அதிகாரம் உண்டு.
    இந்தியன் டெலிக்ராப் ஆக்ட் – 1885 கீழ்
    அரசு தேவைப்படும் போது செய்ய முடியும். -section 5(2).

    அதற்கு என்று உள்ள வழிமுறைகள் படி செய்யவேண்டும் .

    இங்கு ஓட்டுக் கேட்பதை அதிகமாக உள்ளது .
    செல்போனில் உள்ள கேமரா , ஸ்பீக்கர் போன்றவை
    மூலம் யாருடன் பேசினாலும் கேட்க /பார்க்க முடியும்.
    அவர் போனில் பேசவேண்டும் என்பதில்லை .

    யாராவது வெளிநாட்டு தீய சக்திகளும் செய்யலாம் .
    இது பற்றி அரசுக்கு தெரியாது என்று சொல்லமுடியாது .

  3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    This article is very informative
    https://www.bbc.com/news/technology-57910355

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மெய்ப்பொருள்,

      நன்றி நண்பரே.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.