மத்திய அரசு சில மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை
நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பு குடியரசுத்தலைவரின்
பெயரில் நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது.
கவர்னர் பதவிகளுக்கான நபர்களை யார் தேர்ந்தெடுப்பார்
என்பது குறித்த அறிவு அரசியலில் அரிச்சுவடிப் பாடம்.
மத்தியில் ஆளும் கட்சித் தலைமை தான் இதை தீர்மானிக்கும்…
குடியரசுத் தலைவரின் பெயரில் உத்திரவு வெளிவருவது என்பது
வெறும் சம்பிரதாயம் மட்டுமே….
இந்த தேர்வுகளை ஆட்சேபித்து குடியரசுத்தலைவருக்கு ஒரு
கேள்வி எழுப்பி இருக்கிறார் மத்தியில் ஆளும் கட்சியான
அதே பாஜகவைச் சேர்ந்த குஷ்பு சுந்தர்.
இத்தனை பேரை தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே… இந்தப் பதவிகளுக்கு
ஒரு பெண் கூட பொருத்தமானவராக உங்களுக்குத் தெரியவில்லையா
என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்…குஷ்பு சுந்தர்….!!!
ஏற்கெனவே பாஜகவைச் சேர்ந்த சில பெண்கள் கவர்னர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற நிலையில் இந்த கேள்வியே அபத்தமானது…
கடைசியாக, காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு
தாவும்போது – கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி, தனக்கு இன்னமும்
ஒரு பதவியும் கிடைக்கவில்லையே என்பது வேண்டுமானால் அவரது எரிச்சலுக்கான காரணமாக இருக்கலாம்….)
அவரது ட்விட்டர் செய்தி கீழே-
கையெழுத்து போடுவதைத் தவிர ஜனாதிபதிக்கு இந்த தேர்வில்
எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது கூட தெரியாத அளவிற்கு
திருமதி குஷ்பு சுந்தர் முட்டாளாக இருப்பார் என்று நமக்குத்
தோன்றவில்லை….
எனவே, இந்த ட்விட்டர் செய்தியை வெளியிடுவதன் மூலம்
மத்திய பாஜக தலைமைக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க அவர்
துணிந்துவிட்டாரென்று தானே அர்த்தம்….?
தலைமையுடன் மோதும் அளவிற்கு குஷ்பு சுந்தர் கட்சியில்
வலிமையுடையவர் அல்ல… அவர் பின்னால் எவரும்
வர மாட்டார்கள் – திருவாளர் சுந்தர் அவர்களைத் தவிர…!!!
எனவே – மீண்டும் ஒரு கட்சித் தாவலுக்கு அடிபோடுகிறார்
அம்மையார் என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்…?
மீண்டும் திமுகவா….? திமுக தலைமை இதற்கு தயாராக
இருக்குமா….?
_______________________________________________________________________
DMK should admit her into their party and make her a dummy.
எந்த ஒரு கட்சி என்றாலும் அதில் தீவிரமாக ஈடுபட்டு தலைமைக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். குஷ்புவோ கட்சி தாவுவதில் வல்லுநர். இப்போ பாஜகவில் இருப்பதால் லாபமில்லை, தமிழகத்தில் காலம் தள்ள வேறு கட்சியில் சேரணும் என நினைத்ததில் தவறில்லை.
எல்லா அரசியல்வாதிகளும் செய்யும் ட்ரிக்கை அவரும் முயல்கிறார். நல்ல அரசியல்வாதியாகத் திகழ்ந்திருக்க வேண்டியவர் கொள்கை இல்லாமல் கட்சி தாவுவதை முழு நேர வேலையாக வைத்துக்கொண்டதால் பெயரைக் கெடுத்துக்கொண்டார். She is good to a staff of a party, something like செய்தித் தொடர்பாளர்.