2-வது உலகப்போரின் உச்சகட்ட திருப்பமாக அமைந்த
களம் அமெரிக்காவின் “பியர்ல்” துறைமுகம்…..
ஒன்றல்ல… இரண்டல்ல….353 ஜப்பானிய போர் விமானங்கள் திடீரென்று அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தை சூழ்ந்துகொண்டு
குண்டுமழை பொழிந்து பெருத்த சேதத்தை உண்டாக்கியது…
188 அமெரிக்க போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன.
2,403 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்….
1,178 பேர் படுகாயமடைந்தனர்….
ஜப்பானியத் தரப்பில் சேதம் அதிகமில்லை;
29 போர்விமானங்கள், 5 சிறிய சப்மரீன்கள் மற்றும்
64 வீரர்களை இழந்தது ஜப்பான்.
2-ம் உலகப்போரில் அமெரிக்காவை தீவிரமாக ஈடுபட வைத்து,
போர் முடிவுக்கு வர ஒரு முக்கிய காரணமாகியது.
கீழே அந்த ஒரே சம்பவத்தின் 2 காட்சிகள்….
முதல் காட்சி – போர் நடந்தபோது, பிரிட்டிஷ் செய்தி நிறுவனம்
“pathe” எடுத்த நிஜமான போர்க்களம்…..
2-வது காட்சி, இந்த சம்பவத்தை வைத்து பிரம்மாண்டமாக
எடுக்கப்பட்டு, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த
“பியர்ல் ஹார்பர்” ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து –
_____________________________________________________________________________________________