ஸ்டாலின் -பிரதமர் …!!!இந்த அளவிற்கு கூட கதை விட முடியுமா ….?

இது ஒன்-இந்தியா செய்தித்தளமா அல்லது
திமுக-வின் வெப்சைட்டா….!!!

இன்று வந்திருக்கும் – செய்திக்கட்டுரை என்று சொல்லப்படும்
கற்பனை கூட செய்ய முடியாத ஒரு “ஸ்கூப்….”

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/will-mk-stalin-be-declared-the-pm-candidate-and-whats-pks-plan/articlecontent-pf573211-427448.html

சென்னை ஸ்டாலின் “பிரதமர்” வேட்பாளரா?.. என்ன நடக்கிறது டெல்லியில்.. தேசிய அளவில் உயரும் “கிரேடு”!

By Hemavandhana
Updated: Monday, July 19, 2021,

சென்னை: ஒரு முக்கியமான விஷயம் ஓடிக் கொண்டிருக்கிறது.. முதல்வர் ஸ்டாலினின் மருமகனும் பிரசாந்த் கிஷோரும் அடிக்கடி பேசி வருகின்றனராம்.. இது சூப்பர் பதவிக்கான மூவ் என்கிறது டெல்லி வட்டாரங்கள்..! நான் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு போன
பிரசாந்த கிஷோர் 2 மாசத்தில் மறுபடியும் அரசியலுக்கு ரீ-என்ட்ரி தந்துவிட்டார்..!

சூட்டோடு சூடாக சரத்பவாரையும் சென்று சந்தித்தார்.. ஒருவேளை 3வது அணி
வரப்போகிறதோ என்ற டவுட் இருந்தது.. ஆனால், பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத 3வது அணி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்.

ஓஹோ.. ஸ்டாலின் இதற்காகதான் டெல்லி சென்றுள்ளாரா.. குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறார்.. பரபர தலைநகரம் எம்பி தேர்தல் ஆனால், 2024-ல் நடைபெறவிருக்கும் எம்பி தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக-வை மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான வலுவான கூட்டணியை பிகே களம் அமைக்க தயாராகிவிட்டார் என்றே கூறப்பட்டு வருகிறது..

மேலும் உபி உட்பட பல்வேறு மாநிலங்களில் விரைவில் தேர்தல் வரப்போகிறது.. இந்த முறை உபியில் ஜெயித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கங்கணம் கட்டி இறங்கி உள்ளது.. அதேபோல பஞ்சாப்பையும் காங்கிரஸ் விடுவதாக இல்லை.


சந்திப்புகள் இப்படிப்பட்ட சூழலில்தான் பிரசாந்த் கிஷோரின் வருகையும்,
சந்திப்புகளும் முக்கிய இடத்தை பெற்று வருகின்றன. இதெல்லாம் அடுத்தடுத்து
மாநிலங்களில் நடக்க போகும் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் என்றாலும்,
பிரதமர் வேட்பாளர் என்ற விஷயமும் சேர்ந்தே கிளம்பி உள்ளது..

காங்கிரஸாகட்டும், மேற்கு வங்கமாகட்டும், தமிழகமாகட்டும் இந்த தலைமைகள் எல்லாருக்குமே பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைத்து தந்தவர்.. இனியும் தருபவர். ராகுல் காந்தி அந்த வகையில், ஒருவேளை ராகுல்காந்தியை பிரதமராக்க பிகே பிளான் செய்திருப்பதாக தெரிகிறது.. மற்றொருபக்கம், பாஜகவுக்கே ஒற்றை நபராக தண்ணி காட்டி கொண்டிருக்கும் மம்தா பானர்ஜியும், இன்னொரு பக்கம் இளைஞர்களின்
ஆதரவை பெற்ற ஜெகன் மோகன் ரெட்டியும் பிரதமர் வேட்பாளர் கனவில்
இருப்பவர்கள்தான்.

