முக்கிய பொறுப்பில் “சேகர் ரெட்டி”..அப்ப “கேஸ்” எல்லாம் என்னாகும்….????

sekar reddy-money

sekhar-reddy-ops-

கீழே இருப்பது – நமது விமரிசனம் அல்ல….செய்தி மட்டுமே…….!!! செய்தியே தெளிவாக இருக்கும்போது- விமரிசனம் எதற்கு….? (பின் குறிப்பு….. தனி…!!!)

முக்கிய பொறுப்பில் “சேகர் ரெட்டி”..
அப்ப “கேஸ்” எல்லாம் என்னாகும்….????

July 5, 2021, 11:24 [IST] சென்னை:

சேகர் ரெட்டி மீதான வழக்குகள் என்னாகும்? ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என்ற சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில், முக்கிய பொறுப்பில் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளது, மிகப்பெரிய திருப்பத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

ஜெ.சேகர் என்னும் சேகர் ரெட்டி….
இவர் பெயரை சொன்னதுமே நமக்கு கண் முன் வந்து நிற்கும் உருவம் ஓபிஎஸ்தான்..! கடந்த காலங்களில் இவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் இணக்கம் இருந்தது.. அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தியவர் இந்த ரெட்டிதான்..!


தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன
ஒப்பந்தத்தை ஏற்று நடத்தினார்.. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது, சேகர் ரெட்டியின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிய வந்தது..

அதற்கேற்றார்போல, திருப்பதி வெங்கடாச்சலபதி கோவில் அறங்காவலராக தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டியும் அமர்த்தப்பட்டிருந்தார்..

ஒருமுறை ஓபிஎஸ் தலையில் மொட்டை அடித்து கொண்டு, ரெட்டியுடன் திருப்பதி கோவிலில் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலானது.. இவர்களின் நட்புக்கும் சாட்சியாக விளங்கியது. இதற்கு பிறகுதான், சேகர் ரெட்டியின் வீடுகளில் ரெயிடு நடந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வழக்கில் ரெட்டி கைதாகி,

அப்போது சோதனையில் அவரது டைரி ஒன்று சிக்கி, அந்த டைரியில் ஓபிஎஸ் பெயர் அடிபட்டு.. இப்படி ஒரே களேபரமாக அரசியல் களம் பரபரத்தது.


ஊழல் – இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தது.. யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ, அவர்ளின் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு, சட்ட ரீதியான தண்டனை தரப்படும் என்று ஸ்டாலின் பிரச்சாரங்களில் சொல்லி கொண்டே வந்தார்.. அப்போதே சேகர் ரெட்டியின் பெயரும் பலருக்கு நினைவுக்கு வந்தது..

ஏனென்றால், சேகர் ரெட்டி மீதான வழக்கு என்னாச்சு
என்று கேள்வி எழுப்பி கொண்டிருந்ததே ஸ்டாலின்தான்..!

ஆனால், ஸ்டாலின் முதல்வரானதுமே, சேகர் ரெட்டி நேரில் வந்து சந்தித்து பேசினார்.. கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் தொழிலதிபர்கள், விஐபிக்களிடம் வேண்டுகோள்விடுத்திருந்த நிலையில், சேகர் ரெட்டியும் ஸ்டாலினை நேரில் சந்தித்துநிதி உதவி வழங்கினார்.
ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார்.. யார் வேண்டுமானாலும் நிதி தரலாம், நிவாரணம் தரலாம் என்றாலும், சேகர் ரெட்டி ஏன் தந்தார்? என்ற சந்தேகம் வலுத்தது.

sekar reddy-nithi

அதுமட்டுமல்ல, நன்கொடை தரும்போது வெளியான போட்டோவில் உதயநிதியும் உடன் இருந்தார்..
சேப்பாக்கம் எம்எல்ஏ, இங்கே வந்து போட்டோவில் நிற்கிறார் என்ற குழப்பமும் எழுந்தது.. அப்போதுதான் இதை பற்றி நாம் விசாரித்தோம்..

கடந்த 5 மாசத்துக்கு முன்பிருந்தே அதாவது பிரச்சார சமயத்தில் இருந்தே திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் சேகர் ரெட்டி கைகோத்துவிட்டாராம்…

அதனால், மறுபடியும் மணல் ஒப்பந்தம் இவருக்கே தரப்படலாம் என்ற பேச்சு கசிந்தது. ஆந்திர விஐபி இதற்கெல்லாம் காரணம், ஆந்திரத்தின் விஐபி ஒருவர்தாம் என்றும், திமுக மேலிடத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசியதே இதற்கு காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு தகவல் …
தி.நகர் தேவஸ்தான நிர்வாக கமிட்டி தலைவர்
பதவியில் சேகர் ரெட்டி இருந்தது பெருமாள் பக்தர்களை
அதிருப்தியடைய வைத்தது…
இந்த தலைவர் பதவியின் காலம் கடந்த மாதம் முடிவடைந்து
விட்டது.. அதனால், இனி சேகர் ரெட்டியின் ஆதிக்கம் இருக்காது என்றும் கருதியது கோவில் நிர்வாகம்.


