சர்வாதிகாரிகள் ஒழுங்காகச் செத்ததுண்டா….?

hitler and musolini

உலகின் முக்காலே மூணு வீசம் சர்வாதிகாரிகளின் கடைசிக்காலம்
பரிதாபமாக, அசிங்கமாகவே இருந்திருக்கிறது….
சர்வாதிகாரிகள் பெரும்பாலும் சாதாரணச் சாவை சந்திப்பதில்லை;
அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, துர்மரணம் அடைகிறார்கள்….

2-ஆம் உலகப்போருக்கு முக்கிய காரணகர்த்தர்களாக இருந்த,
ஹிட்லரும், முசோலினியும் துவக்க காலத்திலும், இடையிலும்
தங்களை மாபெரும் உலக ஹீரோக்களாகவே கருதிக் கொண்டனர்.
அவர்களின் துவக்ககால அதிரடி வெற்றிகளைப் பார்த்த
மக்களில் பலரும் கூட அதை நம்பினர்.

ஆனால் இறுதியில் ….?

ஹிட்லர் தன்னைச் சூழ்ந்துகொண்ட ரஷ்யப்படைகளுக்கு பயந்து,
தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனான்.

முசோலினியோ, தப்பி ஓட முயற்சிக்கையில் பிடிபட்டு,
பரிதாபமாக கொல்லப்பட்டு, அவனது பிணம் முச்சந்தியில்
தலைகீழாக தொங்க விடப்பட்டு – மக்களால் அவமதிக்கப்பட்டது.

தங்களை உலக நாயகன்’களாக ஹிட்லரும், முசோலினியும்
நினைத்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரு சந்திப்பின் வீடியோ
கிடைத்தது…. கீழே –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சர்வாதிகாரிகள் ஒழுங்காகச் செத்ததுண்டா….?

  1. புதியவன் சொல்கிறார்:

    ஒரு எல்லையோடு நிறுத்திக்கொள்பவர்களும், அதீதமாகச் செயல்படாதவரையில் சர்வாதிகாரிகள் தப்பித்துவிடுவார்கள். பல நேரங்களில் அந்த எல்லையைத் தாண்டி beyond their limit செல்லும்போதுதான் பிரச்சனை.

    அது சரி… ஒழுங்காகச் சாவாத இந்திரா, ராஜீவ், லிங்கன், கென்னடி போன்றோர்களெல்லாம் சர்வாதிகாரிகளா?

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    “அந்த எல்லை” எது என்பது தானே பிரச்சினை..
    அதை தீர்மானிப்பது எது ..?

    யாரை எதிர்த்து எவரும் கருத்து சொல்ல முடியாத
    நிலை ஏற்படுகின்றதோ,

    எதிர்த்துப் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள்
    எல்லாரும் தண்டிக்கப்படுகிற நிலை,

    அல்லது தண்டிக்கப்படுவார்கள் என்று அச்சப்படுகிற
    சூழ்நிலை எப்போது ஏற்படுத்தப்படுகிறதோ –
    அது தானே சர்வாதிகாரம்….?

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      //என்று அச்சப்படுகிற சூழ்நிலை எப்போது ஏற்படுத்தப்படுகிறதோ // – அல்லது பத்திரிகைகளையும் நீதியையும் விலைக்கு வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறதோ அதுதானே சர்வாதிகாரம்.

      உண்மைதான். ஆனால் அதைத்தானே நாட்டை ஆளுபவர்கள் எல்லோருமே விரும்புகிறார்கள்? எனக்குத் தெரிந்து ஓபிஎஸ் அவர்கள் மட்டும்தான், ஒரு பிரச்சனையில் (ஜல்லிக்கட்டு என்று நினைவு), ‘மாற்றுக் கருத்துகளோ விமர்சனங்களோ இருப்பது தவறில்லையே’ என்று பேசினார் (அதற்காகவே என் மனதில் அவர் அப்போது உயர்ந்தார்).

      இப்போ, நியூயார்க் டைம்ஸ், தங்களுக்கு இந்தியாவிலிருந்து எழுதக்கூடிய பத்திரிகையாளர், கட்டுரையாளர் தேவை. அவருடைய தகுதி, ஆளும் கட்சியைப்பற்றி எதிர்த்து குறை கூறி மட்டும் எழுதவேண்டும், மோடியை எதிர்த்து எழுதவேண்டும், இந்தியாவிற்கு எதிராக எழுதவேண்டும் என்று சொல்லி (விளம்பரம் செய்து) ஆட்களைத் தேடுகிறார்கள்.. இதைப் பற்றி என்ன சொல்ல? (அதாவது இருக்கும் நாட்டிற்கு எதிராக எழுதவேண்டும் என்று வெளிநாட்டுப் பத்திரிகை இந்தியாவில் தூண்டில் போடுகிறது. இதற்கும் பிபிசிக்கும், கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் எனக்கு வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.