தேவையற்ற குழப்பங்களை வேண்டுமென்றே ஏற்படுத்தி அதை பெரியதாக வளர விட்டு விட்டு –

தேவையே இல்லாமல் ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதை பெரிதாக வளர விட்டு விட்டு, இப்போது அவர்கள் சொல்வது –

” It is only a Clerical Mistake….”

செய்தி விவரம் கீழே –

கொங்குநாடு எங்கள் கிளரிக்கல் மிஸ்டேக்: முற்றுப்புள்ளி வைத்த முருகன்-
2021-07-17

தமிழகத்திலிருந்து ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் முருகனின் சுய விவரத்தில் எல். முருகன், கொங்குநாடு, தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.

ஒன்றிய அரசின் குறிப்பிலேயே கொங்குநாடு என்ற வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது என்றால் இது தமிழ்நாட்டைப் பிரித்து கொங்குநாடு அமைக்கப்படும் என்ற பாஜகவின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறதா என்றும், ஒன்றிய அரசு என்று மத்திய அரசை தமிழக அரசு அழைக்கும் நிலையில் அதற்கான பதிலடியாக இந்த வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறதா என்றும் விவாதங்கள் எழுந்தன.

இதற்கிடையில் கொங்குநாடு தனி மாநிலம் வேண்டும் என்று கோவை மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழக பாஜக சார்பில் இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்த நிலையில் அக்கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் என்.ஏ.எஸ்.பிரசாத் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “கொங்குநாடு என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு அல்ல” என்று கூறப்பட்டது.

ஆனபோதும் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் பாஜகவின் பலர்
கொங்குநாட்டை வலியுறுத்தியே வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனே நேற்று
(ஜூலை 16) விளக்கம் அளித்துள்ளார். நேற்று தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்கும் விழாவில் எல். முருகனும் கலந்துகொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கொங்குநாடு பற்றிய கேள்வி அண்ணாமலையிடம்
கேட்கப்பட்டது. அதற்கு அவர்,

“ இதுல எந்த குழப்பமும் இல்லை. ஒவ்வொரு அமைச்சரையும் அறிமுகம்
செய்யும்போது எல். முருகன் அவர்களைப் பற்றி குறிப்பிடும்போது கொங்குநாடு,
தமிழ்நாடு என்று இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரியும்,

நாங்கள் எமோஷனல் பாலிடிக்ஸ் பண்ணி இதைப் பிரிக்கிறோம்.
அதைப் பிரிக்கிறோம்னு சொல்லி பாலிடிக்ஸ் பண்ணது கிடையாது….!!!!!

முருகன் அவர்களுக்கு ஒரு சோஷியல் ஐடென்டிடியாக சமுதாய அடையாளமாக அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். இப்ப கூட ட்விட்டர் பேஜ்ல கொங்குநாடு, சோழ நாடு, பாண்டியநாடு எல்லாமே போட்டுக்குறாங்க. பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்பது முருகன் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து மேலே அனுப்பப்பட்டுள்ள இணை அமைச்சர். இதில் வேறு எந்த குழப்பமும் கிடையாது”

 • – என்று அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்கும்போதே… ”இதில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்விகள் தொடர ஒன்றிய அமைச்சர்
 • முருகன் குறுக்கிட்டுப் பேசினார்.

“இது டிஸ்கஸ் பண்ண வேண்டிய பாயின்ட்டே கிடையாது.
இட் ஈஸ் அன் அவர் க்ளரிக்கல் மிஸ்டேக்”

 • – என்று பதிலளித்து கொங்குநாடு என்று அழைத்தது தங்கள் தவறுதான் என்று முற்றுப்புள்ளி வைத்தார் முருகன்.

ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதற்காக கொங்குநாடு என்ற முழக்கம் முன்
வைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “அதெல்லாம்
இல்லைங்க. நமது அமைச்சரே இதை கிளாரிஃபை பண்ணிவிட்டார். அந்த
சப்ஜெக்ட்டை விட்டுடுங்க’என்றார்.

“கட்சியில் மாவட்ட அமைப்புகளில் கொங்குநாடு வேண்டுமென்று தீர்மானம்போட்டிருக்கிறார்களே?” என்ற கேள்விக்கு,

“ஒரு மாவட்டத்தில் செயற்குழுவில் தீர்மானம் போட்டிருக்காங்க. எங்களுடைய
சில தலைவர்களும் அங்க போயிருந்தாங்க. உடனடியாக அந்த மாவட்டத் தலைவரை நாம் கேட்டிருக்கிறோம்.’கீழே மக்கள் இதுபோல எதுவும் கேட்காதபோது, கட்சியின் கருத்தும் இப்படி இல்லாதபோது நீங்கள் எப்படி தீர்மானம் போடலாம் என்று விளக்கம் கேட்டிருக்கிறோம். அவர் விளக்கம் அளிப்பார். தமிழக பாஜகவின் நிலைப்பாடு அது கிடையாது. ஒரு சின்ன விஷயத்தை வைத்து பெரிதுபடுத்தக் கூடாது” என்று முடித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