ஆனால், தலைவர் பதவியில் மீண்டும் சேகர் ரெட்டி சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ்சுக்கும் சேகர் ரெட்டிக்கும் நெருங்கிய நட்பு மற்றும் அதிமுக ஆட்சியும் இருந்ததால், தி.நகர் திருப்பதி தேவஸ்தான நிர்வாக கமிட்டியின் தலைவர் பதவியை முன்பு தக்கவைத்துக்கொண்டாராம் சேகர்ரெட்டி.

தற்போது திமுக ஆட்சி வந்திருப்பதாலும், இவரது பதவியின் ஆயுள் காலம் முடிந்தாலும், மறுபடியும் பதவியை தக்க வைக்க முடியாது என்றே கோவில் நிர்வாகம் நினைத்ததாம்.

சிபாரிசு? ஆனால், மீண்டும் அவரே வந்து அமர்ந்து விட்டார்…
இதன் பின்னணியில் திமுகவின் சிபாரிசு சேகர் ரெட்டிக்காக ஆந்திரா வரைக்கும் சென்றிருக்கலாம் என்று நிர்வாக தரப்பில் எதிரொலிக்கிறது…

அப்படியானால் மணல் ஒப்பந்தம் மீண்டும் ரெட்டிக்கே தரப்படுமா?

ஆந்திராவில் இருந்து பேசிய அந்த புள்ளி யார்? ரெட்டி மீது இருக்கும் வழக்குகள் அனைத்தும் அவ்வளவுதானா?


என்ற சந்தேகங்களும் நம்மிடையே தொத்தி நிற்கின்றன….

லிங்க் – https://tamil.oneindia.com/news/chennai/sekhar-reddy-appointed-chairman-of-the-board-of-trustees/articlecontent-pf567875-426077.html

பின் குறிப்பு – இங்கு தான் எனக்கு 2 நாட்கள் முன்பு எழுதிய குடிகார முனுசாமி நினைவுக்கு வந்தார்….. தண்ணீர் தெளித்து விட்டு, பெயரை மாற்றி விட்டால் எல்லாம் மாறி விட்டதாக ஆகி விடுமா என்கிற கேள்வி பிறக்கிறது….

அதிமுக என்கிற ஆளும்கட்சி அகன்று, அங்கே திமுக என்கிற கட்சி ஆட்சிக்கு வருகிறது…..

அதே காண்டிராக்டர்கள், அதே போல் கப்பம் கட்டுகிறார்கள்…. யாருக்கு….?

அவர்களுக்கு பதிலாக – இவர்களுக்கு…. அவ்வளவு தான்…. இதில் மாற்றம் எங்கிருந்து வருகிறது…?வாங்குகிற ஆட்கள் மாறுகிறார்களே தவிர, ஊழல் அதே இடத்தில், அப்படியே தானே இருக்கிறது…?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to முக்கிய பொறுப்பில் “சேகர் ரெட்டி”..அப்ப “கேஸ்” எல்லாம் என்னாகும்….????

 1. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

  இதற்கு பெயர் தான் திராவிடம் … தாங்கள் திராவிடத்திற்கு எதிரி போல தெரியுதே

 2. புதியவன் சொல்கிறார்:

  நீங்க அப்போ செய்தியை சரியாகப் படிக்கலைனு தெரியுது. உதயநிதி, ஸ்டாலின் இவர்களோடு சேகர் என்பவர் சந்தித்து கொரோனா நிதி வழங்கினார் என்று செய்தி வெளியிட்டாங்க. (சேகர் ரெட்டி என்ற முழுப் பெயரைத் தவிர்த்தாங்க. இதுக்கு ஊடகங்கள் ஒத்து ஊதினாங்க).

  மத்திய அரசு தமிழக அரசுக்கு பெட்ரோல் லிட்டருக்கு 53 ரூபாய்க்கு வழங்குகிறது, தமிழக அரசு 95 ரூபாய்க்கு அதனை மக்களுக்கு விற்கிறது.

  தமிழக அரசு 180 ml சாராயத்தை 52 ரூபாய்க்கு வாங்கி 118 ரூபாய்க்கு விற்கிறது

  பள்ளிகளைச் சீரமைக்க நிதி இல்லை. அரசு 2000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்போவதாகச் செய்தி. கொரோனா காலத்தில் கஜானாவில் பணம் இல்லை. ஆனால் பூங்காக்கள் உருவாக்க, சீரமைக்க 2500 கோடி ரூபாய் செலவிடப்படப்போகிறது என்று அமைச்சர் சொல்கிறார்.

  கூடங்குளம் 5,6 அடிக்கல் நாட்டுதல் இப்போது நடந்தது. ஆனால் உதயகுமாரர்கள் சப்தம் எங்கும் இல்லை.

  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள், 7 பேர் விடுதலையில் நிறைய சட்டச் சிக்கல் உள்ளது. முதலமைச்சர் இதில் எந்தச் சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார் என்று பேட்டி கொடுக்கிறார்.