இப்படிப்பட்ட சூழலில்தான் ஸ்டாலினின் பெயரும் அடிபடுகிறது..
இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்ற கேட்டகிரியில் ஸ்டாலினின் தற்போதைய செயல்பாடுகள் அமைந்து வருகின்றன…….( !!!!!!!!!!!!!!!!!!!!!!! )

எனவே, ஸ்டாலினையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பிரசாந்த் கிஷோர் பிளான் செய்கிறாராம்.. அதாவது ஒன்று ராகுல் காந்தி அல்லது ஸ்டாலின் என்று கணக்கு போட்டு வருகிறாராம்.. இதனை மற்ற கட்சித் தலைவர்களிடம் அவர் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது..

ஒருவேளை ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஸ்டாலினுக்கும் ஒரு முக்கியமான அதாவது தேசிய அளவிலான பதவி கிடைக்கும் என்கிறார்கள்.


இதற்காகவே ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் பிரசாந்த் கிஷோரும் அடிக்கடி
பேசி வருவதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.. இவர்கள் இருவரும் ஏற்கனவே
நண்பர்கள்தான்.. பிகேவை ஸ்டாலினுக்கு அறிமுகப்படுத்தியதே சபரீசன்தான்..
கூட்டணி அந்த வகையில் இவர்கள் நட்பின் அடிப்படையில் சந்தித்தாலும்,
பிகே 2வது இன்னிங்ஸ் தொடங்கி உள்ளதால், சபரீசனின் சந்திப்பை இயல்பாக
கடந்து விட முடியாது.

அநேகமாக எதிர்க்கட்சி கூட்டணிக்கு தென் மாநிலத்திலிருந்து ஒரு முக்கிய பதவி கொடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் எழுந்துள்ள நிலையில்,
ஸ்டாலின் தான் அதற்கு தகுதியானவர் என்று பிகே படுஸ்ட்டிராங்காக நினைக்கிறாராம்.

அறிவிப்பு? பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமான கூட்டணி ஒரு பக்கம் ரெடியாகிறது என்றால், தேசிய அளவிலான ஒரு பதவி ஸ்டாலினுக்கு கிடைக்க போவதாக தகவல்கள் வருவது அரசியல் அனலை கூட்டி வருகிறது..

முக்கிய பதவி ஸ்டாலினுக்கு கிடைக்குமா?


மோடிக்கு மாற்றாக, முக ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா?


தெரியவில்லை.. பார்ப்போம்..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

____________________________________________________________________________________________________

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ஸ்டாலின் -பிரதமர் …!!!இந்த அளவிற்கு கூட கதை விட முடியுமா ….?

 1. arul சொல்கிறார்:

  புஹாஹாஹாஹா – CHEEMAN style sirippu .. One India bought and taken over by sabareesan 5 years back..still are you reading OneIndia? KM sir?

 2. புதியவன் சொல்கிறார்:

  //இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்ற கேட்டகிரியில் ஸ்டாலினின் தற்போதைய செயல்பாடுகள் அமைந்து வருகின்றன…….( !!!!!!!!!!!!!!!!!!!!!!! )// ஆச்சர்யக்குறிகள் அந்தப் பிரச்சார தளத்திலிருந்தா இல்லை உங்கள் கமெண்டா?

  65 வாரங்கள், ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியதில், ஒரு வாரத்தில் 1000-2000 பேர் வாக்களித்தனர், அதில் ஸ்டாலின் சிறந்த முதல்வர் என்று முதலிடத்தில் இருந்தார் என்று கூசாமல் அந்த வாக்கெடுப்பு நடத்திய பிரகஸ்பதிகள் சொல்றாங்க (நல்லவேளை 650 வாரங்களாக என்று சொல்லாமல் விட்டானுங்களே புண்ணியவான்கள்). என்ன என்னவோ விளம்பரங்களை இந்தத் தொலைக்காட்சிகள் இணைய பத்திரிகைகள் எழுதுகின்றன சொல்கின்றன.

