கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை,
தேனிலவு, மீண்ட சொர்க்கம் –
போன்ற பிரமாதமான வெற்றிப்படங்களை கொடுத்தவர்
கதை, வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்கள்….
ரசனை மிகுந்த அற்புதமான இயக்குநர்…
அவர் படங்களில் காமிரா கோணங்களும் பிரமாதமாக இருக்கும்.
அந்தக் காலத்தில், ஸ்ரீதர் என்கிற பெயருக்காகவே
அவர் படங்களுக்கு இளைஞர் கூட்டம் திரண்டு வரும்.
துரதிருஷ்டவசமாக வாழ்க்கையின் பிற்பகுதியில்(1991-ல் -)
அவர் நோய்வாய்ப்பட்டு, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவரால் இயல்பாக செயல்பட முடியாத நிலை
ஏற்பட்டது…..நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு கடைசியில் 2008-ல்
தனது 75-வது வயதில் காலமானார்….
அவர் துடிப்புடன் செயல்பட்ட காலத்தில், வீடியோக்கள் எல்லாம்
பரவவில்லை; எனவே அவர் பங்கேற்ற வீடியோக்கள் அபூர்வம்.
அப்படி அபூர்வமாக ஒரு வீடியோ காணக் கிடைத்தது.
ஸ்ரீதரின் நினைவாக – கீழே தந்திருக்கிறேன்….