  நீட் தேர்வுக்கு எதிராக எந்தக் குழுவும், உச்ச நீதி மன்றத்தின் அனுமதியுடன் மட்டும்தான் அமைக்க முடியும் என்று சென்னை உயர்நீதி மன்றம் குட்டு.

  இதையெல்லாம் எந்த ஊடகங்களும் வெளியிடாது என்பதால் நமக்குத் தெரியாமல் போய்விடாது. சென்ற ஆட்சியில் பெரியதாக ஓலமிட்ட எவரும் இப்போது இதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது, அவர்கள் அனைவரும் போலிப் போராளிகள், பணத்துக்காக கூவினவர்கள் என்று வெளிச்சமிட்டுக் காட்டுவதாக எல்லோரும் கருதுகின்றனர்.

  நடிகர் சூர்யா, திரைப்படங்களுக்கான ‘தேசவிரோத கருத்துச் சட்டம்’ கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று குதித்துக்கொண்டு குரல் கொடுக்கிறார். நீட் புத்தகத்தை விற்றுக்கொண்டே, நீட் தேர்வினால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறார் (இவர் என்ன கல்வியாளரா இல்லை மெத்தப் படித்தவரா? நாலு கதாநாயகிகளோடு டான்ஸ் ஆடினால் தானும் சமூகப் போராளி என்று நினைத்துக்கொண்டுவிடுகிறார்) ஆனால் திமுக அரசு, யூடியூபர்கள், மற்றும் செய்தி விமர்சனம் செய்தவர்களை கைது செய்தபோது இந்த so called activists கப் சிப் என்று பொத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

  இதிலிருந்தே நமக்கு முகிலன்கள், கோவாலசாமிகள், சூர்யாக்கள், ஜெயரஞ்சன்கள், உதயகுமாரன்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் (இன்னும் சில கிறிஸ்துவர்கள், இந்துப் பெயரை வைத்துக்கொண்டு போராளி கோஷம் போட்டவங்க) போன்றவர்களின் லட்சணம் தெரியும்.

  • ராஜ்குமார் சொல்கிறார்:

   புதியவன், இந்த இடுக்கைக்கும் நீங்கள் எழுதுவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? எப்படி முடியுது உங்களால்?

   ரத்தம், புத்தி, நாடி, நரம்பு எல்லாவற்றிலும் பிஜேபி வெறி ஊறிய ஒருவரால்தான் இப்படி சம்பந்தம் இல்லாமல் உளற முடியும்.

   • புதியவன் சொல்கிறார்:

    இந்த சேகர் ரெட்டி பற்றி ஸ்டாலினும் திமுகவும் எதிர்த்தபோது தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் என்ன என்ன செய்திகளைச் சொல்லின, இப்போது எப்படி திருத்திச் சொல்கின்றன என்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள். இதைத்தான் இந்தப் பதிவு சொல்கிறது.

    இது மட்டும் அல்ல, இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள், திமுகவும், ஸ்டாலினும் சொன்னார்கள். ஆனால் அது எதையுமே இப்போது செய்யவில்லை. அதற்கு மாற்றாகத்தான் இந்த அரசு நடந்துகொள்கிறது என்பதை நான் எழுதியிருக்கிறேன். ஆனால் ஊடகங்கள் அதைப்பற்றி எதையும் பிரஸ்தாபிப்பதில்லை. சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் எல்லோரும் சொன்னது, வெறும் பாஜக எதிர்ப்புப் பிரச்சாரம்தான் என்பதைத்தான் நான் இங்கு சொல்லியுள்ளேன். உடனே எனக்கு பாஜக வெறி என்று நீங்கள் எழுதுகிறீர்கள்.

    நியாயமாக, நீங்க என்ன எழுதியிருக்கணும்? அப்போ திமுக சொன்ன குற்றச்சாட்டுகள் பொய்தான். அதனை இப்போது ஸ்டாலின் நிரூபித்துவிட்டார் என்று எழுதியிருக்கணும். அதை விட்டுவிட்டு, நான் குறிப்பிட்டவைகளைக் கண்டு பொங்கி, நான் பாஜக ஆதரவாளன் என்று சொல்றீங்க. இங்கு பதிவு சொல்லும் விஷயத்தை திசை திருப்புவது நீங்களா இல்லை நானா?

 3. Rajs சொல்கிறார்:

  52 rupees to TN Govt – Source of this statements is where you belong.

  • புதியவன் சொல்கிறார்:

   Central Govt Tax – What they give back to State. Otherwise, base 32, Central 33, State 23 Rs. You can’t argue on TASMAC prices, which is 52 vs 118. I am not supporting any Govt. If we get Petrol at the purchased price ie 32 Rs, I will also be happy. My question is, we should know, State is charging 23 rs as Tax, but we continue to blame Central Govt. We are not bothered whether the wine is sold at more than 2 times the cost. This is where we are biased in our approach.

   I will come to your line of thinking. Why can’t TN Govt stop taxing on Petrol and give it at net purchased price of 63 Rs.? Why Can’t TN Govt sell wine at the purchased cost of 52 rs per 180 ml?

   If you say, I am supporting BJP, it directly means, you (or whoever is blaming) is supporting DMK. Then how our views will be correct?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.