தலைப்பை எசகு பிசகாகப் போட்டுவிட்டு உள்ளே
சரக்கு இல்லாமல் கதை விடுவதில் ஜூனியர் விகடன்
முந்தி நிற்கிறது….
பெரியதாக தலைப்பு போட்டிருக்கிறது –
“என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை… கொதிப்பில் திருமதி முதன்மை!”
தலைப்பிற்கு தொடர்பே இல்லாத பல கதைகளை உள்ளே போட்டுவிட்டு,
கடைசியில் ஒற்றை வரியில் –
‘‘தி.மு.க-வில் இணைவதற்கு ரூட் போடுகிறாராம் பா.ஜ.க-விலிருக்கும்
பிரபல நடிகை. அறிவாலயத்தில் தனக்கிருக்கும் தொடர்புகள் மூலமாக
ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம் அவர்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து, திருமதி முதன்மை
கொதிப்பின் உச்சத்திலிருப்பதாகத் தகவல்” என்றபடி சிறகை விரித்தார்
கழுகார்….” என்று கதைக்கிறது.
திருமதி குஷ்பு சுந்தர் பற்றிய வதந்திகளைத்தான் இப்படி
சுற்றி வளைத்து இல்லாத மர்மங்களையெல்லாம் உள்ளடக்கித் தருகிறது.
இதில் புதிதாக ஒரு பெயர் உருவாக்கம் வேறு — “திருமதி முதன்மை”
கழுகார் கதை விட்ட நேரமோ என்னவோ, குஷ்புசுந்தர் மத்திய அமைச்சர்
ஆனதற்காக எல்.முருகனை பாராட்டும் சாக்கில், தான் இன்னமும் பாஜகவில்
தொடர்வதாக காட்டிக்கொண்டு விட்டார்…..
( இது லேடஸ்ட் செய்தி – டெல்லியில் எத்தனையோ முறை பதவிகள், பொறுப்புகள்
தமிழக தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.. அதில்கூட குஷ்பு பெயர் வரவில்லை..
கடந்த வாரம், சில மாநில ஆளுநர்களை மாற்றியமைத்து ஜனாதிபதி
உத்தரவிட்டிருந்தார்.. இதுகுறித்து குஷ்பு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்..
அதில், பெண்கள் யாருமே இந்த பதவிக்கு தகுதியில்லையா?
உங்கள் கண்ணில் சிறந்த பெண்கள் யாருமே படவில்லையா? என்று குடியரசு
தலைவரிடமே கேள்வி எழுப்பியிருந்தார். வாழ்த்து இதற்கு மறுநாளே,
மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு, முருகனுக்கும் மத்திய அமைச்சர்
பதவி தரப்பட்டது.. ஊரே கூடி முருகனை வாழ்த்தியது.. ஆனால், குஷ்பு மட்டும்
வாழ்த்து எதுவுமே சொல்லாமல் இருந்தார்.. இப்போது ஒரு வாரம் கடந்த நிலையில்,
முருகனுக்கு மனம்திறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். முருகனை நேரில்
சந்தித்து வாழ்த்தியுள்ளார் குஷ்பு.
அந்த ட்வீட்டில், எங்கள் ஹீரோ என்று பெருமிதத்துடன் முருகனை குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் தமிழ்நாட்டின் ஹீரோ முருகனுக்கு இந்த பதவி கிடைத்தது மகிழ்ச்சி என்றும்,
என்னை கட்சிக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்காற்றியவர்.. அவருக்கு
எப்போதுமே நான் நன்றியுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். )
புஸ்வாணம்…!!!
வாசகர்களின் பேராதரவோடு இருந்த குமுதம் எப்படி கடந்த சில வருடங்களாக புஸ்வாணமாகியதோ அதுபோல விகடன் குழுமமும் பாலசுப்ரமணியன் அவர்களுக்குப் பிறகு கட்சிப் பத்திரிகையாகிவிட்டது. இதுல பிரச்சனை என்னன்னா, தவறான கட்டுரை, தயாநிதிக்குக் கேடாக முடியும்.
அதெல்லாம் இருக்கட்டும்… குஷ்புவுக்கு செய்தியாளர் பதவியைத் தவர (தேசிய தொலைக்காட்சியில் கட்சி சார்பாக பேசும் பொறுப்பு தவிர) வேறு என்ன பொறுப்பு கொடுப்பது? நானே முடிவெடுக்கும் நிலையில் இருந்தால், அவருக்கு ஏற்ற பொறுப்பு செய்தியாளரைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்றுதான் நினைப்பேன், எந்தக் கட்சியிலும். கனிமொழி எதுக்கெடுத்தாலும் கவலையே படாமல் பொய்யாகவாவது எல்லாப் பிரச்சனைகளிலும், குறிப்பாக தென் தமிழகப் பிரச்சனையிலும் முன்னால் போய் நிற்பார். குஷ்பு அப்படி எத்தனை பிரச்சனைகளில் கட்சியின் சித்தாந்தத்தோடு போய் களத்தில் நின்றிருக்கிறார், பேசியிருக்கிறார்? இன்னொருவரைச் சார்ந்து அவர் பதவி வாங்கித் தருவார் என்று நினைப்பது, பாஜகவில் நடக்காது என்று நான் கருதுகிறேன், இந்த கோஷ்டி பிஸினெஸ் காங்கிரஸ் கலாச்சாரம். அங்கே குஷ்பு அளவுக்கு அதிகமாக இளங்கோவன் நிழலில் இருந்துவிட்டார்.