இங்கிலாந்து மகாராணியை சந்தித்த முதல்வர் ராமசாமி –

paramartha guru

இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்த முதல்வர் ராமசாமி –

“உங்கள் மாட்சிமை தங்கிய அதிகாரத்தில் நீங்கள் பல பத்து ஆண்டுகள் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?” என்றார்.

“சரி” என்ற ராணி, “அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

முதல்வர் ராமசாமி குழப்பமாகி, “ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்றார்.

ராணி, “மிக எளிது; நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்” என்று சொல்லிக்கொண்டே, இண்டர்காம் பொத்தானை அழுத்தி, “டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?” என்றார்.

டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, “சொல்லுங்கள் அம்மா” என்றார்.

ராணி சிரித்துக் கொண்டே கேட்டார், “டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?”

ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், “அது நான்தான் மேடம்” என்றார்.

“நன்றி டேவிட் !” என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் முதல்வர் ராமசாமி பக்கம் திரும்பி “பார்த்தீர்களா?” என்றார்.

முதல்வர் ராமசாமி மீண்டும் இந்தியா வந்தவுடன் தனது டெபுடி
கோபாலசாமியிடம் கேட்டார்….

“கோபாலசாமி, உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?”

“உறுதியா தெரியல; நாளைக்கு சொல்றேன்” என்ற கோபாலசாமி,
அவரது ஆலோசகர்களான அப்பாசாமி, குப்புசாமி, சுப்புசாமி,
சோமுசாமி, நாகசாமி, ஆகியோர் ஒவ்வொருவரிடமும் கேட்டார்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

அதில் ஒருவர் பழைய பழக்கத்தில் கட்சியை விட்டு ஏற்கெனவே ஓடிப்போன குண்டுசாமியிடம் ஓடி, “நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?” என்று கேட்டார்.

புத்திசாலியான குண்டுசாமி – “அதுல என்ன சந்தேகம்….அது நாந்தேன்…” என்றார்.

விஷயத்தை கேள்விப்பட்ட டெபுடி கோபாலசாமி, முதல்வர் ராமசாமியிடம் ஓடிப்போய், “எனக்கு விடை தெரியும்” என்றார்.

“சொல்லுங்க”.

” ஓடிப்போன குண்டுசாமி தான் அது…”.

தலையில் அடித்துக்கொண்ட முதல்வர் ராமசாமி சொன்னார்;

உங்களை மாதிரி ஆட்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு
நான் எங்கே பல பத்தாண்டுகள் ஆட்சி செய்வது….

” கொஞ்சமாவது யோசிக்கக்கூடாதா…? – அது டேவிட் கேமரூன் ….!”

__________________________________________________________________________________________

(திட்டாதீர்கள் – உல்ட்டா தான்…!!! )

_______________________________________________________________________________________

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.