
Rajinikanth Felicitates Writer Kalaignanam
இந்தக் காணொலியை இப்போது தான் நான்
முதல் தடவையாகப் பார்க்கிறேன்….
இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன்னர்,
1995-ல் ரஜினிகாந்த் அவர்கள் பொதுமக்களில் பலர் கேட்கும்
கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்…
எதற்கும் தயங்காமல், பளிச்சென்று அவர் சொல்லும்
பதில்கள், அவற்றில் பொதிந்திருக்கும் பக்குவம் –
வியப்பளிக்கின்றன…. அவரது இன்றைய நிலை நமக்குத் தெரியும்…. 26 ஆண்டுகளில் அவரது எண்ணங்களில், கருத்துகளில் – எதாவது மாற்றம்/முரண்பாடு தெரிகிறதா…?
26 ஆண்டுகளில் அவரது எண்ணங்களில், கருத்துகளில் – எதாவது மாற்றம்/முரண்பாடு தெரிகிறதா…?
1)ஆன்மீகம், அரசியல் ஒப்பிடுங்கள்?
இரண்டையும் ஒப்பிடக்கூடாதுங்க… கீரியும் பாம்பும் மாதிரி… 😄😄
2) என்னுடைய மகள்கள் என்னுடைய புகழ் வெளிச்சத்தில் வாழக்கூடாது.
இது இரண்டும் தான் மாறி உள்ளது.
அப்படியா அப்படி என்ன மாறிச்சு கமல் சொல்லுங்க 😂
1) ஒப்பிடவே கூடாது என்ற இரண்டையும் சேர்த்து ஆன்மீக அரசியல் என ஆரம்பித்தார்.
2) அவர் மகள்கள் அவருடைய செல்வாக்கினை பயன்படுத்த இடமாளித்தார். (UN பரதநாட்டியம் மற்றும் கோச்சடையான்)
இதில் தவறேதும் இல்லை, வயது மற்றும் அனுபவத்துடன் எண்ணங்கள் முடிவுகள் மாறவே செய்யும்.