இது வரை இந்த விமரிசனம் தளத்தில் ஜப்பான் பற்றி அதிகம் எழுதியதில்லை….
மேற்கத்திய நாடுகளைப்பற்றி நாம் அறிந்த அளவிற்கு, கிழக்கு-ஆசிய நாடுகளைப்பற்றி அறிந்ததில்லை; எதற்கெடுத்தாலும், மேற்கே பார்ப்பதே நமக்கு வழக்கமாக இருந்திருக்கிறது….
கிழக்கேயும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன….. அதில் ஒரு துவக்கமாக, ஜப்பானில் தனது அனுபவங்கள் குறித்து தமிழர் ஒருவர் விவரிக்கும் காணொலியை கீழே பதிப்பிக்கிறேன்…
அண்மைக்காலங்களில் எனது dash board மூலம் ஜப்பானிலிருந்தும் சில தமிழ் நண்பர்கள் விமரிசனம் தளத்தை படிப்பதை அறிகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது… அத்தகைய வாசக நண்பர்கள் யாராவது இங்கு பின்னூட்டம் மூலம் தொடர்பு கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
எரிமலைப் பாறைகள் –
பிலிப்பைன்ஸில் ஒரு எரிமலையைப் பார்க்கச் செய்த பிரயாணமும் (அதற்கு 300 மீட்டர் தொலைவில் பூமியிலிருந்து இன்னும் வெப்பப் புகை வரும்), தாய்வானில் எரிமலை இருக்கும் பகுதிக்குக் குடும்பத்தோடு சென்றதும் நினைவுக்கு வருகிறது (கந்தக வாடை, புகை, பூமியிலிருந்து சிறிய பள்ளத்தில் கொதிக்கும் தண்ணீர் என்று). இருந்தாலும் இத்தகைய இடங்களுக்குப் பிரயாணம் செய்தால், அந்த அமிலக் காற்று நம் உடலுக்கு ஆகாது என்றும் படித்தேன்.
நம்மவர்கள் அங்கு எப்படி வாழ்கிறார்கள், உணவுக்கு என்ன செய்கிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆசை. பிலிப்பைன்ஸில், காலை உணவாக, உப்புமா, சாதம், தயிர், அவல் உப்புமா போன்றவையும் கிடைத்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது (தங்கிய பிலிப்பைன்ஸ் ஹோட்டலில். அதற்கு அவங்க, இங்க மருத்துவம் படிக்க நிறைய இந்தியர்கள் வருகிறார்கள், இந்தியர்களும் இங்கு வேலை பார்ப்பதால் அவர்களுக்கு ஏற்ற மாதிரி அவர்கள் உணவும், சாதமும் கிடைக்கும் என்றார்கள்)