  இப்போ பிரதமர் வேட்பாளரா?

  நல்லவேளை… இந்த இணையப் பத்திரிகைகளெல்லாம் இந்திய அளவில்தான் யோசிக்கின்றன. இண்டர்நேஷனல் அளவில் யோசித்து, தனது துணை அதிபர் பதவிக்கு ஸ்டாலினை சிபாரிசு செய்ய பெரிய அளவில் அமெரிக்காவின் ஆளுங்கட்சி யோசிக்கிறது என்றெல்லாம் எழுதாமல் விட்டாங்களே… சந்தோஷப்படுவீங்களா…அதை விட்டு விட்டு…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // ஆச்சர்யக்குறிகள் அந்தப் பிரச்சார தளத்திலிருந்தா இல்லை உங்கள் கமெண்டா? //

   உங்கள் சந்தேகம் சீரியசானது இல்லை என்பது எனக்கு புரிகிறது…!!!
   ஸ்மைலிஸ் போட்டிருந்தால் இந்த சந்தேகம் யாருக்கும் வராது…

   முன்பெல்லாம் wordpress -ல் ஸ்மைலிஸ் போட முடிந்தது…
   இப்போதெல்லாம் அது ஏற்பதில்லை; புதிய wordpress software படுத்துகிறது.இப்போதெல்லாம் எழுதுவதே சிரமமாக இருக்கிறது;
   உங்களுக்கு எதாவது வழி தெரிந்தால் சொல்லுங்களேன்…(இங்கே ஸ்மைலி சேர்க்க…!)

   மற்ற நண்பர்கள் யாருக்காவது தெரிந்திருந்தாலும் சொல்லலாம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   .

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அருள்,

  சுவாரஸ்யமான செய்திகள் (…!!! ) எங்கிருந்தாலும்
  தேடிச்சென்று படிக்கிறேன் நான்….இல்லையெனில்
  இங்கே எழுதுவது எப்படி..?

  .
  வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

 4. bandhu சொல்கிறார்:

  “பொய் பேசலாம்.. ஆனா ஏக்கர் கணக்குல பேசக்கூடாது”.. கவுண்டமணி வசனம் இதற்கு மிக பொருத்தம்!

 5. கந்தவேல் சொல்கிறார்:

  எங்கள் அக்கா , மம்தா பானர்ஜி யின் கண்களில் இந்த செய்தி மட்டும் பட்டிருந்தால்,
  நினைக்கவே குலை நடுங்குகிறது.
  மோடிக்கே சிம்ம சொப்பனமாக விளங்கும் அவர் என்ன இளிச்ச வாயரோ?
  அடுத்த ஒன்றிய பிரதம மந்திரி பதவிக்கு மிகப்பெரிய கூத்து காத்திருக்கிறது போலும் ….
  இது வழக்கம் போல பிஜேபிக்கே சாதகம்.

 6. tamilmani சொல்கிறார்:

  தமிழ்நாட்டின் முதல்வர் ஆனதே கமல், சீமான், தினகரன் பிரித்த ஓட்டுக்களினால்..
  அவர் பலம் அவருக்கும் நிச்சயம் தெரியும். மோடி எங்கே ? எழுதி கொடுத்த சீட்டை சரியாக
  படிக்க தெரியாத இவர் எங்கே? அதுவும் திமுகவுக்கு ஒட்டு போட்ட மக்கள், தவறு செய்துவிட்டோம்
  என்று இரண்டு மாதங்களில் வருந்தும் அளவிற்கு அவரது மந்திரிகள் நடந்து கொள்ளுகிறார்கள்.
  மின்சார துறை மீண்டும் சொதப்ப ஆரம்பித்து விட்டது. இவர் போய் இந்திய பிரதமரா?
  காமெடிக்கும் ஒரு அளவு உண்டு.

கந்தவேல் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s