குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்து பாதிரியார் கூறினார்…
‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன. இன்று முதல் நீ பரிசுத்தமானவனாகிறாய். ‘டேனியல்’ என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு டேனியல்!’’
‘‘சத்தியம் ஃபாதர்… இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன்….
ஆனால், சர்பத் குடிக்கலாமா பாஸ்டர்?’’
‘‘தாராளமாக எத்தனை தடவை வேணும்னாலும் குடிக்கலாம்!’’
‘‘ஓகே பாஸ்டர்!’’
டேனியல் ஆன குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு ஃபுல் பாட்டில் விஸ்கியை எடுத்து, தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்று முறை முக்கி எடுத்துக்
கூறினான்…
‘‘உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவப்பட்டன. நீ பரிசுத்தமானவனாகிவிட்டாய். இன்று முதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய்!’’
__________________________________________________________________________________
பின் குறிப்பு – நானா இதை பதிப்பித்திருக்கிறேன் என்று
யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்….. மதம் மாறும் / மாற்றும்
எல்லா மதத்தினருக்கும் இது பொருந்தக்கூடியதே….!!!
நாம் முழுமை அடைவதற்கு நாம் ஜலத்தினாலும் ஆவியினாலும் கழுவப்படவேண்டும் என்று பைபிள் தெளிவாகச் சொல்லுகிறது. எனவே தண்ணீர் (ஜலம்) மட்டுமல்ல, இதில் ஆவி (கடவுளிடம் இருந்து வரும் உள்ளுணர்வு) முக்கியம். எனவே தாங்கள் போன்ற Intellectuals விளையாட்டாகக் கூட இதனை கொச்சைப்படுத்தக்கூடாது. ஆவி (கடவுளிடம் இருந்து வரும் உள்ளுணர்வு) நம்முள் இருந்தால் ஒருபோதும் நாம் மதுவை தொட மாட்டோம் என்பதே உண்மை.
Selvadurai Muthukani,
நான் ஏற்கெனவே கடைசி வரிகளில் சொல்லி
இருக்கிறேன் பாருங்கள் –
// நானா இதை பதிப்பித்திருக்கிறேன் என்று
யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்….. மதம் மாறும் / மாற்றும்
எல்லா மதத்தினருக்கும் இது பொருந்தக்கூடியதே….!!! //
எனக்கு மத மாற்றங்களில் நம்பிக்கை இல்லை;
மத மாற்றங்களை, அது எந்த மதத்திலிருந்து,
எந்த மதமாக இருந்தாலும் சரி- நான் முழுமையாக
எதிர்க்கிறேன்.
என்னைப் பொருத்தவரையில், எல்லா மதங்களும்
நல்லவற்றையே போதிக்கின்றன… எனவே, யார் எந்த
மதத்தில் இருந்தாலும், இருக்கும் மதத்தில்
இருந்துகொண்டே, அவற்றின் கோட்பாடுகளை
ஒழுங்காக கடைபிடித்தால் போதுமானது என்பது
என் நம்பிக்கை….
படைத்தவன், இறைவன் – ஒரே ஒருவனாகத் தான்
இருக்க முடியும்… ஒவ்வொரு மதத்திற்கென்றும்
ஒரு இறைவன் இருக்க முடியாது….
ஆனால், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் –
அந்த ஒரே இறைவனையே வெவ்வேறு பெயர்களில்
அழைக்கிறார்கள்; வெவ்வேறு விதங்களில்
வழிபடுகிறார்கள். அவ்வளவே.
நான் சொல்வது சரி தானே நண்பரே…?
– என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா… ?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்