ஒரு வாரமாக வேறு பிற அடிப்படைப் பிரச்சினைகளை ஓரங்கட்டி கொங்குநாடு
என்ற கோஷம் மீடியாக்களிடம் விவாதப்பொருள் ஆன நிலையில், அதை ஒரு
கிளரிக்கல் மிஸ்டேக் என்று ஒரேடியாக முடித்துவிட்டார் முருகன்.

https://www.minnambalam.com/politics/2021/07/17/12/kongunadu-an-our-clerical-mistake-lmurugan-openly-admit-pressmeet-kamalalayam-annamalai

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தேவையற்ற குழப்பங்களை வேண்டுமென்றே ஏற்படுத்தி அதை பெரியதாக வளர விட்டு விட்டு –

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை. சார்… நான் இதை திமுகவுக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகத்தான் பார்த்தேன். திமுக ‘ஒன்றிய அரசு’ என்று சொன்னதும் (constitutionல உள்ளதையெல்லாம் அப்படியே தமிழ்ப்படுத்த மாட்டார்கள். இது பிரிவினை வாதம், அல்லது பாஜகவின் மீதான வெறுப்பாக ஆரம்பித்தது), எல்லாத் தொலைக்காட்சிகளும் உடனே பயந்துகொண்டு அன்றிலிருந்து ஒன்றிய அரசு என்று சொல்லின. கொங்குநாடு என்ற பிரச்சனை வந்த பிறகு, தமிழக அரசின் குறிப்புகளிலும் மத்திய அரசு என்று ஆரம்பித்தது. தொலைக்காட்சிகள் எல்லாமே அப்போதிலிருந்து மத்திய அரசு என்று ஆரம்பித்தன. பிறகு எதைத் தொடர்ந்தால் திமுகவுக்கு ஜால்ரா அடித்த மாதிரி இருக்கும் என்ற குழப்பத்தில் தொலைக்காட்சிகள் சில சமயங்களில் ஒன்றிய அரசு என்றும் சில நேரங்களில் மத்திய அரசு என்றும் செய்தி போட ஆரம்பித்தன. பாஜகவின் கொள்கைகளில் மாநிலங்களைப் பிரிப்பது என்பது கிடையாது என்பதால், இப்போது clerical error என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். திமுக அரசும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தையை நீக்குவேன் என்று நீக்கி, அதற்கு திமுக எம்.எல்.ஏ சட்ட சபையில் ஆதரவாகவும் பேசினார். காங்கிரஸ் இதனை வெளியில் எதிர்த்தது. பிறகு, சட்டசபைத் தேர்தலுக்காக அமைந்த கூட்டணி என்றும் ஒரு வார்த்தையை அதன் தலைவர் தெரிவித்தார். இதெல்லாம் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

  பாஜகவினர், முதல் அமைச்சர் என்பவரே, constitution பிரகாரம் கவர்னருக்கு ஆலோசகர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் ஸ்டாலினை, கவர்னரின் ஆலோசகர் ஸ்டாலின் என்று குறிப்பிடலாமா என்று கேட்டனர். Union of districts தான் தமிழகம் என்பதால் மாவட்ட ஒன்றியத் தலைவர் ஸ்டாலின் என்றும் குறிப்பிடலாமா என்றனர். இதெல்லாம் அக்கப்போர் என்பது என் எண்ணம்.

  • கந்தவேல் சொல்கிறார்:

   என்ன செய்வது.?
   சொன்னபடி நீட் தேர்வை தடை செய்ய இயலாது,பெட்ரோல் விலையையும் குறைக்க இயலாது, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 அளிக்க இயலாது.
   இதுபோல் ஏதாவது அக்கப்போர் செய்து மக்களை திசைதிருப்பி விட வேண்டியதுதான் .இல்லை என்றால் தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிடமாட்டார்களா என்னா.
   அவரவர் பிரச்சினை அவரவர்களுக்கு …

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  நீங்கள் சொல்வது போல் திமுக –
  அப்படியொன்றும்
  ஒன்றிய அரசு என்று சொல்வதை
  நிறுத்தியதாக தெரியவில்லையே ?

  .
  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ஒன்றிய அரசு என்று சொல்வது சரிதான் .
  ஆங்கிலேயர் காலத்தில் மத்திய அரசு என்றுதான்
  இருந்தது . மாட்சிமை தாங்கிய அரசரின்
  பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் இருந்தார்.
  செக்ஸன் 124 A அப்போதில் இருந்தே உள்ளது .

  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ்
  UNION என்றே உள்ளது . நாம் மத்திய அரசு
  என்று சொல்லிக்கொண்டாலும் யூனியன்
  என்பதுதான் சரி .

  இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் உள்ளனர்.
  மாநில அரசு என்பதுதான் உள்ளது .
  யூனியன் அரசுக்கு பாதுகாப்பு , வெளியுறவு ,
  மற்றும் நிதி பொறுப்பு உள்ளது .
  பணம் அச்சிடுவது ரிசெர்வ் பாங்க் செய்யும் .

  கல்வி என்பது மாநில/மத்திய அரசு என்று
  இருவரின் கீழும் வரும் .
  முதல்வர் என்பது மக்களால் தேர்ந்து எடுக்கப்படுபவர் .
  கவர்னர் என்பவருக்கு தனியாக செயல்படும்
  அதிகாரம் கிடையாது – முதல்வர் சொன்னதை
  கேட்டுத்தான் நடக்க வேண்டும் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.