எத்தனையோ லட்சம் பேர் தமிழகத்தில், ப்ளாட்பாரத்திலும்,
சாக்கடை ஓர குடிசைகளிலும் வாழ்கிறார்களே….
அவர்கள் அத்தனை பேரும் மனு கொடுத்தால் 5 லட்சம்
உதவி கிடைக்குமா….?
பாகவதரின் பேரன் என்பது 5 லட்சம் அரசு உதவிபெற ஒரு தகுதியா…?
இது சரியா….? முறையா….?
அடுத்து பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ஜோதிலட்சுமி, ஜெயமாலினி போன்றோரின் பேரன்கள் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா…?
ஐயா
அமிதாப்பச்சன்களுக்கே உதவும் அரசுகள் இருக்கும் போது இதெவெல்லாம் ஜுஜூபி
சும்மா வீட்டுல தோண்டின குழியை (போர்வெல்) மூடாமல், தன் குழந்தை அதில் விழுந்து செத்தவுடன், அரசிடம் கூசாமல் 20 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு பெற்றுக்கொள்ளும் மக்கள் உள்ள தமிழகம். பாகவதர் பேரனுக்கும், கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோலக் கொடுக்கிறது.
அரசு தனக்கு வேண்டியவர்களுக்கு மக்கள் பணத்தைக் கொடுக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்
மனதில் எத்தனை வன்மம் உங்களுக்கு?
நல்லா இருப்பீங்க புதியவன்.
எழுதியதில் என்ன தவறு என்று சொன்னால் நல்லா இருக்கும்
பேரனின் செத்துபோன அப்பா திமுக-வில் இருந்தவராம்.