இந்தியாவின் வட பகுதி முழுவதும் – பரந்து விரிந்து
கிழக்கிலிருந்து மேற்காக, சுமார் 2,500 கிலோ மீட்டர் தூரம்
பரவிக் கிடக்கும் இமயத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன்…
இருந்தாலும், அதில் நூற்றில் ஒரு பகுதியைக் கூட நான் இன்னமும்
பார்த்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.
இமயம் பூராவும் எழில் கொஞ்சும் பிரதேசங்கள்….
விண்ணைத்தொடும் மலைமுகடுகள், பனிபடர்ந்த பள்ளத்தாக்குகள், ஹிமாசல் பிரதேசம், பூர்வாஞ்சல், உத்தராஞ்சல்,லடாக், காஷ்மீர், சிக்கிம், குலு, மணாலி, சிம்லா, ஹரித்வார், ரிஷிகேஸ்,பத்ரிநாத், கேதார்நாத் என்று எத்தனையோ இடங்கள் –
டூரிஸ்ட் பயணிகள் போகும் இடங்களானாலும் சரி, பக்தர்கள் விரும்பும் புண்ணியஸ்தலங்களானாலும் சரி – எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத அற்புதமான இடங்கள் ….
மீண்டும் மீண்டும் போகத்தூண்டும் இயற்கையின் வனப்பு….
நான் இன்னும் போகாத இடங்களில் முக்கியமானதொரு இடம் கேதார்நாத். நான் போக நினைத்திருந்த வருடம் – மிகப்பெரிய இயற்கை பேரிடர் வந்து – போக முடியாமல் செய்துவிட்டது….
போக வேண்டும் என்கிற ஆர்வம் இன்னும் குறையவில்லை;ஆனாலும் – அநேகமாக அதற்கு வாய்ப்பில்லை ….
இருந்தாலும் நான் ஏற்கெனவே தியேட்டரில் பார்த்திருந்த “கேதார்நாத்” ஹிந்தி படத்தின் சில காட்சிகளை மீண்டும் ஒருமுறை பார்த்து இப்போதைக்கு திருப்தியடைவோம் என்று நினைத்தேன்….
யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற –
அவற்றை கீழே பதித்திருக்கிறேன்.
மொழியை மறந்து விடுங்கள்;
கதையை மறந்து விடுங்கள்;
மதங்களையும், மனிதர்களையும் மறந்து விடுங்கள் ;
நடிகர், நடிகைகளை, கதாபாத்திரங்களை – மறந்து விடுங்கள்….
முழுக்க முழுக்க – காமிரா காட்டும் அழகுக்காகவே,
அந்த எழில் கொஞ்சும் கேதார்நாத் செல்லும் வழியையும்,
கேதார்நாத்தின் பின்னணி, அழகையும் காண்பதற்காக மட்டுமே
நீங்கள் இதைப் பார்க்கலாம்…. கண்கொள்ளாத அளவிற்கு
விரியும் இயற்கையின் பேரெழில் கொஞ்சும் இடங்கள் –
நேரம் இல்லாதவர்களுக்கு –
டிரெயிலரும், இந்தப் பாடல் காட்சியும் போதும் ….
முழு படமும் பார்க்க நேரமும், விருப்பமும் இருப்பவர்களுக்கு –
(ப்ரிண்ட் சுமார் தான்…!!! )
தேடலில் இருப்பவர்களுக்கு –
இதற்கு முந்தைய பகுதியை (4) பார்க்க விரும்புபவர்களுக்கு
லிங்க் –
https://vimarisanam.com/2021/06/06/%e0%ae%a4%e0%af%87%e0%ae
%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae
%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa
%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae
%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d-4/